குழந்தையும், கடவுளும்

குழந்தையும், கடவுளும்

குழந்தையும், கடவுளும்

நவம்பர் 15, 2021

நாம வாழ்ற காலத்துல பல பேருக்கு குழந்தயில்லாம இருக்கு. அதுக்கு யார் காரணம்? கடவுளோட சாபமா? தன்னோட பவர வெளிப்படுத்த அவரு நடத்துற நாடகமா?

கடவுள் நம்பிக்கை

கடவுளயே நம்பலன்னா, கடவுள் இல்லை, செபிக்கலன்னாலும் செய்வாரு

குழந்த பிறக்காததுக்கு அறிவியல்பூர்வமா ஆயிரம் காரணம் இருக்கலாங்க. ஆனா கண்டிப்பா கடவுள் கிடையாது. கடவுளோட சாபமும் கெடயாது! அதுக்கும், ஒங்க கடவுள் பக்தி குறைச்சலுக்கும் சம்பந்தமே கிடையாது. தேவையில்லாம நாலு வீணாப்போனவன் சொல்ற கதைகள நம்பாதீங்க.

குழந்த பிறக்காததுக்கு இருக்கிற காரணங்கள் சிலத, நீங்க தவிர்க்க முடியும். ஆனா பலது ஒங்க கன்ட்ரோல்லயே கெடயாது!

சாப்பாடு, வாழ்க்கை முறை, மாசான காற்று, மன அழுத்தம், சமூக நெருக்கடி – நம்ம உடம்புல குறைய ஏற்படுத்துது. ஒங்களோட மனசுல ஏற்படுற பாதிப்புகளும் ஒங்க ஒடம்புல மாற்றங்கள ஏற்படுத்துது. அத தனிநபரால ஒண்ணுமே செய்ய முடியாதுங்க.

ஒண்ணு மட்டும் உறுதியா சொல்ல முடியும். நம்ம சூழ்நிலை, உடல் நிலை, நம்மோட தேவை – இதுக்கு நடுவுல எவ்வளவு பெஸ்ட்டா நமக்குத் தர முடியுமோ, அத கடவுள் நீங்க கோயிலுக்கு போனாலும், போகலன்னாலும், முட்டுப்போட்டு செபிச்சாலும், செபிக்கலன்னாலும், கட்டாயம் செய்வாருங்க.

ஒங்க ஒடம்புல குழந்தை பிறக்கிறதுக்கான வாய்ப்பு இல்லன்னா, நீங்க தலகீழ நின்னு தண்ணிய குடிச்சு கடவுள் நம்பிக்க வச்சிருந்தாலும், எத்தன கோயில்களுக்கு பாதயாத்திர போனாலும் நடக்காதுங்க!

அதேபோல ஒங்க ஒடம்பால கொழந்தய பெத்துக்க முடியும்னா, நீங்க முட்டுப்போட்டு வேண்டுலன்னாலும், கடவுளயே நம்பலன்னாலும் ஒங்களுக்கு நடக்குங்க!

களமோ, சூழலோ கடவுளோட கட்டுப்பாட்டுல கிடையாதுங்க! தன்னோட சக்திய தனிப்பட்ட ஒங்களுக்காகப் பயன்படுத்தி மேஜிக் பண்ணி, Miracle செஞ்சு இந்த Natural Order – அ, கடவுள் சிதைக்கவும் மாட்டாருங்க!

ஆனா, இருக்குறதுக்குள்ள எப்படி ஒங்களுக்கு சிறப்பா கொடுக்குறத தான், அவரால செய்ய முடியும்! அதயும் ஆள் பாக்காம தான் செய்வாரு. நீங்க பக்திப்பழமா இருக்குறதுனால ஒங்களுக்கு சிறப்பு சலுகையோட கொடுக்க மாட்டாரு!

கடவுளுக்கு எல்லாருமே புள்ளைங்க தாங்க. ஆனா சந்தோசம் ஒங்க கிட்ட தாங்க இருக்கு! நீங்க அத புரிஞ்சிகிட்டா சந்தோசமா இருப்பீங்க, மத்தவங்க ஒங்கள பேசியே சாகடிச்சாலும்!

வெளிநாட்டுல புள்ளங்களே வேண்டான்னு அத்தன பேரும் இருக்காங்க! ஆனா நம்ம புள்ளங்களுக்கு அப்படி வாய்ப்பு இல்லன்னா, அத ஒரு சமுதாய சாபமாவே மாத்தி வெச்சிருக்காங்க! இதுக்கு கடவுள் என்னங்க செய்ய முடியும்?

உடல் ரீதியா ஒரு பெண்ணால கருத்தரிக்கிறது சாத்தியமே இல்லன்னா, கடவுளால ஒண்ணுமே செய்ய முடியாதுங்க. ஆனா, ஒரு விழுக்காடு சாத்தியமிருந்தாலும், ஒங்க சூழ்நிலையில வாய்ப்பு இருந்துன்னா, நீங்க கேக்காமலேயே ஒங்களுக்கு கொழந்தய குடுப்பாருங்க!

பொறக்குற கொழந்தயும் ஒங்க ஒடம்பு, மனசு, சுற்றுப்புறச் சூழல் இதுக்குட்பட்டுதாங்க பொறக்க முடியும்! அத தீர்மானிக்கிறது கடவுள் இல்லைங்க. நாமளும், நம்மோட உடல்வாகும் தான்.

நம்ம ஒடம்பும் ஒரு Programmed Machine – தாங்க! எல்லாமே உள்ளயே இருக்கு! அந்த Order – அ, கொழச்சா அதுக்கான விளைவுகள் தடுக்க முடியாதுங்க!

நீங்க காசு செலவழிச்சி நவீன மருத்துவம் செய்யலாம்! ஆனா அதுனால ஏற்படுற விளைவு நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதா அமைஞ்சாலும் சரி, நீங்க தாங்க முழுப்பொறுப்பு! அதுக்கும் கடவுள் பேர இழுத்து விடாதீங்க.

அதுலயும் எல்லாமே சக்சஸ் கெடயாதே? சக்சஸ் அவுங்க நோக்கமும் கெடயாதே? எதுலயும் நோக்கம் முக்கியம்லாங்க.