கிறிஸ்தவ மதவெறி அரசியல்

கிறிஸ்தவ மதவெறி அரசியல்

கிறிஸ்தவ மதவெறி அரசியல்

நவம்பர் 20, 2021

மதவாதச் சக்திகளுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவோம் என்று, தோ்தல் காலங்களில் மட்டுமே முழங்குகிற ஆயர்களின் நிலைப்பாடு மக்களுக்கானதா? சுயநலமானதா?

ஆன்மீக அரசியல்

மத நிறுவனம், சிறுபான்மை, போலி ஆன்மீகவாதிகளின், மதவெறியை

உண்மையில், மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு என்ற பெயரில், தோ்தல்களில் திருட்டு திராவிடத்துக்கு ஆதரவை வழங்கும் பாரம்பரிய மரபு, சாமான்யர்களின் உரிமையைக் காவு கொடுத்து விட்டு, இவர்களின் மத நிறுவனத்தை காக்க மட்டுமே எடுக்கிற சுயநலவாத முடிவே!

ஆட்சி நடக்கிற ஆண்டுகளில் கள்ள மௌனம் காத்துவிட்டு, தோ்தல் வருகிறபோது மட்டும் வீறுகொண்டு அறிக்கையிட்டு, திராவிட திருடர்களோடு மட்டுமே கைகோர்ப்பது, என்ன மறைபொருளோ, புரியவில்லை. மனமாற்றம் செய்யப் போகிறார்களோ?

மற்றவர்களை மதவெறி கொண்டவர்களாக சித்தரிக்கிற இவர்களே, தங்கள் மத நிறுவனம் சார்ந்த மக்களுக்கு, சிறுபான்மை என்னும் மதவெறியை ஊட்டி சிந்திக்க வைப்பது, என்ன பகுத்தறிவு லாஜிக்கோ புரியவில்லை.

நாசகார திட்டங்களாக, குற்றம் சாட்டப்படுபவைகளின் மூலப்பத்திரமே திராவிட கட்சிகள் தான். ஆனால், இந்த கொள்ளையர்களோடு தான், அந்த வெள்ளையர்கள் நிரந்தரமாக கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.

சேது சமுத்திர திட்டத்தை இயக்கியே தீருவோம் என்ற கூட்டணிக்கு முட்டுக்கொடுத்த இவர்கள் தான், இயற்கையைக் காப்பாற்ற உரோமையிலிருந்து அறிக்கையிடுகின்ற புனிதர்களின் வாரிசுகள். நவீன சூழலியல் போராளிகள்.

காற்று வீசுகிற திசையில் நாடகக் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிற திராவிடத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கிற இவர்கள் தான், இலங்கை இனப்படுகொலையை மறக்கவும், மன்னிக்கவும் பாடம் எடுக்கிற மறைக்கல்வி ஆசிரியர்கள்.

உண்மையில், இவர்களின் அறிக்கைகளும், நடவடிக்கைகளும் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிற கேவலமான ஆன்மீக அரசியலே!

தூத்துக்குடியில் 13 மக்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய திராவிட முதல்வர்களோடு சோ்ந்து, அந்த இரத்தக்கறை படிந்த சுவடுகள் காயுமுன்னே, சென்னையில் கிறிஸ்துமஸ் கேக் ஊட்டி மகிழ்ந்த இந்த சதிகாரர்களா, இறைவாக்கினர்கள் வேலையைச் செய்யப் போகிறார்கள்?

இடிந்தகரையில் அணு உலைக்கெதிராக போராடிய மக்கள் மீது, பொய் வழக்குகள் புனையப்பட்டதைக் கண்டித்து ஒருபுறம் வெத்து அறிக்கையும் வெளியிட்டார்கள், மறுபக்கம் அதே கூட்டணிக்கு ஆதரவுக்கரமும் நீட்டினார்கள். இது என்ன புளுத்துப் போன ஆன்மீகமோ புரியவில்லை.

சூழ்நிலைக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் கில்லாடியான திராவிடத்தின் அப்பட்டமான குள்ளநரித்தனம், பழுதின்றி இவர்கள் மீது கறையாக படிந்திருப்பதற்கான அப்பட்டமான சான்றே இது.

புரட்சிக்கருத்துக்களை புரட்சிகரமாக பிரசங்கங்களில் முழுங்குகிற இவர்கள் தான், சமத்துவ மொழி பேசிய தாயின் தலைக்கே ஜாதி மகுடம் அணிவித்து, வர்ணாஸ்ரம தர்மத்தைக் காக்கும் நசரேயனாக இருந்து வழிநடத்துகிறார்கள்.

டாஸ்மாக் கடையைத் திறந்து, குடிமகன்களின் வாழ்வை நரகமாக்கி, தமிழகத்தைச் சுடுகாடாக்கியதும் இவர்கள் பாசக்கரம் நீட்டி, நட்புறவோடு பழகுகிற திராவிட கூட்டணியே!

ஒருவேளை மறுவாழ்வு மையங்கள் மூலம் குடியைத் திருத்தி விடுகிற ராஜாக்கள் இவர்கள் மத்தியில் இருக்கிறார்கள் என்கிற கடவுள் நம்பிக்கை போலும்!

கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி திட்டிய இந்த திராவிட கொள்ளையர்களோடு தான், தங்களுடைய நேசக்கரத்தை காலத்திற்கும் நீட்டிக்கொண்டிருக்க இந்த கும்பல் தீர்மானித்திருக்கிறது.

விசுவாசத்தைப் பற்றிய கேள்வி அல்ல இது, அடிப்படை உணவு, உறைவிடம், மருத்துவம் இல்லாமல் வீதியில் இன்றைக்கும் போராடிக்கொண்டிருக்கும் எளிய, பாமர மக்களின் வாழ்வாதாரம் தொடர்புடையது.

குறைந்த தீமை என்று சப்பைக்கட்டி, ஏழைகளையும், எளியவர்களையும் வஞ்சித்து பிழைப்பது ஈனச்செயல் மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையின் ஆணிவேரையே, பிடுங்கி எறிய நினைக்கிற எகத்தாளச் செருக்கு.

தீமைகள் தலைவிரித்து ஆடுகிறபோது, கலியுகத்தில் இறைவன் அவதாரமாக பிறப்பெடுப்பது, வெறும் ஆன்மீகச் சிந்தனை அல்ல, கோடிக்கணக்கான பாரத மக்களின் நூற்றாண்டு கால கடவுள் நம்பிக்கை.

அன்றைய நாளில் இந்த போலி ஆன்மீகவாதிகளின் முகமூடிகள் கட்டாயம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று நினைப்பதே, மதவெறி கடந்த கடவுள் நம்பிக்கை.