திராவிட டிராமா கம்பெனி

திராவிட டிராமா கம்பெனி

திராவிட டிராமா கம்பெனி

நவம்பர் 26, 2021

புனிதராகிட புனித வாழ்க்கை வாழனுமே! அது கஷ்டமாச்சே?ன்னு நினைக்கிறீங்களா? கவலையை விடுங்க. ஒங்கள நாங்க ஆக்குறோம்.

ஆன்மீக அரசியல்

குற்ற உணர்வு, பாவத்த செஞ்சுட்டோமே, சிறுபான்மை, பகுத்தறிவு பூமி

செய்யக்கூடாத பாவத்த செஞ்சுட்டோமேன்னு வருத்தப்படுறீங்களா? விட்டுத்தள்ளுங்க. அது ஒரு பிரச்சனையே கிடையாது.

அப்பாவிகளோட சாவுக்கு காரணமாகிட்டேனே?ங்கிற குற்ற உணர்வு வாட்டுதா? பதட்டமே வேணாம் ஒங்களுக்கு. ஏன்னா, ஒங்க கவலையை போக்க நாங்க இருக்கோம். எங்கள ரோல் மாடலா பாருங்க! நீங்களும் புனிதர் தான்.

அதுக்கு என்ன செய்யனும்? Very simple. மொதல்ல வட நாட்டுல அனுமதிக்காத மோசமான ஆலைங்க அத்தனையையும், தமிழ்நாட்டுல சிவப்பு கம்பளம் விரிச்சி வரவேற்கனும். ஏன்னா இதான் பகுத்தறிவு பூமியாச்சே! பணத்த வாரி இறைச்சா வேலையாகுமே? வடநாட்டுக்காரங்க விரட்டுனா என்னங்க. திராவிடனுங்க நாம வரவேற்போங்க!

அடுத்தது நம்ம கம்பெனியை எதிர்க்கிற அத்தனை பேரையும் ஓட ஓட விரட்டனும். அத செய்றதுக்கு கைக்கடக்கமான ஸ்காட்லாந்து ஆட்க இருக்குறாங்க. நீங்க அல்லோல்படாதீங்க.

ஆட்டோவுக்கு தீ வச்சே தேன்கூட்ட கலைக்கிற கில்லாடி அபிராமிங்க அவங்க. NEET-ஆ வேலைய முடிப்பாங்க. அப்புறம் பொய் வழக்குகளைப் போடனும். அது நம்ம குள்ளநரிவம்ச திராவிடத்துக்கு கைவந்த கலையாச்சே!

இப்ப போராடுறவனுங்கள சமூக விரோதிகளாக சித்தரிக்க, கூத்தாடிகள வுட்டு பேச வைக்கனும். அத செய்ய நம்ம சிங்கங்களும், சிறுத்தைகளும் கண்ணசைவு உத்தரவுக்காக காத்திருப்பாங்க.

இப்பவும் மறுபடி மறுபடி வீதிக்கு வந்து போராடுனா, வெட்ட வெளியில, முன்களப்ஸ் முன்னிலையில தோசை சுடுறவன வெச்சி வெறிபிடிக்க சுட்டுத் தள்ளிருவோம்.

அதுல பாருங்க, கைக்கூலிக்கு சூரியன் இருக்கிறதுனால, நாம எப்பவுமே பிரகாசம் தான். ஒருவேளை பழையபடி கை மீறிப்போனா இப்ப கட்டுமரம் நம்ம கிட்ட இருக்க கவலை எதுக்கு?

கடைசியா, அத்தனையும் ஆடி அடங்கின பின்னாடி, நாம போட்டுத்தாக்குனவனோடு குடும்பத்துல யாருக்காவது ஒருத்தருக்கு ஒரு வேலைய கொடுத்தாலே போதும்.

சூரியனே! சந்திரனே! விடியலே! சாக்ரடீசே! பிடல் காஸ்ட்ரோவே! சேகுவாராவே!ன்னு, நம்மள புகழ்ந்து தள்ளிருவானுங்க. யாருன்னு கேக்குறீங்களா? நம்ம சிறுபான்மை காவலர்கள் தான்.

நம்மள ஒத்த நொடியில புனிதராக்கிருவாய்ங்க. உரோமைக்கே கூட்டிட்டுப் போயி, நமக்கு அங்கீகாரம் கொடுக்காங்கன்னா பாருங்களேன். போப் ஆண்டவரோட போட்டோ எடுத்த அடுத்த நிமிசமே, தமிழ்நாட்டுல நமக்கு தெய்வ சமாதி தான்.

கங்கை ஆத்துல முங்கி பாவத்த போக்குறது அந்த காலங்க. தாமிரபரணி ஆத்துல முக்கியும் புனிதராவுரது நம்ம காலங்க. எப்படி நம் அரசியல் சாணக்கியத்தனம்? குள்ளநரிக்கு பொறந்தது ஓட்டோி நரியாகுமா?

நீங்க வேணா பாருங்க, எத்தன எலக்சன் வந்தாலும், நம்ம சிறுபான்மை அறிவாளி மக்க பூரா சோ்ந்து, சிந்தாம சிதறாம ஒட்டு மொத்த ஓட்டையும் வாரி வழங்கி வள்ளல் பரம்பரன்னு நிரூபிச்சுக்கிட்டே இருப்பாங்க.

சல்லிக்காசு ஒழுக்கமில்லாம வாழ்ந்தாலும், அதிகாரத்துல இருந்து செத்தாலே, நம்ம ஊர்ல புனிதருங்க. வெள்ளத்துணி சகிதமா வந்து உச்சி முகர்வானுங்க ஒங்கள!

புனிதராக அணுக வேண்டிய முகவரி:

குறிப்பு:

ஆக உடன்பிறப்புகளே! கவலை வேண்டாம். விடியல் விடிந்து கொண்டே இருக்கிறபோதே, ஒன்றிணைவோம், புனிதராவோம்.