ஆன்மீகத்தின் தந்திர அரசியல்

ஆன்மீகத்தின் தந்திர அரசியல்

ஆன்மீகத்தின் தந்திர அரசியல்

ஜனவரி 8, 2022

கடவுள் இல்லன்னு நாங்க சொல்லல. ஆனா, தமிழ்நாட்டுல இருக்குற மத நிறுவனங்கள், நம்பிக்கைங்கிற போ்ல சொல்லிக் கொடுக்குறது எல்லாமே பிராடுத்தனம்னு சொல்றோம். வியாபாரத்துக்காக அவுங்க பண்ணுற பக்கா உருட்டல்ன்னு சொல்றோம்.

ஆன்மீக அரசியல்

கடவுளோட திருவிளையாடல், ஆன்மீகவாதிங்க, ஏழை, ஆழ்துளை குழி

ஒங்களுக்கு தெரியாமயே, ஒங்கள பலிகடாவா வச்சி, அவங்க பல கேடித்தனமான அரசியல் செய்றாங்கன்னு சொல்றோம். சிறுபான்மைங்கிற சலுகைய வச்சி, அவங்க நல்ல லாபம் பாக்குறாங்கன்னு சொல்றோம்.

ஒருநாளும் அவங்க ஒங்களுக்கு சமத்துவமோ, சமூக நீதியோ கொண்டு வர மாட்டாங்கன்னு சொல்றோம். காலத்துக்கும் ஒங்கள கையேந்தியாவே நிக்க வைக்கிற வேலைய, அதிகாரவர்க்கத்தோட கைகோர்த்துக் கிட்டு, மறைமுகமா செய்றாங்கன்னு சொல்றோம்.

அதுல என்ன லாபம்ன்னு நீங்க கேக்கலாம்? சமத்துவம் வந்தா, அவுங்களோட பதவி, அதிகாரத்துக்கு வேலயில்லாம போயிடுமே? கடவுள நீங்க பாக்கிற பார்வை மாறுனா, அவங்கள்ல பல பேரோட வியாபாரம் படுத்திடுமே?

அவங்க செய்ற பாவத்துக்கு பரிகாரம் செஞ்சி புண்ணியம் சம்பாதிக்க, காலத்துக்கும் கையேந்துற ஏழைக்கூட்டம் ஒண்ணு அவங்களுக்கும் வேணும்லாங்க. அதனால ஏழைங்க அவங்களுக்கு எக்காலத்துக்கும் தேவை தானே?

ஒரு கொழந்த ஆழ்துளை குழிக்குள்ள விழுந்துட்டு. மூணு நாளா அத்தனை டி.வியிலயும் அத காட்டி தமிழ்நாடே உணர்வுப்பூர்வமா துடிச்சிக்கிட்டு இருக்குது. ஆனா கடைசியில பலன் இல்ல.

இப்ப நியாயமா என்ன நடக்கனும்? அடக்கி வச்சிக்கிட்டு இருந்த மக்களோட உணர்வுகள் கோபமா கொந்தளிக்கனும். காப்பாத்த முடியாத அரசாங்கத்து மேல பாயனும். ஆனா அத நடக்க விடாம, இந்த பகுத்தறிவாதிங்களும், ஆன்மீகவாதிகளும். பிரச்சனைய கடவுள் பக்கம் அழகா திருப்பி விடுவாங்க.

இப்ப பகுத்தறிவாதிகள், கடவுளே கிடையாது, நாங்க தான் படிச்சி படிச்சி சொன்னோமேன்னு ஒரு உருட்டல உருட்டி, அவங்களோட பகுத்தறிவு அரசாங்கம் போட்ட அந்த ஆழமான ஓட்டய, மக்களோட கண்ணுல இருந்து மறைச்சிருவாங்க.

இன்னொரு பக்கத்துல நம்ம ஆன்மீகவாதிங்க, கடவுள் கிட்ட வேண்டுங்க. அவரு கண்டிப்பா புதுமை செய்வாருன்னு சொல்லி, பரிகார பூஜைங்+கள நடத்துவாங்க. நடந்தா கடவுளோட புதுமை, நடக்கலன்னா, கடவுளோட விருப்பத்துக்கு நாம பணியனும்னு சொல்லி திரிச்சி விடுற வேலய செய்வாங்க.

