கடவுள் பேச மாட்டாரு

கடவுள் பேச மாட்டாரு

கடவுள் பேச மாட்டாரு

அக்டோபர் 10, 2021

கடவுள் நம்பிக்கை

நீங்க ஏ கோயிலுக்குப் போறீங்க? நீங்க ஏ நேர்த்திக்கடன் செய்றீங்க? நீங்க ஏ பாத யாத்திரை போறீங்க? நீங்க ஏ வெரதம் இருக்கீங்க?.... கடவுள் மேல அவ்வளவு பாசமாங்க ஒங்களுக்கு???

நீங்க எதுக்காக போறீங்கன்னு நா சொல்லட்டாங்க? ஒங்க தேவைய எப்படியாவது, குறுக்கு வழியிலயாவது, நிறைவேத்தனும்ங்கிறதுக்காக, இதயெல்லாம் செய்றீங்க. அதுல தேவையும் இருக்கலாம், ஆசையும் இருக்கலாம், பேராசையும் இருக்கலாம்.

கடவுள் வாய தொறக்க மாட்டாருங்கிறதுக்காக, உங்க இஸ்டத்துக்கு நீங்களா, அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கன்னு கண்டத செஞ்சிட்டு, நெனச்சது நடக்கலன்னா, கடைசியில, எல்லா பழியையும் கடவுள் மேல தூக்கிப் போடுறது, என்னங்க நியாயம்?

நம்மளோட எல்லா பிரச்சனைக்கும் நாமளும், அடுத்தவனும் தான், காரணம்ன்னு நமக்கே தெரியுங்க! ஆனா, நாம ஒருநாளும் நம்மள குத்தம் சொல்ல மாட்டோம். அடுத்தவ மேல பழி போட்டா, அவன் சண்டக்கி வந்துருவான். அதனால, ஊமையா இருக்கிற கடவுள் மேல, சாவகாசமா எல்லா பழியயும் தூக்கி மொத்தமா போட்டு தாக்கிர்றோம்!

கடவுள் இருக்காரா? இல்லையா?ங்கிறத கூட சந்தேகப்படுற நமக்கு, ஒன்னுல மட்டும் “ரொம்ப” Strong – ஆன நம்பிக்க.... அது, கடவுள் பேச மாட்டாரு.

“அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?”ங்கிற தைரியம் தாங்க, மனுசங்கள ‘துணிஞ்சி’ தப்பு செய்ய வைக்குது. ஆனா, அதுவும் நம்ம காலத்துல மறுக்க முடியாத உண்மைதானே? கடவுள் வரலாத்துல பேசுனாங்க, புராணத்துல பேசியிருக்காங்க, கதையில பேசுனாங்க, கனவுல பேசுனாங்க, கற்பனையில பேசுனாங்க! ஏன், இதிகாசத்துல கூட பேசியிருக்காங்கன்னு படிச்சிருக்கோம்.

ஆனா, நாம வாழ்ற நிகழ்காலத்துல எந்த கடவுளும் நேரடியா இதுவர பேசுனதில்லயே? பகுத்தறிவு கேட்ட எந்த கேள்விங்களுக்கும் பதில் சொன்னதில்லயே?

அதனால பகுத்தறிவான கேள்வி கரெக்ட் தானுங்க! ஆன்மீகத்தோட நெத்திப்பொட்டுல ஆணி அறஞ்சாப்ல கேட்ட கேள்விதாங்க! மறுக்க முடியலியே? இதுவர பேசாத கடவுள், இனிமே வந்தா பேசப் போறாருங்க?

ஆனா ஒண்ணே ஒண்ணுங்க, இனிமேயும் பேசமாட்டாருன்னு, 99.9 விழுக்காடு கேரண்டி கொடுக்கலாம். 100க்கு 100 கொடுக்க முடியாதுங்க! இன்னும் .1 விழுக்காடு “அம்பாள் பேச வாய்ப்பு இருக்குதுன்னு” நம்புறது தாங்க கடவுள் நம்பிக்க.

எப்ப “அம்பாள் பேசுறாங்களோ” அந்த நொடியில, அந்த ‘பகுத்தறிவு கேள்வி’ Zero ஆகிரும். ஆன்மீகம் .1 ல இருந்து, 100 க்கு ஒரு நெடியில எகிரிரும்...

ஆனா, அறிவியல் தலகீழா நின்னு தண்ணிய குடிச்சாலும் 99.9 ஐ, தாண்ட முடியாது. அதே நேரத்துல, எந்த நேரமானாலும் ‘புஸ்வானமா’பூஜ்யமா போகலாம்.

அந்த Moment – ல தொடங்குறது தாங்க "கடவுள் நம்பிக்க". இதான் மனுசனோட அறிவுக்கும், கடவுளோட ஞானத்துக்குமான எட்டாத தூரம்.