புதுமை ஒரு Scandal

புதுமை ஒரு Scandal

புதுமை ஒரு Scandal

நவம்பர் 04, 2021

கடவுள் நம்பிக்கை

நீங்க புதும நடக்கும்னு சொல்றதுல இருக்குற Danger ஒங்களுக்கே புரியலன்னு நெனைக்கேன். நீங்க புதும நடக்குதுன்னு நம்புறீங்கன்னா, அடுத்தவங்களுக்கு போதுமான கடவுள் நம்பிக்க இல்லன்னு தீர்ப்பிடுறீங்க. கடவுள பாரபட்சம் பாக்கிற அநீதி செய்ற தலைவரா காட்டுறீங்க!

மத்தவங்கள விட என்னோட விசுவாசம் அதிகம்ன்னு தம்பட்டம் அடிச்சிக்கிறீங்க! அதவிட கொடும, கடவுள் நெனச்சா இயற்கை விதிகள புடிச்சவங்களுக்காக அழிச்சி அழிச்சி எழுதுவாருன்னு அளந்து விடுறீங்க!

அத விட கோரமானது, புதுமைங்க வழியா மனுசங்க செய்ற அத்தன அட்டூழியங்களயும் தொடர்ந்து ஆதரிக்கிற கட்சித்தலைவர்னு சொல்ல வாரீங்க! கிட்டத்தட்ட காலத்துக்கும் இரக்கச்செயல் செஞ்சு செஞ்சு, செஞ்ச பாவத்துக்கு எல்லாம் புண்ணியம் சம்பாதிக்க இது ஒரு நல்ல வழின்னு காட்டிக்கொடுக்க நெனைக்கிறீங்க?

ஆனா என்னோட வாதப்படி, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் புதும நடக்க வாய்ப்பு இல்லன்னு சொல்றேன். அத கடவுள் எப்பவும் செய்ய மாட்டாருன்னு சொல்றேன்.

ஒங்க வாழ்க்கையில நடக்கிற தற்செயலான அல்லது ஒங்க முயற்சியில/திறமையில நடந்தத அல்லது வாய்ப்பு கிடைச்சுதுனால நடந்தத அல்லது இயல்பா இயற்கையா நடந்தத புதுமயா பாக்கிறது, அத புதுமன்னு நம்புறது, ஒங்க தனிப்பட்ட நம்பிக்கன்னு சொல்றேன்.

அப்படியும் நீங்க ஒங்க வாழ்க்கயில நடந்தத உண்மையிலேயே கடவுள் செஞ்ச மேஜிக் புதுமன்ன நம்புனா, அது உண்மையிலேயே நடந்திருந்தா நீங்க ஒரு நிமிசங்கூட Selfish – ஆ ஒங்க வாழ்க்கையில இருக்க முடிஞ்சிருக்காதுன்னு சொல்றேன். அட்சயபாத்திரமாவே நீங்க மாறியிருப்பீங்கன்னு சொல்றேன்.

கடவுள் ஒங்களுக்கு புதும செஞ்சிட்டு Selfish – ஆ ஒங்களுக்கு மட்டும் வச்சி வாழ சொன்னாரா? கடவுள இத விட கேவலமா கடவுள நம்பாதவனே கேவலப்படுத்த முடியாதுங்க!

நீங்க சொல்ற மேஜிக்ங்கிற Miracle எதுக்குங்க நடக்கனும்? ஒங்களுக்கு இந்த ஒலகத்துல கடவுள் என்ன கொறய கொடுத்திருந்தாரு?

ஒங்க பசிய போக்க தேவையான அத்தனயயும் கொடுத்திருந்தாரு? தங்குறதுக்கு இவ்வளவு பெரிய பூமிய கொடுத்திருந்தாரு? ஒங்க ஒடம்புல நோய் எதிர்ப்பு சக்திய கொடுத்திருந்தாரு?

இத வச்சிட்டு சந்தோசமா வாழ தெரியாம பட்டா போட்டு எல்லாத்தயும் சீரழிச்சிட்டு, விதவிதமான நோய், பசி, பட்டினி அத்தனயயும் உருவாக்கிட்டு கடவுள் கிட்ட வேண்டுனேன், எங்களுக்கு புதும செஞ்சிட்டாரு, புதும செஞ்சிட்டாருன்னு சொல்றது, சின்னதம்பி படத்துல வர்ற பைத்தியக்காரன் சொல்ற மாதிரி இருக்குதுங்க!

அவரோட தொண இல்லாமலேயே நாம சந்தோசமா வாழ்றதுக்கு கொடுத்திருந்த எல்லாத்தயும் சீரழிச்சி சின்னா பின்னாமாக்கிட்டு புதுமைக்காக அலையுற நம்மளோட மடத்தனத்த என்ன சொல்லி அழுறது?

கொரங்கு கையில கொடுத்த பூமால கத தான். அதுலயும் ஏதோ இந்த நிமிசம் மட்டும் மனுசனோட அறிவ வச்சு தா இந்த உலகம் இன்னமும் இயங்கிகிட்டு இருக்குன்னு நெனைக்கிற அந்த பகுத்தறிவுங்கிற பைத்தியக்காரத்தனத்த நினைச்சா தாங்க சிரிப்பு சிரிப்பா வருது.

இவ்வளவு அநியாயங்கள மனுசங்க செஞ்சி முடிச்சி பிறகும் இந்த உலகம் இன்னமும் இயங்கிகிட்டே இருக்கிறதே கடவுளோட புதுமயினால தாங்க.

கடவுள புதும செய்ய நிர்பந்திச்சதே மனுசன் செய்யக்கூடாத தவற செஞ்சதுனால தான்னு சொல்றேன். கடவுள புதும செய்ய நிர்பந்திக்கிறத விட, வேற பெரிய Scandal ஒலகத்துல இருக்க முடியாதுன்னு குத்தம் சுமத்துறேன்!