சொம்பு தூக்கும் ஊடகங்கள்

சொம்பு தூக்கும் ஊடகங்கள்

சொம்பு தூக்கும் ஊடகங்கள்

நவம்பர் 28, 2021

திராவிட கட்சிகளுக்கு சொம்பு தூக்குவதில் தமிழக ஊடகங்களை மிஞ்ச இதுநாள் வரை ஆளில்லை என்பதை, கிறிஸ்தவ வார இதழ் ஒன்று, சமீபத்தில் முறியடித்து சாதனை புரிந்திருக்கிறது.

ஆன்மீக அரசியல்

தமிழக ஆயர் பேரவை, மதவெறி, திராவிட சொம்புகளுக்கு, வர்ணாஸ்ரம தர்மத்தின்

Filter Coffee மாமாவின் காவி நிறமூட்டப்படும் அசத்தலான காப்பிகளால், சவலைக் குழந்தையாகவே கிடந்தாலும், திருட்டு திராவிடத்தின் செல்லப்பிள்ளையாக, "நம் வாழ்வு" என்கிற ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக்க வார இதழ், அரக்க பாம்பாக தமிழகத்தில் உலாவிக் கொண்டு திரிகிறது.

மாற்று அரசியல் பேசுவர்களை வரம்பு மீறிய வார்த்தைகள் கொண்டு விமர்சிப்பதையும், திருட்டு திராவிடத்திற்கு சிங்கி அடிப்பதையுமே பத்திரிக்கை தர்மமாக வைத்திருக்கிறது போலும், தமிழக ஆயர் பேரவை.

மன நலன் பாதிக்கப்பட்ட ஒருவரின் சிறுமூளையிலிருந்து ஒழுகும் இந்த வார்த்தைகளை, ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் குரலாக சித்தரிப்பதைக் காட்டிலும் கயமைத்தனமோ, காட்டுமிராண்டித்தனமோ இருக்க முடியாது.

ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் குரலாக எழுத துணிய, இந்த ஓட்டாண்டிகழுக்கு அதிகாரத்தைக் கொடுத்தவர் யார்?

ஆன்மீகம் பேச வேண்டிய பத்திரிக்கையில் அல்லது குறைந்தபட்சம் நடுநிலையோடு எழுத வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு துறையில், ஒருநாட்டின் பிரதமரை கிறிஸ்தவ மதவெறி என்னும் முகமூடி அணிந்து கொண்டு, கண்மூடித்தனமாக எதிர்ப்பதும், கீழ்த்தரமான கார்ட்டுன்களால் கேவலப்படுத்துவதும் என்ன புனித ஆன்மீகமோ தெரியவில்லை.

கடந்த கால வரலாற்றில், மதவெறி கொண்டு உலகம் முழுவதிலும் இவர்கள் அரங்கேற்றிய மாபாதக கொடூரங்களையும், பாவக்கறைகளையும் இவர்களே பாவ மன்னிப்பு கொடுத்து மறந்து விட்டார்கள் போலும்!

இந்திய நாட்டின் பிரதமரை போப்பாண்டவர் கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்கிறவராக வத்திக்கான் புகைப்படம் வெளியிடுகிறது. இங்கோ அவருடைய கண்களுக்கு கொரோனா மாஸ்க் அணிவித்து அவரை கேலிப்பொருளாக மாற்றுகிற இழிசெயலை தமிழக ஆயர் பேரவை, இந்த இதழில் அட்டைப்படமாக வெளியிடுகிறது. என்ன தான் உங்கள் கத்தோலிக்க மக்களுக்குச் சொல்ல வருகிறீர்கள்?

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று பேசித்திரிந்த, விஞ்ஞான திருடரின் அரசியல் சாணக்கியத்தனம் இவர்களுக்குள் ஆவியாக குடிபுகுந்து விட்டது போலும்!

ஒருபுறத்தில் உங்கள் சுயநலத்திற்காக ஒன்றுமறியா அப்பாவி சாமான்யர்களுக்கு மதவெறி ஊட்டி தூண்டி விடுவீர்கள். மறுபுறத்தில் நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு கொஞ்சி குலாவி உறவாடி மகிழ்கிறீர்கள்.

இங்கேயிருக்கிற கத்தோலிக்கர்களை உங்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களை காலத்திற்கும் அடிமையாக வைத்திருப்பது தான் உங்கள் இறையாட்சி கனவோ?

இந்த திராவிட சொம்படிகளுக்கு கிட்டப்பார்வையோ, நெட்டப் பார்வையோ தெரியவில்லை. ஆனால், குருட்டு கபோதிகளாய் இருந்தும், திருட்டு திராவிடத்திற்கு மட்டும் சரியாக விளக்கு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், இது மண்ணகத்திலோ, விண்ணகத்திலோ எவரும் செய்ய இயலாத அற்புத சாதனை தான்.

வர்ணாஸ்ரம தர்மத்திற்கு எதிராக இங்கே புனித பீடங்களில் ஏறி ஊளையிடுகிற இந்த Rome-பரிவார் கும்பல் தான், மேற்கத்திய வர்ணாஸ்ரம தர்மத்தின் முன்னால் ஐம்புலன்களையும் அடக்கி பரம சாதுக்களாய் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். சோற்றுக்கு வழியில்லாமல் போய்விடும் என்கிற கவலையோ, என்னவோ!

சபரிமலையில் பெண்ணியம் பேச துணைபோகும் இவர்கள் தான், இங்கிருக்கும் அருள் அன்னையர்களை கருவறை பக்கமே அண்டவிடாது, இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஆள நினைக்கும் புலிகேசி வகையறாக்கள்.

தின்பதற்கும், தூங்குவதற்கும் அனைத்தும் இலவசமாக கிடைப்பதால், ஏழைகளின் வாழ்க்கை வலி அறியாத இந்த அதிகாரவர்க்கத்தின் பல்லக்கு தூக்கிகள் பலருக்கும், தொப்பி அணிவது ஒன்றே இலக்கு.

ஆதிக்கத்திமிரையும், சாமான்யர்கள் கடவுள் நம்பிக்கையாக கொடுக்கிற அதிகாரத்திமிரையும் பயன்படுத்தி, எளியவர்களின் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கிற இவர்களின் முகமூடிகள் கிழித்தெறியப்படும் காலம் விரைவில் மலர வேண்டும்.

மேலும் இதழ் பற்றிய தொடர்புக்கு: Filter Coffee மாமாவை அணுகவும்.