கையறுந்த நிலையில் கடவுள்

கையறுந்த நிலையில் கடவுள்

கையறுந்த நிலையில் கடவுள்

நவம்பர் 06, 2021

கடவுள் நம்பிக்கை

கடவுளால தனிப்பட்ட மனுசருக்கு Special – ஆ நீங்க சொல்ற புதுமங்கிற மேஜிக் செய்ய முடியாதுங்க! ஏன்னா இயற்கை விதிங்கள மீறனும்! அத எப்படிங்க கடவுள் செய்வாரு?

அதே மாதிரி கடவுளுக்கு நீங்க மட்டும் புள்ள இல்லீங்க. இந்த ஒலகத்துல இருக்குற அத்தன பேரும் புள்ளைங்க!

கடவுள் கிட்ட பக்திப்பழமா இருக்குற ஒருத்தருக்கு கேன்சர் வந்துட்டுன்னு, அவருக்காக மட்டும் கடவுளால விதிங்கள மாத்த முடியாதுங்க! அவர மட்டும் பாதுகாப்பா கவசம் போட்டு காப்பாத்தவும் முடியாதுங்க. கதிர்வீச்சு பட்டா எந்த ஒடம்புனாலும் பாதிப்பு வரத்தாங்க செய்யும்!

கதிர்வீச்சுக்கு Expose ஆகிற ஒடம்போட நோய் எதிர்ப்புச் சக்தி இருக்குறத பொறுத்து தாங்க விளைவு இருக்கும். ஆரோக்யமா இருக்குற பல பேரு தப்புவாங்க. வயசு கூடுனவங்களுக்கு ஈசியா பாதிப்பு வரலாம். நாள்பட்ட வியாதிக்காரங்களுக்கும், எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கிறவங்களுக்கும் அம்புட்டு பாதிப்பும் வரும்.

மனுச ஒடம்பு ஒரு Natural Machine. இயற்கை விதிகளுக்கு உட்பட்டதுங்க. அதுக்கு ஆபத்து பெரும்பாலும் வெளியில இருந்து உள்ள வர்றதுல தான் இருக்கு. முடிஞ்ச வரைக்கும் போராடிப்பாக்கும். எதிரி அதுக்கும் மிஞ்சினவன்னா நம்ம ஒடம்பால என்னங்க செய்ய முடியும்?

கதிர்வீச்ச கடவுளாங்க படைச்சாரு? செயற்கைய கடவுள் உருவாக்கல, மனுசந்தானே உருவாக்குனான்?

அடிப்படையில ஒண்ண நல்லா புரிஞ்சுக்கிடுங்க! செயற்கைய வளர்ச்சின்னு நீங்க ஆதரிச்சதுனால நச்சுக்காத்து ஒங்க ஒடம்ப தாக்காம இருக்கப் போறதில்ல! இது வளர்ச்சி இல்லன்னு மல்லு கட்டி எதிர்த்து போராடுனதுனால, பாவம் பாத்து அது ஒங்க ஒடம்ப உட்டுடப் போறதுமில்ல!

இயற்கைக்கு கண்ணு மண்ணு தெரியாதுங்க. அதுக்கு எல்லா பேருமே ஒண்ணு தாங்க! இத சொல்றதுனால அறிவியல் வளர்ச்சிக்கு ஆதரவோ எதிர்ப்போ நா பேசல! விதிகளுக்குள்ள இப்படித்தா நடக்க முடியும்னு விளக்கிச் சொல்றேன்!

அப்படி பாதிக்கிறத கடவுளால தடுக்க முடியாதுன்னு சொல்றேன்! வெறுமனே எச்சரிக்கத்தா முடியும்!ன்னு சொல்றேன்.

வளர்ச்சின்னு நாம நம்புறத நோக்கி போகுறப்ப, நோய்ங்க, விபத்துங்க, காவுங்க தவிர்க்க முடியாததுன்னு சொல்ல வர்றேன்.

Support பண்ணுறோமோ Oppose பண்ணுறோமோ, இன்னைக்கு கண்ணுக்கு தெரியாத ஒருத்தன் பாதிக்கப்படலாம், நாளைக்கி அது நம்ம குடும்பத்துல கூட யாராவது ஒருத்தரா இருக்கலாம்! அப்படி சம்பவங்க நிகழ்றப்ப ஏத்து தான் ஆகனும்னு சொல்றேன்.

அந்த நேரத்துல மட்டும் கடவுள் கிட்ட மன்றாடுறதுனால ஒரு புள்ளிய கூட மாத்த முடியாதுன்னு சொல்றேன்.

பெரும்பாலனவங்க சேந்து தாங்க ஒத்துக்கிட்டோம்? நாட்டோட வளர்ச்சிக்காக எல்லாரும் ஓட்டுப் போட்டு சேந்து எடுத்த மக்களாட்சி முடிவு தானங்க இது!

இதுல கடவுள் மேல பழிபோடுறதுக்கு ஒண்ணுமேயில்லயே? ஏன்னா இது கடவுளோட முடிவு இல்லீங்க. நாங்களே முடிவு எடுத்துக்குறோம்னு கடவுள் கிட்டயிருந்து சுதந்திரத்த பறிச்சிகிட்ட நம்மளோட பகுத்தறிவோட முடிவுங்க அது. அதுக்கு கடவுள் என்ன செய்ய முடியும்?

ஆனாலும் இதுக்குள்ளயும் நமக்கு செய்ய முடியிறத நாம கேட்டாலும் கேக்காட்டாலும் எதையும் எதிர்பாக்காம செஞ்சு முடிஞ்சுட்டு, இறுதிப்போருக்காக களத்த தயார் செஞ்சிட்டு இருக்கிறவருங்க தாங்க கடவுள்.

தன்னோட புள்ளைங்க அத்தன பேருக்கும் சாப்பாடு கிடைக்கனும், அவுங்க நோயில்லாம சந்தோசமா சாகாம வாழனும். அவ்வளவு தாங்க கடவுள் இருக்காருன்னா, அவரோட எண்ணமா இருக்கும்!

நீங்க ஒங்க குடும்பத்துக்கு படியளக்கிறீங்க. கடவுளுக்கு இந்த ஒலகந்தானங்க குடும்பமே! நீங்க செய்யுறத தான அவரும் செய்ய நினைப்பாரு? அதுல அவருக்கென்னங்க பாகுபாடு?

ஒங்க மூத்த புள்ள வசதியாயிருந்து இளைய புள்ள கஷ்டப்படுறாருன்னா, ஒரு தாயா நீங்க என்ன நினைப்பீங்க?

நம்ம மூத்த புள்ள இந்த இளைய புள்ளைக்கி ஒதவி செய்ய மாட்டானா? அப்படித்தானங்க முடியிறவங்க கிட்ட கடவுளும், என்னோட ஏழைப்புள்ளைங்களுக்கு நீயாவது ஒதவி செய்ய மாட்டியான்னு எதிர்பாப்பாரு? காலத்துக்கும் இல்லீங்க, கொஞ்ச காலத்துக்கு மட்டுந்தான்.