ஆதாமும், ஏவாளும் புராணக்கதைகளா?

ஆதாமும், ஏவாளும் புராணக்கதைகளா?

ஆதாமும், ஏவாளும் புராணக்கதைகளா?

டிசம்பர் 04, 2021

மற்ற மதங்களின் புனித நூல்களை புராணங்கள் என்றும், கற்பனை கதைகள் என்றும் விமர்சிக்கிற பாஸ்டர்கள், ஆதாமும், ஏவாளும் புராணக்கதையின் ஹீரோக்கள் என்பதை அறிவார்களா?

கடவுள் நம்பிக்கை

Historicity of the Bible,Enuma-Elish,புராணம், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நினிவேயில், சமய நூல்கள்

கி.பி. 19 ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை, பைபிளே உலகின் மிகப்பழமையான புத்தகமாகவும், அதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மையான வரலாற்று நிகழ்வுகள் என்றும் நம்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பைபிளில் உள்ள கதைகளின் வரலாற்றுத்தன்மையை (Historicity of the Bible) உறுதிப்படுத்த பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் மெசபடோமியா பகுதிகளில் (modern-day Iraq, Kuwait, Turkey and Syria) மேற்கொள்ளப்பட்டது.

ஒருமுறை, பண்டைய நகரமான நினிவேயில், கி.மு. 668-627 ல் வாழ்ந்த மன்னர் Ashubanipal – நூலகத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கான களிமண் ஏடுகளை கண்டுபிடித்தனர். இந்த ஏடுகளுள் ஒன்றாக கண்டெடுக்கப்பட்ட சமய நூல்கள், ஆச்சரியம் தரும் விதமாக பைபிளின் ஆதாம், ஏவாள் கதையோடு ஒத்திருந்தது.

பைபிளில் உலகத்தைக் கடவுள் படைத்தது பற்றி சொல்லப்பட்டிருப்பவை அத்தனையும், பிற புராணக் கதைகளின் மரபுகளிலிருந்து கடன் வாங்கப்பட்டு, அதனை மூல ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவையே என்று ஊகிக்கப்பட்டது. உண்மையில், Enuma-Elish என்றழைக்கப்படும் இந்த பாபிலோனிய புராணக்கதைகளை தழுவியே, கடவுள் உலகத்தைப் படைத்த கதை பைபிளில் எழுதப்பட்டிருந்தது என்று, சான்றுபூர்வமாக விளக்கப்பட்டது.

ஆக, ஆதாமும், ஏவாளும் வரலாற்று மனிதர்கள் அல்ல. அவர்கள் கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டவர்களும் அல்ல. மாறாக, பண்டைய பாபிலோனிய புராணக் கதைகளிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்.

அது மட்டுமல்ல, ஒரே மாதிரியாக காணப்படும் கதைகள் (Archetype), பழங்காலத்தின் தொன்மையான மதங்கள் அத்தனையிலும் காணப்பட்டன. உதாரணமாக, இயேசுவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே நம் பாரதத்தில் வாழ்ந்த புத்தர் பற்றி, அவர் ஏராளமான நோயாளிகளை அற்புதமாக சுகப்படுத்தினார், தண்ணீரில் நடந்தார் என்று, புத்த பாரம்பரியத்தில் கூட சொல்லப்பட்டு வருகிறது.

அத்தோடு, புத்தரின் பிறப்பை வெள்ளை யானை ஒன்று முன்னறிவித்ததும், அந்த கணமே ஆவியாக தாயின் வயிற்றில் நுழைந்ததும், அவர் சிறந்த மகானாக இருப்பார் என்று அவருடைய பிறப்பு நேரத்தில் ஞானிகள் கணித்த கதையும் சொல்லப்பட்டிருக்கிறது.

சுருங்கக்கூறின், வாழ்வு தரும் மரம் (Tree of Knowledge), கன்னி குழந்தையைக் கருத்தாங்குவது (Virgin Birth), இறந்த மகான் உயிர்த்தெழுதல் (Resurrection) போன்ற ஒரே மாதிரியான கதைகள் (Archetype) யூத, கிறிஸ்தவ மதங்களுக்கு முந்தி இருந்த மதங்களிலும் இருந்தன.

மற்ற மதங்களில் சொல்லப்பட்டிருப்பதை புராணம், கற்பனை என்று கொச்சைப்படுத்துகிற இந்த பாஸ்டர்கள், முதலில் தங்களுடைய மத நூலின் மூலப்பத்திரத்தைப் பற்றிய அடிப்படை அறிவையாவது கொண்டிருக்க வேண்டும்.

எளிய மக்களின் கடவுள் நம்பிக்கையைச் சிதைக்கக் கூடாது என்கிற பெயரில், மக்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதே மூடத்தனமும், மூர்க்கத்தனமும் மிகுந்த இந்த பாஸ்டர்களின் நோக்கம்.

பைபிள் பற்றிய அறிவில்லா மந்தைகளின் தலையில், ஜென்ம பாவிகள் என்று முத்திரை பதிப்பதும், அரசியல் அறிவில்லா சாமான்யர்களின் முதுகில், திராவிடத்தை பச்சைக் குத்துவதும் என்ன புனித ஆன்மீகமோ? கடவுளுக்கே வெளிச்சம்.