வேண்டுதல் பலிக்குமா?

வேண்டுதல் பலிக்குமா?

வேண்டுதல் பலிக்குமா?

நவம்பர் 16, 2021

கடவுள் கிட்ட வேண்டுனா கிடைக்குமா? நாம கேக்குறத கொடுப்பாரா? நாம வேண்டி, கடவுளோட மனச மாத்த முடியுமா?

கடவுள் நம்பிக்கை

கோயிலுக்குப் போறதுனால, கடவுளுக்காக விரதம், நம்புறதும் நம்பாததும், வேண்டினால் கிடைக்குமா?

கடவுள் மேஜிக் செய்ய மாட்டாருன்னும் நீங்க சொல்றீங்க. கடவுள் புதும செய்ய மாட்டாருன்னும் பேசுறீங்க?

அப்ப கடவுள் கிட்ட வேண்டுறதுனால என்ன பலன்? கோயிலுக்குப் போறதுனால என்ன லாபம்? பலன் இல்லன்னா, இதெல்லாம் எதுக்கு செய்யனும்?

ஏங்க, கடவுளாங்க ஒங்கள இதயெல்லாம் செய்ய சொன்னாரு? நீங்களா தானங்க இதயெல்லாம் செய்யுறீங்க. பின்ன எதுக்காக தேவயில்லாம கடவுள வம்புக்கு இழுக்குறீங்க?

வேணும்னா யார் ஒங்க கிட்ட, இதயயெல்லாம் செஞ்சா, கடவுள் மனசு எறங்கி, நீங்க கேட்டத, ஒங்களுக்குத் தேவையானத, ஒடனே கொடுத்துருவாருன்னு சொல்றாங்களோ, அவுங்கள பாத்து வௌக்கம் கேளுங்க. செய்ய சொன்னத செஞ்சும் எதிர்பாத்தது நடக்கலன்னா, விளக்கம் கேக்குறது தப்பில்லயே? அவுங்களும் இலவசமா ஒங்களுக்கு சொல்லி தரலியே? They are also professional, know?

நோன்பு, வேண்டுதல், தர்மம் செஞ்சா தான் கடவுள் ஒங்களுக்கு உதவி செய்வாருன்னு நினைச்சாலோ, இதயெல்லாம் செஞ்சாலே கேட்டத கடவுள் கிட்டயிருந்த வாங்கிடலாம்னு நம்புனாலோ, அது கண்டிப்பா ஒங்களுக்கு ஏமாற்றத்துல தான் முடியும்.

நீங்க தலைகீழ நின்னு நடந்தாலும் அது நடக்கவே நடக்காது. சுருக்கமா சொன்னா, ஒங்களுக்கு நடக்கிறது நடந்தே ஆகும். நடக்காதது நடக்கவே நடக்காது.

ஆதாரம் கேப்பீங்கள்ல? ஒங்க கண்ணு முன்னால இருக்குற, குழந்தைங்க இல்லாத அத்தனை பக்தியான பெண்களும் இதற்கான அத்தாட்சிங்க.

கடவுளுக்காக விரதம் இருந்ததுனாலயே நோய் வந்த பல பெண்கள் இதுக்கான மறுக்க முடியாத சாட்சிங்க.

இதுக்கு நோ் எதிரா, கோயில் பக்கமே போகாம, காலத்துக்கும் கடவுளயே எதித்து எதித்துப் பேசிட்டு, இன்னைக்கு அத வச்சியே உசரத்துல உக்காந்துகிட்டு, நம்மயெல்லாம் ஆட்டிப்படைக்கிற அத்தனை பேருமே நீங்க கேக்குற ஆதாரங்க. இதயெல்லாம் நீங்க ஒங்க வாழ்க்கையில பாத்திருப்பீங்க தானே? புத்தகத்துல படிச்சிருப்பீங்க தானேங்க? மறுக்க மாட்டீங்க தானே?

கண்ணு மண்ணு தெரியாம விரதம் இருந்தா ஒடம்புக்கு பாதிப்பு தான் வரும். நம்ம ஒடம்புங்கிறது இயற்கை விதிக்குள்ள செயல்படுற ஒரு மெஷின். இத இத செஞ்சா, இன்னென்ன விளைவுகள் நடக்கும்ன்னு கண்டுபிடிச்சு சொல்லுது அறிவியல். அதையெல்லாம் புறத்துல தள்ளிட்டு, இயற்கைக்கு எதிரா எல்லாத்தையும் செஞ்சிட்டு, நாளைக்கு கடவுள் மேல பலிய போடாதீங்கன்னு சொல்றேன்.

