எங்களைப் பற்றிய சில வரிகள்

மதநூல்கள்ல, புராணத்துல, வரலாத்துல மட்டுமில்ல, நிகழ்காலத்திலயும் கடவுள் இருக்கிறார், இயங்குறார்னு ஆணித்தரமா நம்புறவங்க நாங்க.

எங்களோட எழுத்துக்கள ஒங்க கண்ணால பாக்கனும்னு விரும்புகிறோம். ஏன்னா, எங்கள கண்ணாடியா போட்டு வாசிச்சா, ஒங்க பார்வ மாறிரும்னு சந்தேகப்படுறோம்.

நாங்க எழுதுறத நம்ப சொல்லல. நம்புனா எப்படி இருக்கும்னு கற்பனயாவது பண்ணி பாக்கச் சொல்றோம்.

நம்ம சனங்களோட பேச்சு மொழியயே எழுத்து மொழியா மாத்தி எழுதிருக்கோம். அதனால இலக்கணத்த தயவு செய்து பொருட்படுத்த வேண்டாம்.

கடவுள் அல்ல, அதிகாரத்தில இருக்குற அரசு தான் அத்தனையையும் தீர்மானிக்குதுன்னு முழுமையா நம்புறவங்க நாங்க.

தங்களோட சுய ஆதாயத்துக்காக மத நிறுவனங்கள், நூற்றாண்டு காலமா மக்களோட மனசில ஆழமா பதிச்சி வச்சிருக்கிற, கடவுள் ஒரு மந்திரவாதிங்கிற கான்செப்ட தூக்கி எறிய வைக்கிறது, அரசியல் மாற்றத்த கொண்டு வர்றதுக்கான முதன்மையான ஆன்மீக தேவைன்னு நம்புறோம்.

தமிழ்நாடு தான் எங்களோட உலகம். நாங்க பாக்குற அரசியல் களம். இந்த மண்ணுல பொறக்குற ஒவ்வொரு குழந்தைக்கும், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு இயல்பா கிடைக்கனுங்கிறது தான் எங்களோட கனவு.

இந்த மாற்றத்த இந்த மண்ணுல கொண்டு வர, எங்கேயோ இருந்தாலும், இந்த மண்ணுல பொறந்த நாங்க கண்டுபிடிச்ச ஒரு கருவி தான், இந்த கருக்கு மட்டை.

கருக்கு மட்டை கிராமத்தான்களின் அடையாளம் மட்டுமல்ல, ஆயுதமும் கூட. இருபுறமும் கிழிக்கக்கூடியது. காயப்படுத்த அல்ல, இந்த மண்ணையும் எம் மக்களையும் காப்பதற்காக, இயற்கை அன்னை வழங்கிய அற்புத வரம்.