மதவெறி கடந்த ஆன்மீகம்

மதவெறி கடந்த ஆன்மீகம்

மதவெறி கடந்த ஆன்மீகம்

டிசம்பர் 19, 2021

இவ்வளவு அநியாயம் இந்த உலகத்துல நடக்குது. கடவுள் என்ன தான் செஞ்சிகிட்டு இருக்காரு? அநியாயம் செய்றவங்கள ஏன் தண்டிக்க மாட்டுக்காரு? தண்டிச்சா தான மனுசங்க பயப்படுவாங்க?

கடவுள் நம்பிக்கை

மதவெறி, கடவுள் நம்பிக்கை, சக்தி, அரசியல் அதிகாரம், சுதந்திரம்

இது ஒங்க கேள்வியா இருந்தா, நா ஒங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கேங்க. நீங்க ஒருவேள இப்ப கடவுளா இருந்தா எப்படி செயல்படுவீங்க? பதில் சொல்லுங்க!

ஒங்களுக்கான விதிங்கள முதல்லேயே சொல்லிடுறேன். தமிழ்நாடு தான் ஒங்க களம். ஒங்க மந்திர சக்திய நீங்க பயன்படுத்த முடியாது. நீங்க ஒரு ஊமை. ஒங்களால யாரயும் பாக்கவும் முடியாது. ஏன்னா ஒங்களுக்கு ஒடம்பு கெடயாது. நீங்க பரந்து விரிஞ்சி கிடக்குற ஒரு சக்தி. நீங்க யாரோட மனசயும் மாத்த முடியாது, அது அவங்களோட சுதந்திரம். அது நீங்க ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த வரம். அத புடுங்க முடியாது.

ஒங்களோட பலம், தப்பு செய்யுற கடைசி செகன்ட் வர அது தப்புன்னு ஒருத்தனுக்கு ஒங்களால உணர்த்த முடியும். ஆனா கேக்குறதும் கேட்காததும் அந்த மனுசனோட சுதந்திரம். அவன கட்டுப்படுத்துற சக்தி ஒங்க கிட்ட கிடையாது. ரெண்டாவது, ஒருத்தனோட நினைப்ப ஒங்களால கச்சிதமா கணிக்க முடியும்.

சுருக்கமா சொல்லனும்னா, மனுசங்க யார் மேலயும் ஒங்களுக்கு கன்ட்ரோல் கிடையாது, யாரயும் கன்ட்ரோல் பண்ணவும் முடியாது. தப்ப உணர்த்த மட்டுமே ஒங்களால முடியும். கேக்குறதும், கேக்காததும் அவனோட சுதந்திரம்.

இப்ப தமிழ்நாட்டுல இருக்குறது மக்களாட்சி ஆட்சி முறை. இங்க இருக்குற அத்தன பிரச்சனைக்கும் தீர்வு ரொம்ப ஈசியா கொடுக்க முடியும். நல்லவர் ஒருத்தர முதல்வரா ஆக்குனீங்கன்னா போதும். ஆனா, அத செய்யுறது அவ்வளவு ஈசியில்ல.

சாராயக்கடைய நடத்துறவனுக்கும், இயற்கைய வித்து தின்னு நாசமாக்குறவனுக்கும், வரிப்பணத்த வழிச்சி நக்குறவனுங்களுக்கும் மட்டுமே காலத்துக்கும் ஓட்டுப்போற கொத்தடிமைங்க தான், தமிழ்நாட்டு சனங்க.

பட்டாலும், சுட்டாலும் திருந்த மாட்டாங்க. இவன் இப்ப திருந்திட்டான், இவனோட மவன் அப்படியில்ல, அவனோட பேரப்புள்ள சொக்கத்தங்கம்ன்னு, காலத்துக்கும் வியாக்கியானம் பேசிக்கிட்டு, நல்லவங்க நாலு பேரு நின்னாலும், கொள்ளையர்களுக்கே ஓட்டுப்போடுற கூட்டங்க.

இதுல என்னவொரு இன்ட்ஸ்ரஸ்டிங்கான செய்தின்னா, திருடர்களுக்கு போயி ஓட்ட போட்டுட்டு, வெக்கமோ, குத்த உணர்ச்சியோ இல்லாம, முழங்கால்போட்டு கோயில சுத்தி சுத்தி வருவாங்க.

பத்தாததுக்கு பூஜைக்கு பணத்த கொடுத்து, கடவுளே! எம் புள்ளக்கி ஒரு கொழந்த கொடு, கடவுளே! எம் புள்ளக்கி ஒரு வேல கொடு, கடவுளே! எம் புருசன குடியில இருந்து காப்பாத்துன்னு, மடிப்பிச்ச ஏந்தி நிப்பாங்க.

