எது கடவுள் நம்பிக்கை?

எது கடவுள் நம்பிக்கை?

எது கடவுள் நம்பிக்கை?

நவம்பர் 11, 2021

Miracles-ன்னு நீங்க நம்புறத கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்! ஒங்களுக்கே சிரிப்பு வரும்ங்க!

கடவுள் நம்பிக்கை

சாமி கும்பிட்டுட்டு இண்டர்வியுவுக்கு போயி ஒங்களுக்கு வேல கெடைக்கிறது புதுமையாங்க? அப்படின்னா அன்னைக்கி ஒங்க கூட இண்டர்வியு வந்த மத்த யாருமே சாமி கும்பிடலயா? அதனால தா அவுங்களுக்கு புதும நடக்கலயா? அதா ஒங்க கடவுள் நம்பிக்க வாதமா?

அது ஒங்க தனிப்பட்ட பார்வங்க. அது தா கடவுள் நம்பிக்கன்னு மத்தவங்க மேல திணிக்காதீங்க! கடவுள் கிட்ட வேண்டி ஆம்பிள புள்ள பொறந்தா புதும. அப்ப பொம்பிள புள்ள பொறந்தா புதும கெடயாததா?

கடவுள் தா கேக்குறவங்களுக்கு ஏத்தாப்ல கொழந்தய முடிவு பண்ணுறாரா? அதா நீங்க நம்புற கடவுளோட வேலயா?

மனவளர்ச்சியோட உள்ள குழந்த ஒங்களுக்கு பொறந்தா அது சாபம்? ஆனா, அடுத்தவங்களுக்கு பொறந்தா அவங்களால மட்டுந்தா சிறப்பா பாத்துக்கிட முடியும்னு கடவுள் Choose பண்ணி கொடுத்துட்டாருன்னு சொல்றது தா ஒங்க கடவுள் நம்பிக்கயா? அல்லது நீங்க பாவிங்கிறதுனால கடவுள் ஒங்களுக்கு அப்புடி ஒரு கொழந்த கொடுக்காம புதுமயா காப்பாத்திட்டாருன்னு சொல்ல வாரீங்களா?

ஒங்களுக்கு கொழந்த இருந்தா, கடவுள் நம்பிக்க அதிகம். அப்ப கொழந்த இல்லாத பொண்ணுங்க எல்லாம் சபிக்கப்பட்டவங்களா? அவுங்களுக்கு ஒங்க அளவுக்கு நம்பிக்க இல்லயா? அவுங்களுக்கு கடவுளோட அருள் இல்ல. ஒங்களுக்கு மட்டும் வழிஞ்சி ஓடுது. இல்ல?

எப்படிங்க ஒரு சக மனுசன ஒங்களோட வெத்துவேட்டு கடவுள் நம்பிக்கய தூக்கிப்பிடிச்சி மட்டந்தட்டி பேச முடியுது? அதவும் கடவுள் பேர சொல்லி?

பிரேயர் பண்ணி வண்டி ஓட்டுனதுனால, ஆக்சிடெண்ட் நடக்காம ஒங்க வண்டிய கடவுள் அற்புதமா காப்பாத்திட்டாரு! அதனால அன்னைக்கி ஆக்சிடெண்ட் ஆன எல்லாருமே பிரேயர் பண்ணாம வண்டி ஓட்டுனாங்களா?

பாத யாத்திரயா போய் ஆக்சிடெண்ட் ஆனவங்க எல்லாருமே ஒங்க வாதப்படி கடவுள் நம்பிக்க இல்லாதவங்க. அப்படித்தானே?

கடவுள கூப்புட்டு வௌயாண்ட விளையாட்டுல ஒரு டீம் Win பண்ணுனா புதுமையாங்க? அப்படின்னா அடுத்த டீம் பிரேயர் சரியா பண்ணலயா?

போட்டி டிராவுல முடிஞ்சா ரெண்டு பேரும் சிறப்பா பிரேயர் பண்ணுனாங்களா? மழ பெஞ்சா, அன்னக்கி வௌயாடுறது கடவுளுக்கே புடிக்கலியா? அதனால மழய அனுப்பிட்டாரா?

கொரோனாவுல நீங்க பொழச்சது புதும! அப்படின்னா செத்துப்போன எல்லாரும் பாவிங்க, உயிரோட இருக்குற நாம எல்லாரும் புனிதருங்க! இல்ல?

செத்துப்போனவங்களுக்கு விசுவாச கொற! கடவுள் அவுங்களோட செபத்த கேக்கல! இல்லன்னா, இது தான் கடவுள் அவுங்களுக்கு எழுதுன விதி அல்லது இது தான் கடவுளோட திருவுளம்! இதான ஒங்களோட கடவுள் நம்பிக்க வாதம்?

எப்புடிங்க இவ்வளவு மோசமா ஒங்களால சிந்திக்க முடியுது? குற்ற உணர்ச்சியே இல்லாம இப்படியெல்லாம் கடவுள் சார்பா வாதாட முடியுது?

ஒரு ஊர்ல ஒருத்தன் மழ வேணும்னு கேப்பான். இன்னொருத்தன் வேண்டாம்னு வேண்டுவான். இப்ப கடவுள என்ன பண்ண சொல்றீங்க? அவரு ரெண்டு பேருக்கும் கொடயாங்க புடிக்க முடியும்?

அறியாமையில இருந்தாலோ, மனசாட்சி இல்லாம இருந்தாலோ மட்டுந்தா இப்படி பேச முடியுங்க! கடவுள் நம்பிக்க இருந்தா ஊமையா தான் இருப்பீங்க!

நீங்க பாட்டுக்கு கடவுள பத்தி எல்லாம் தெரிஞ்ச ஞானி மாதிரி எவனோ எப்பவோ எதுக்காவோ சொன்னத உள்வாங்கிகிட்டு அடிச்சி விடாதீங்க! தேவயில்லாம முட்டுக்கொடுக்க முன்வராதீங்க!

ஏன்னா நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும், மத்தவங்களுக்கு முட்டுக்கொடுக்குறதுக்கும், கண்டிப்பா ஒருநாள் கணக்கு கொடுக்கனும்! அத மறந்துடாதீங்க. நாம செஞ்ச பாவத்த கரைக்கிறதுக்கே வழியில்ல. இதுல எதுக்குங்க எவனுக்காகவோ வக்காலத்து வாங்கிகிட்டு.