நல்லவர் யார்?

நல்லவர் யார்?

நல்லவர் யார்?

டிசம்பர் 21, 2021

இவங்க நல்லவங்க! இந்த தங்கமான மனசுக்காரங்களுக்கு, கடவுள் இவ்வளவு கஷ்டத்தை கொடுத்திருக்கக்கூடாது. கடவுளே கதின்னு கிடந்த இவங்களுக்காவது கடவுள் கருணை காட்டியிருக்கலாமே?

கடவுள் நம்பிக்கை

நல்லவரு, கெட்டவரு, பாவ மூட்டை

கடவுள் கஷ்டத்தை கொடுக்கிறவரு கிடையாது. இத ஏற்கெனவே நீங்க வாசிச்சிருப்பீங்க. கடவுள் வச்சிகிட்டும் வஞ்சனை பண்ணல. ஏன்னா, அவரு மந்திரவாதியும் கிடையாது. கடவுள புரிஞ்சிக்கிறதுக்கான அடிப்படை இது தான்னு பலமுறை சொல்லியிருக்கோம்.

இப்ப அடுத்ததா, எப்படிங்க ஒருத்தர் நல்லவரு, இன்னொருத்தர் கெட்டவருன்னு நீங்க முடிவுக்கு வந்தீங்க? ஒருத்தருக்கு கேரண்டி கொடுக்கிற அளவுக்கு ஒங்களுக்கு தைரியம் இருக்குதுன்னா, உண்மையிலேயே நீங்க ரொம்ப தைரியசாலிங்க.

ஆனா, ஒருத்தர நல்லவங்களா பாக்கிறதும், கெட்டவங்களா வெறுக்கிறதும் ஒங்களோட தனிப்பட்ட பார்வங்க. அது நெஜமா தான் இருக்கனும்னு கேரண்டி கிடையாதே?

நீங்க என்ன, அவுங்களோட பொறப்புல இருந்து கடைசி வர கூடவே இருந்தவங்களா? அவங்களோட மனசுல இருக்குற அத்தனயும் ஒங்களுக்கு அத்துப்பிடியா? அவங்க வாழ்க்கையில செஞ்ச ஒவ்வொண்ணயும், கூட இருந்து கணக்கு எடுத்துக்கிட்டு வாறீங்களா?

ஒருவேள, ஒங்க கணக்கு தப்புன்னா, அவங்க செஞ்ச எல்லா தப்புக்கும் நீங்க தாங்க பொறுப்பு எடுத்துக்கணும். அந்த பாவ மூட்டையும் ஒங்க தலையில தாங்க வந்து விழும். அதயும் ஏத்துக்க தயாரா இருக்கீங்களா? ஒங்கள பத்தியே ஒங்களுக்கு முழுசா தெரியாது. நீங்க ஏ அடுத்தவங்களுக்காக வாதாட வாரீங்க?

மொதல்ல, கடவுள தவிர ஒலகத்துல நல்லவங்க யாருமே கெடயாதுங்க. அதயாவது உண்மைன்னு நம்புவீங்களா? அல்லது அதுக்கும் ஒங்களுக்கு Proof கொடுக்கனுமா? அடுத்தது, இங்கின நடக்கிறதுக்கும் கடவுளுக்கும் சம்பந்தமே கிடையாது. ஒலகத்துல நடக்கிற அத்தனைக்கும் மனுசங்க தான் காரணம். கடவுள் கிடையவே கிடையாது.

அரசியல் கட்சிக்காரங்க காசுக்காக மாறடிக்கிராங்க. மத நிறுவனத்தோட தலைவருங்க, பதவிக்காக காவடி எடுக்கிறாங்க. அவங்களுக்கு அதுல ஆதாயம் இருக்குது. அதனால கண்டதையும் பேசுறாங்க. பணம், பதவி, அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் அவங்க தயார்.