இவங்களுக்கு வழிகாட்டுற, மதத்த வச்சி ஆட்சி செய்யுற அயோக்கியர்களுக்கு, கடவுள் நம்பிக்கைய விட கலைஞர் நம்பிக்க அதிகம். Diplomacy - க்கு பெயர் போனவங்க. அதாங்க அதிகாரத்தில் இருக்கிறவங்களுக்கு சிங்கி அடிக்கிறதுல. மக்கள் நல்லா இருக்கனும்னு நினைக்கிறத விட, தன்னோட அதிகாரத்துக்கு பங்கம் வந்திரக்கூடாதுன்னு நினைக்கிற பரதேசிமாருங்க. சுயநலத்துக்காக சாமான்யங்கள காட்டிக்கொடுக்கவும், கூட்டிக்கொடுக்கவும் தயங்காத பச்ச துரோகிங்க.

இப்ப நீங்க கடவுள். நீங்க எப்படி செயல்படுவீங்க? எப்படி அரசியல் சதுரங்க ஆட்டத்த விளையாடுவீங்க? இங்க நடக்கிறத தீர்மானிக்கிறது அத்தனையும் அரசியல் அதிகாரம். அந்த அதிகாரத்த பிடிக்க மக்களோட ஓட்டு வேணும். ஆனா, ஒத்த ஓட்டக்கூட உருப்படியா போடத் தெரியாத படிக்காத பாமர சனங்க. அந்த ஒத்த ஓட்டயும் சுயநலத்துக்காக, தப்புன்னு தெரிஞ்சும் திருடங்களுக்கே போடுற படிச்ச முட்டாள்ங்க.

எதிரிகிட்ட மூர்க்கத்தனமான அதிகார பலம் இருக்கு. விதிகள மதிக்காம எப்படியும் கள்ள ஆட்டம் ஆடுவாங்க. ஒங்க காய்கள கண்டபடி வெட்டுவாங்க. ஆட்சிய மறுபடியும் பிடிக்கிறதுக்காக என்ன தகிடு தத்தத்தயும் செய்வாங்க. நீங்க சாக்கு போக்கு சொல்ல முடியாது, அவங்க ஒழுங்கா விதிங்கள மதிச்சி ஆடியிருந்தா நா செயிச்சிருப்பேன்னு ஒப்பாரி பாட்டு பாட முடியாது. என்னோட ஆளு மட்டும் நா சொல்ற இடத்துல நின்னிருந்தா நெனச்சத சாதிச்சிருப்பேன்னும் வியாக்கியானம் பேச முடியாது.

இது தான் ஒங்களோட களம். மிச்சம் மீதியிருக்கிற காய்கள வச்சி தான் நீங்க ஆடனும். இதுக்குள்ள தான் ஒங்களோட காய் நகர்த்தல் இருந்தாகனும். ஆனா, மாற்றத்த கொண்டு வரனும்னா, அதிகாரத்துல ஒங்க ஆள் ஒருத்தன உக்கார வச்சே தீரனும். ஒங்க ஆட்டத்துக்கு மீதியிருக்கிற இவங்கள்ள யாரயோ தான், ஆட்டத்துக்கான காய்களா choose பண்ணி தான் நீங்க ஆடனும்.

கடவுளே! கடவுளே! (நீங்க தாங்க அது) நீங்க எப்படி ஆடுவிங்க? நீங்க எப்படி செயல்படுவிங்க? யோசிச்சி தான் பாருங்களேன். ஒங்களால யோசிக்க கூட முடியாதுங்க.

ஆனா, இத்தனை தலைமுறைக்கும் ஆடாம, அசையாம, குத்துக்கல்லு மாதிரி உக்காந்துகிட்டு, மனுசன் தன்னோட முட்டாள்தனத்தால உலகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறப்ப எல்லாம் அடுத்த புள்ளிய வச்சி, தொடரும் போடுறாரு பாருங்க. அது தாங்க கடவுள்.

ஒங்களுக்கு கடவுள பத்தி மூடநம்பிக்கை இருந்தாலும் இத புரிஞ்சிக்க முடியாது, கடவுள பத்தி மூர்க்கத்தனமான நம்பிக்கை இருந்தாலும் இத புரிஞ்சிக்க முடியாது. அது தாங்க மதவெறி கடந்த ஆன்மீகம். மத நிறுவனங்களைக் கடந்த கடவுள் நம்பிக்கை.