கடவுளா? கட்சித்தலைவரா?

கடவுளா? கட்சித்தலைவரா?

கடவுளா? கட்சித்தலைவரா?

நவம்பர் 12, 2021

புடிச்சவங்களுக்கு கேக்குறத கொடுத்துட்டு, புடிக்கலன்னு கழட்டி விடுறவருக்கு பேரு கடவுள் இல்லீங்க. நம்ம ஊரு திராவிட கட்சித்தலைவரு.

கடவுள் நம்பிக்கை

நம்பனும், புகழனும், அப்ப தா அவரு அள்ளி அள்ளி கொடுப்பாருன்னா அவர கடவுள்ன்னு சொல்ல முடியாதுங்க. நம்ம ஊர்ல இருக்குற Typical Local தாதான்னு தா சொல்ல முடியும்.

கடவுள் குறிப்பிட்ட ஆளுக்கு மட்டும் சலுக செய்யிறது தான் புதுமன்னு நீங்க நம்புனா, அந்த கட்சியில நாம இருந்தா தா கடவுள் புதும செய்வாருன்னா சொன்னா, அது விட வேற மடத்தனம் இருக்கவே முடியாதுங்க.

கடவுள் என்ன கட்சியாங்க நடத்துறாரு? யார்லாம் என் கட்சியில இருக்கீங்களோ, அவுங்களுக்கெல்லாம் ஒண்ணுமே ஆகாது, நீங்க என் கட்சியில இல்லன்னா ஒங்களுக்கு கஷ்டம் தான் வரும்னு, நாம நினைக்கிறதுக்கு? கடவுள தலையா வச்சு நாம தாங்க பல கட்சிங்கள நடத்திக்கிட்டு இருக்கோம்.

ஒரு கொழந்த போருக்குள்ள விழுந்து அஞ்சு மணி நேரத்துக்கு மேல கெடந்தா, மூச்சு வுட முடியாம செத்துரும்ங்கிறது அறிவியல்ங்க!

நீங்க அஞ்சு நாளு உருப்படியா ஒண்ணுமே செய்யாம உள்ளயே வச்சுகிட்டு, கடவுளே !கடவுளே!ன்னு அத்தன பேரும் வேண்டுனா, எல்லா இயற்கை விதிகளயும் ஒடைச்சிட்டுப் போயி மந்திரம் போட்டு காப்பாத்த வருவாருன்னு நெனைக்கீங்களா?

ஒங்களோட மடத்தனத்துக்கு கடவுள ஏ இதுல கோர்த்து விடுறீங்க? ஒங்களுக்கு தேவன்னா கடவள் வரனும், இல்லன்னா கண்ண மூடிக்கிட்டு இருக்கனும். இதான் நீங்க கடவுள் காட்டுற லட்சணமா? இதுல அந்த கடவுளுக்கு இரக்கமே கிடையாதுன்னு சாபம் வேற!

இந்த உலகத்துல அறிவியலும், பகுத்தறிவும் கடவுள நம்ப ஆதாரம் கேக்குது. நம்மளோட சமகாலத்து மதங்களோட ஆன்மீகம், கடவுள ஒரு மந்திரவாதியா மக்களுக்குக் கத்துக் கொடுக்குது. ஆனா ஒருத்தர் கூட, கடவுளோட ஞானம் செயல்படுற விதத்த இன்னமும் புரிஞ்சிக்க முயற்சி எடுக்காம நூத்தாண்டு புளுத்துப்போன பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கிட்டு இருக்குறோம்.

நாம அறிவியல நம்பலாம். பகுத்தறிவோட சிந்திக்கலாம். ஆனா இதுகள மூர்க்கமா நம்புறதும் முட்டாள்தனம் தாங்க. ஆன்மீகமும் வேணும் தாங்க. அதுக்காக அத குருட்டுத்தனமா நம்ப தேவயில்ல.

நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு. அது நம்ம நடுவுல சைலண்டா வேல செஞ்சுகிட்டு இருக்குங்கிறத உணர்றதுல தொடங்குறது தாங்க உண்மையான கடவுள் நம்பிக்க. மத்தது எல்லாமே வெறும் போலிங்க தான், அது ஆன்மீகமா இருந்தா கூட.

நீங்க எந்த மதத்துல வேணும்னாலும் இருங்க. ஏன், நீங்க கடவுள நம்பாதவங்களாவே இருங்க. கடவுள் ஒங்களுக்கும் தாய் தாங்க!

அதுக்காக நீங்களா நா தீக்குள்ள தான் குதிப்பேன்னு குதிச்சா, குதிக்கிறது முன்னால கடைசி நிமிசம் வர ஒரு தாயா கடவுளால எச்சரிக்க தாங்க முடியும்! சாமி படங்கள்ல பாக்குறறது மாதிரி நோ்ல வந்து காப்பாத்தல்லாம் முடியாதுங்க. அப்படி கடவுள் வந்து காப்பாத்தனும் நெனைக்கிறது தாங்க முட்டாள்தனம்.

ஒண்ண புரிஞ்சிக்கிடுங்க. நீங்க சாகுறதுக்காக கடவுள் ஒங்கள படைக்கல. ஆனா சாகுறதுன்னு முடிவெடுத்தா அது ஒங்களோட சுதந்திரம்! அந்த சுதந்திரம் சாபமா? வரமா? நீங்க தா சொல்லனும்.