நீங்களும் அடுத்தவங்களுக்காக பேசி ஆதாயம் தேடனும்னு நெனைச்சா தாராளமா பேசுங்க. அப்படின்னா அதுக்கான அத்தனை விளைவுகளையும் இப்பவோ, எப்பவோ வாங்கிக்கிறதுக்கு தயாரா இருக்கனும். இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்குன்னு நீங்க சிரிக்கலாம். அப்படி நடந்தா நீங்க அதுக்கு ரெடியா? ஆமாம்னா தைரியமா பேசுங்க. ஒருவேள நடந்தா அப்புறம் பொலம்பக்கூடாது.

அடுத்தவங்க கத ஒங்களுக்கு எதுக்குங்க? ஒருத்தரோட ஒங்களுக்கு அறிமுகமான முகத்த மட்டும் வச்சு ஒரு முடிவுக்கு வராதீங்க. அப்படியே அவுங்க நல்லவங்களா வாழ்ந்திருந்தாலும், அது கடவுளுக்கும், அவங்களுக்கும் உள்ள வாய்தா. நீங்க ஏ மூணாவது ஆளு, தேவையில்லாம ஒங்க மூக்க நொழைக்கிறீங்க?

அப்படியே அவருக்கு நடந்தது அநியாயம்னா, கடவுள் அவருக்கான நியாயத்த கொடுக்கப் போறாரு! நீங்க ஏ தேவயில்லாம அடுத்தவங்களுக்காக தலய கொடுக்கனும்? கொடுக்கலாம், அது ஒங்க சுதந்திரம். ஆனா, விளைவுகளயும் ஏத்துக்க தயாரா இருக்கனும்.

ஒங்களுக்கான நியாயம் வேணுமா? கடவுள் கிட்ட கேளுங்க. ஆனா, ஒருமுறைக்கு நாலுமுறை ஒங்களப் பத்தி நல்லா யோசிச்சிட்டு கடவுள் கிட்ட நியாயம் கேளுங்க. கடவுள் கிட்ட கேக்குறதுக்கு ஏதாவது தகுதிய வச்சிருக்கீங்களா? இல்லன்னா கிழியப் போறது ஒங்களோட டங்கு வாராத்தான் இருக்கும்.

புரியாத, புரிஞ்சுக்க முடியாத விஷயத்துல நீங்க தலயிடுறது தேவயில்லாததுங்க! ஒருத்தர பத்தி சுத்தமா தெரிஞ்சவங்க ரெண்டே ரெண்டு பேரு. ஒண்ணு அவரு, இன்னொன்னு கடவுள்.

வாழ்க்கய நல்லா புரிஞ்சிருந்தா, கடவுள் முன்னால நீங்க வாயே திறக்க மாட்டீங்க. ஏங்க, ஒங்களுக்கு பிடிச்சவங்க எல்லாருமே நல்லவங்களா? ஒங்களுக்கு ஒதவி செய்யிற எல்லாருமே புனிதவான்களா?

ஒங்கள சுத்தியிருக்கிறவங்க பண்றது தப்புன்னு நெனைச்சீங்கன்னா, நீங்க எடுத்துச் சொல்ற அளவுக்கு, எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ற தகுதி இருக்குன்னா, அது ஒங்க பொறுப்புன்னா Advice பண்ணலாம், இன்னும் நெருக்கமானவங்கன்னா கண்டிச்சி சொல்லலாம்! கேக்கலன்னா, ஒங்க வேல அத்தோட முடிஞ்சிதுங்க!

உண்மையிலேயே, கடவுள நம்புறீங்கன்னா, அடுத்தவங்கள பத்தி ஒரு வார்த்த பேச மாட்டீங்க! அப்படியே பேசுனாலும், பேசுற அத்தன பேச்சுக்கும் பொறுப்பேற்கிற தைரியம் ஒங்க கிட்ட இருக்கும். மாட்டிக்கிட்டா அடுத்தவங்கள கைநீட்டிட்டு எஸ்கேப் ஆக மாட்டீங்க.