தர்ம தேவதை

 தர்ம தேவதை

தர்ம தேவதை

நவம்பர் 17, 2021

பவர் இருந்தும் மக்கள காப்பாத்தாம, பாத்துக்கிட்டு இருக்குற கடவுள் எதுக்கு? இதுக்கு பேசாம அவரு ஒலகத்த அழிச்சிரலாமே?

கடவுள் நம்பிக்கை

கர்மா, இயற்கை விதி, பாவக்கணக்கு, மந்திர சக்தி, நீதி, ஒலகத்த அழிக்க

ஒங்க ஆதங்கத்துல இருக்குற வலி புரியுதுங்க! ஆனா, கடவுள ஒரு நிமிசம், தாய் ஸ்தானத்துல வச்சு பாருங்களேன்? நீங்க ஒரு தாயா இருந்து இந்த ஒலகத்த பாருங்களேன்.

நீங்க படைச்ச ஒலகத்த ஒங்களுக்கு அழிக்க மனசு வருமாங்க? ஒத்த வருசம் ஒரு வாடகை வீட்டுலயே நீங்க இருந்திருந்தாலும், அத காலி பண்ணறப்ப ஒங்க மனசு எம்புட்டு வலிக்கும்? அதே போல, ஒங்க பிள்ளைங்க தப்பு செஞ்சிட்டாங்கன்னா, அவங்கள காலத்துக்கும் ஒதுக்கியே வெச்சிருவீங்களா?

கடவுள் இந்த ஒலகத்த அழிக்கிறதுக்காங்க படைச்சாரு? நாமெல்லாம் காலத்துக்கும் கஸ்டப்படனும்னா படைச்சிருப்பாரு? மனுசங்க எல்லாரும் ஒத்துமையா காலத்துக்கும் சந்தோசமா வாழ்வோம்ங்கிற நம்பிக்கயில தாங்க படைச்சிருப்பாரு!

ஒரு குழந்தை பொறக்குறப்ப எத்தன பேரு பாத்து சந்தோசப்படுறாங்க. அந்த மாதிரி தானங்க மனுசங்கள படைச்சப்பயும், மொதல்ல கடவுள் உச்சி முகர்ந்து கொஞ்சியிருப்பாரு.

நீங்க Simple – ஆ விளையாட்டுப் புள்ள மாதிரி சொல்லிரலாம், கடவுள் ஒட்டுமொத்தமா இந்த ஒலகத்த அழிச்சிரலாமேன்னு. ஆனா அவரு கடவுள்ங்க. அதுக்கும் மேல நம்மளோட தாய்ங்க.

நீங்க கேக்கலாம், வேணும்னா கெட்டவங்கள அழிச்சிட்டு, நல்லவங்கள மட்டும் தன்னோட மந்திர சக்திய வச்சு காப்பாத்திர வேண்டியது தானே?

கடவுள் நினைச்சா இந்த ஒலகத்த அழிக்க முடியுங்க. ஆனா அழிச்சாலும் தப்பு செஞ்ச யாரயும் கடவுளாலயே காப்பாத்த முடியாதுங்க.

இயற்கைக்காக அவரு எழுதுன விதி, நாம செஞ்ச பாவத்துக்கான விலைய கேட்டே தீரும்ங்க! அத கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாதுங்க. வேணும்னா, ஒங்களோட புரிதலுக்காக, கடவுளுக்கும் நமக்கும் இடையில ஒரு தர்ம தேவதை இருக்குன்னு நெனைச்சிக்கிடுங்களேன்.

அந்த தர்ம தேவதைக்கு கண்ணு மண்ணு தெரியாது. எதிர்ல யாரு நிக்கான்னு பாக்காது. ஒங்க பாவக்கணக்க வச்சு, நீங்களே ஒங்க வாழ்க்கைக்காக எழுதுன தீர்ப்ப வாசிக்கும். ஒண்ணயும் மாத்த முடியாது. எழுதியது எழுதியதே! ஏன்னா வாழ்க்க ஒங்களோட சுதந்திரங்க. கடவுள் ஒங்களுக்கு தீர்ப்ப எழுத மாட்டாரு. நீங்களே தான் ஒங்களுக்கான தீர்ப்ப எழுதுறீங்க.