நீங்க அளவா செய்யுறதுனால இயல்பா, இயற்கையா, ஒங்க ஒடம்புக்கு, மனசுக்கு, ஆன்மாவுக்கு கிடைக்கிற, ஆன்மீகப் பலன்கள் கண்டிப்பா கிடைக்கும். But, ஒரு பிட்டு கூட ஆதாய பலன்கள் எக்ஸ்ட்ராவா கெடைக்கிறதுக்கு வழியே இல்லன்னு சொல்றேன்!

நீங்க வேண்டுனாலும் வேண்டாட்டியும் ஒங்களுக்கு நடக்கிறது ஒங்க ஒடம்போட இயக்கத்துக்கு ஏத்தாப்ல அதுபாட்டுக்கு நடந்துகிட்டே இருக்கும். அத எவராலயும் மாத்தி அமைக்கவோ மாத்தி எழுதவோ முடியாது.

ஒங்க ஒடம்ப வருத்தி அதனால கடவுள் சந்தோசப்பட்டு கொடுப்பாருன்னு நெனைக்காதீங்க. நூறு ரூபா உண்டியல்ல போட்டுட்டு, ஆயிரம் ரூபா எடுத்துறலாம்னும் கனவு காணாதீங்க. ஏமாந்துருவீங்க.

விடியக்காலம் எந்திரிச்சு, முட்டு போட்டு, கண்ணீர் வடிச்சு செபிச்சா அது கிடைக்கும், இது கிடைக்கும்னு யாராவது சொன்னா, அப்படி சொல்றவன் தான் சேடிஸ்ட்டே தவிர, கடவுள் கிடையாதுங்க.

ஒங்களுக்கு அது புடிச்சிருக்குன்னா செய்யுங்க. எதிர்பார்த்து செய்யாதீங்க. செய்யாம இருக்குறதுனால தேவயில்லாம குத்த உணர்ச்சியில நொந்து போகாதீங்க. கடவுளுக்கும் நீங்க செய்யுறதுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லீங்க!

அவரு கொடுக்குற நிலையில இருந்தா அவரே கொடுத்துருவாருங்க. நீங்க கண்டத செய்யனும்னு காத்திட்டு இருக்க மாட்டாருங்க. அவரு தான் இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டவருன்னு சொல்றேனே?

கடவுள் நாம சந்தோசமா வாழ்றதுக்குத்தான் இந்த ஒலகத்த படைச்சாரு. நம்மள கஷ்டப்படுத்துறதுக்கு இல்ல நாம தான் கஷ்டத்த இழுத்து வச்சுகிட்டு இருக்கோம்.

உதவி செய்யுங்க. ஆனா பலன் எதிர்பார்த்து செஞ்சா ஏமாந்துருவீங்கன்னு சொல்றேன். விரும்புனா செய்யுங்க.

புண்ணியத்துக்காக செய்யாதீங்க. புனிதமான எண்ணத்தோட செய்யுங்க. ஆனா எப்படி செஞ்சாலும் பலன் கிடைக்காதுங்கிறத தெரிஞ்சிகிட்டு செய்யுங்க.

இத செய்யலன்னா கடவுள் தப்பா நினைச்சிருவாரோ? ஒருவேள நான் விரதம் இருக்காததுனால தான், கடவுள் எனக்கு ஒண்ணுமே கொடுக்க மாட்டுக்காரோ? நான் இதயெல்லாம் செய்யாததுனால தான் என்ன இப்படி படாத பாடுபடுத்துறாரோ?

இப்படியெல்லாம் நீங்க பயப்படுறதுக்கு, ஒரு சில மனநலன் பாதிக்கப்பட்ட ஆன்மீகவாதிங்க, ஒங்கள நல்லா பயமுறுத்தி ட்ரெயின் பண்ணி வச்சிருக்கானுங்க. அவனுங்க பெரிய Psycho. கிட்ட போயிருராதீங்க.