ஆக, இந்த ரெண்டு பேருமே கடவுள வச்சி, திராவிட அரசுங்க செய்ற அத்தன உருட்டல்களையும் அழகா மழுப்பி, சாமான்யர்கள வெகுண்டெழாம பத்திரமா பாத்துக்கிடுவாங்க. இவங்க எஜமானர்களும் அவங்களுக்குத் தேவையான எலும்புத்துண்டுகள அப்பப்ப போட்டுகிட்டே இருப்பாங்க.

தமிழ் நாட்டுல நடக்குற சம்பவங்க எதுலயும், கடவுளோட திருவிளையாடல் எதுவும் இல்லைங்க. எல்லாமே திராவிடத்தோட உருட்டல் ஆட்டம் தான். இதுக்கு ஆன்மீகவாதிங்க உடந்தை. ஒங்க சுயசிந்தனை மேல வராம ஆன்மீகத்த வச்சி, பூஜைகள செஞ்சி அணைய போடுறாங்க.

இப்ப நாங்க கேக்குறோம். தமிழ்நாட்டுலயே இந்த ஒரு கொழந்த தான் போர்ல விழுந்துச்சா? சில மணி நேரத்துக்கு மேல குழிக்குள்ள யார் விழுந்தாலும் சுவாசம் இருக்க வாய்ப்பில்லன்னு, Spot - ல இருந்த ஐஏஎஸ் அறிவுஜீவிங்க யாருக்குமே தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?

டாக்டர்ஸ் ஸ்டைரைக் நடக்குற நேரத்துல, அந்த மினிஸ்டர் எதுக்காக அங்க உக்காந்து மீடியா முன்னால அழுதுகிட்டு இருக்காரு? எதுக்காக இத முடிஞ்ச வர இழுத்துட்டு போக துடிக்கிறாரு?

எதுக்காக நாட்டுல போர் போட்டு தண்ணிய எடுக்கனும்? நம்ம முன்னோர்கள் எந்த மிஷினும் இல்லாம பெய்யிற மழைய வச்சே சிறப்பா செழிப்பா விவசாயம் பாக்கலியா? வளர்ச்சி வேண்டாம்னு சொல்லல. ஆனா, சாவ உருவாக்குற வளர்ச்சி எதுக்கு? யாருக்கு?

வருசம் பூரா மழ பெய்யுது. வெள்ளத்துல தத்தளிக்கிறோம். இருக்குற அணைய பாதுகாக்க துப்பும் இல்ல, புதுசா அணைய கட்ட வக்கும் இல்ல. நாம கொடுக்கிற வரிய என்ன தான் செய்றாங்க? இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி இல்லாம நம்ம முன்னோர்கள் தன்னிறைவா வாழலியா?

மழைத் தண்ணிய சேத்து வைக்க மாட்டாங்க. சேத்து வைக்கிற எடத்துல வீட்ட கட்டுவாங்க. வளர்ச்சிங்கிற பேர்ல வீட்டுக்கு வீடு போர் போடுவாங்க, எத்தன பேரு, எத்தன தடவ சொன்னாலும், மக்களும் மங்குனி மாதிரி இருப்பாங்க.

தீடீர்னு மீடியாக்காரன் வருவான், வட சுடுவான், பெரிய மிஷின் வந்துகிட்டு இருக்குதுன்னு கலர் கலரா ரீல் விடுவான். நீங்க கடவுள் கிட்ட வேண்டுவீங்க.

ஒடனே கடவுள் வந்து , மீடியா காட்டுற எடத்துல மூணு நாளு குழிக்குள்ள நின்னு, இயற்கை விதிகளுக்கு எதிரா அந்த கொழந்தய காப்பாத்தி, அவரு இருக்காருன்னு Proof கொடுக்கனும். இல்ல?

இந்த ஒரு சம்பவத்துக்கு பிறகாவது, இந்த திராவிட கட்சிகளுக்கு இனிமேல என்னோட உசுரு இருக்கிற வரைக்கும் ஓட்டுப்போட மாட்டேன்?ன்னு நீங்க முடிவு எடுத்திருந்தா, சாத்தான்குளமோ, லாக்கப் டெத்தோ, சாராயக் கடையோ, பேனர் சாவோ, ஸ்டொ்லைட்டோ, வெள்ள பேரழிவோ மறுபடியும் வந்திருக்காதே?

அதனால தான் சொல்றோம்: கடவுள் அல்ல, நீங்க திராவிடத்துக்கு மாறி மாறி 70 வருசமா போடுற ஒங்களோட ஒத்த ஓட்டு தான், தமிழ் நாட்டுல நடக்குற அத்தனை துன்பத்திற்கான காரணம்.