நம்ம கோர்ட்ல வாதாடுற மாதிரி நியாயப்படுத்துறதோ, பணம் கொடுத்து நீதிய விலைக்கு வாங்குறதோ முடியவே முடியாது. ஒங்களுக்காக யாரும் பரிஞ்சு பேசவே முடியாது. காலம் கடந்து போச்சுங்க. அப்படின்னா நாம செஞ்ச புண்ணியம்?

நீங்க செஞ்ச புண்ணியத்துக்கு மதிப்பே கிடையாதுன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேனே? செஞ்ச புண்ணியத்துக்கு பாவத்த கழிச்சுக்கிடலாமேங்கிற கூட்டல், கழித்தல் விதி அங்கின செல்லாதுங்க.

ஒங்க சிந்தனைக்குள்ள நீங்க யாரு?ங்கிற ஒங்களோட ஒரிஜினல் பிம்பத்த, இந்த தர்ம தேவத கிட்டயிருந்து கிட்டயிருந்து மறைக்கவே முடியாது.

அது தான் ஒங்களோட ஒரிஜினல் முகம். ஒங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச, கடவுள் மட்டுமே அறிஞ்ச ரகசிய முகம். இந்த ஒலகத்துல நீங்க மத்தவங்க முன்னால போடுறது எல்லாமே வெறும் Scene தான்.

இந்த தர்ம தேவதயோட கோர்ட் முன்னால நீங்க நிக்குறப்ப, ஒங்க படிப்பு, பதவி, அந்தஸ்த்துக்கு அங்கின Value, வெறும் பூஜ்யம் தான்.

தர்ம தேவதையோட கோர்ட்ல தன்னோட புள்ளக்கி அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சிருந்தும், காப்பாத்த முடியாம, இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டு, ஒரு தாய் ஒங்கள பரிதாபத்தோட தூரத்துல இருந்து பாத்துக்கிட்டு இருப்பாங்க. அதாங்க, நம்ம கடவுள்.

படிச்சிப் படிச்சி சொன்னேனடா? எத்தனை பேரு வழியா கத்துனேன்? திருந்துறதுக்கு எச்சரிச்சேன்?ன்னு மனசுக்குள்ள குமுறுவாங்க.

ஒன்ன இப்படி காலம்பூரா காவு கொடுக்கிறதுக்கா பெத்தேன்?ன்னு அழுது தீர்ப்பாங்க. ஆனா, நீதி தேவதைக்கு கண்ணு மட்டுமல்ல, காதும் கேட்காது.

செய்யுற ஒவ்வொரு தப்புக்கும் கணக்க சரிப்படுத்தியே ஆகனுங்க! ஒவ்வொருத்தனும் தன்னோட கர்மாவுக்கான விலய கொடுத்தே ஆகனும். வினை விதைத்தவன் வினை அறுத்தே தீரனுங்க? ஒங்க கடவுளாலேயே ஒங்கள காப்பாத்த முடியாதுங்க.

மண்ணுல அநியாயமா சிந்துற ஒவ்வொரு துளி ரத்தமும், கடவுள் கிட்ட தனக்கான நீதிய கொடுன்னு கத்துறப்ப, அதுக்கான விலய கொடுத்து தானே ஆகனுங்க. அதானேங்க நீதி?

ஒங்க பாவத்த தர்மம் செஞ்சோ, பூஜைங்க செஞ்சோ, ஒறுத்தல் செஞ்சோ கழிச்சிரலாம்னு கனவு காணாதீங்க. நீங்க எம்புட்டு பெரிய புனிதரா இங்கின இருந்தாலும், அங்கின வாய்ப்பில்ல ராஜா!