தர்மம் வென்றே தீரும்

தர்மம் வென்றே தீரும்

தர்மம் வென்றே தீரும்

ஜனவரி 5, 2022

கர்ணன் திரைப்படத்தின் கதை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொடியன்குளம் கிராமத்தில் காவல்துறையினால் அரங்கேற்றப்பட்ட வன்முறையைப் பதிவிடுவதாக சொல்லப்படுகிறது.

நாட்டு நடப்புகள்

இந்த சம்பவம் நடந்தது 25 ஆண்டுகளுக்கு முன்னதாக. இந்த சம்பவத்தை திரைப்படத்தில் பார்த்து உச் கொட்டி, தரமான படம் என்று சான்று பகர்ந்த எல்லா ஊடகங்களும், சம்பவம் நடைபெற்றபோது பெட்டிப்பாம்புகளாகத்தான் அடங்கிக்கிடந்தன. காரணம், பயம், பணம், அதிகாரத்தின் திமிர்.

இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டியவரை, பதவிக்கு சிறிதும் தகுதியில்லாத செருக்கு கொண்டவரை, நாம் வாழ்கிற இந்த இண்டர்நெட் தலைமுறையே இரும்புப்பெண்மணியாக பார்க்கிறபோது, அடுத்த தலைமுறைக்கு சொல்லப்படும் வரலாறு, அவரை கடவுளின் அவதாரமாகவே மாற்றிவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இது தான் வரலாறு எழுதப்படும் முறை.

வரலாறு என்பது நடந்த நிகழ்வின் தொகுப்பு அல்ல, உண்மையும் அல்ல. ஆட்சியாளர்களால் தங்களுடைய அடிவருடிகளை வைத்து புனையப்படும் ஒரு கட்டுக்கதை.

வரலாறு எழுதியாயிற்று. விசாரணை முடிந்தாயிற்கு. அதிகாரத்துக்கு சாதகமாக தீர்ப்பு எழுதியாயிற்று. இனிமேல் புதைக்கப்பட்ட உண்மை எப்படி வெளியே வரப்போகிறது? என்று நல்லோர் ஆதங்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், உண்மை மூடி மறைக்கப்பட்ட அதே மண்ணிலிருந்து தான், 25 ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த எளிய மக்களின் தீராத ரணத்தை, பார்க்கிறவர்களின் உணர்வுகளுக்காக சென்று துளைக்கிற அற்புதமான திரைப்படம் வழியாக, கால தேவதை கருத்தரித்திருக்கிறாள்.

அது தான் கடவுளின் அற்புதம். உண்மை ஒருநாள் வெல்லும் என்கிற ஆன்மீக தத்துவம். உண்மை இப்போதும் வென்றுவிடவில்லை. ஆனால், எழ ஆரம்பித்திருக்கிறது, இதற்கே திராவிட ஆதிக்கவர்க்கம் கதிகலங்கி கிடக்கிறது. ஏனென்றால், கொடியன்குளம் வந்தால் தாமிரபரணி- மாஞ்சோலையும் திரைப்படமாக வரலாமே? வந்தால் குருமா கைக்கடக்கமாக இருக்கிற தைரியம் இருந்தாலும், நீண்ட கால பிழைப்பு நடத்த முடியாதே?

எந்த கருவியைக் கொண்டு திராவிட கொள்ளைக்கும்பல் பாமரர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி தமிழக அரசியலை காவு கொண்டதோ, அதே கலையே இன்றைக்கு இவர்களுக்கு எமனாக வந்து நிற்கிறது.

அதையும் சாதகமாக்க, சகுனிகளை வைத்து ஜெய்பீம் இயக்கி, அழுகை டிராமா நடத்தி சாதுர்ய நாடகமாடினாலும், இன்னும் நீண்ட நாளைக்கு இதே டிராமா கம்பெனியை நடத்த முடியாது என்பதால், சினிமாத்துறையையே வளைத்துப் போடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

கடவுள் மந்திரவாதி அல்ல, கடவுள் மாயாஜாலம் நிகழ்த்துகிறவர் அல்ல, அநியாயம் நடக்கிற இடங்களுக்கு எல்லாம் சென்று, கண்முன்னால் தோன்றி, தடுக்கிறவரும் அல்ல.

ஆனால், இந்த மண்ணில் நடமாடும் ஒவ்வொரு மனித உயிரின் வலியையும், ரணத்தையும் உணர்ந்து கொண்டே இருப்பவர். உன்னதமான பல ஆன்மாக்களின் இயலாமை வலியை இணைந்து அனுபவிக்கிறவர். அந்த மௌன உணர்வு ஒருநாள் வெடித்தே தீரும்.

கீழ வெண்மனி படுகொலை நடந்த போது ஆட்சியில் இருந்தவர், வரலாற்றில் பேரறிஞராக புனையப்படலாம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போராடிய எளிய மாணவர்களைச் சுட்டுக்கொன்றவர் தூய்மைக்கு இலக்கணமாய் துதிபாடிகளால் துதிக்கப்படலாம்.

வாக்களித்த பாமரர்களை ஏமாற்றிவிட்டு, கட்சியைக் காப்பாற்ற டெல்லி சென்ற சுயநலவாதி, கர்ம வீரராக அயோக்கியர்களால் போதிக்கப்படலாம். சோற்றுக்கு வழியில்லாமல் கிடந்த கூத்தாடிகளை எல்லாம் புரட்சி செய்தவர்களாக ரசிக குஞ்சுகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி, வரலாற்றை பொய் கதையாக்கலாம்.

ஆனால், உண்மை ஒருநாள் வெளியில் வரும். மூடிய கதவுகள் ஒருநாள் திறந்தே தீரும். புதைக்கப்பட்ட அத்தனை உண்மைகளும், தோண்டியெடுக்கப்படும். அது தான் கடவுள் இருக்கிறார் என்பதை, வரலாறு உணர்ந்ததற்கான அழியாச்சான்றாய், புராணமாய் ஆன்மீகத்தால் பதியப்படும்.