பொங்கலும், புழுங்கலும்

பொங்கலும், புழுங்கலும்

பொங்கலும், புழுங்கலும்

ஜனவரி 14, 2022

இலவசத்தை அவமானமாகவோ, ஓட்டுப் போட்டவனிடமே கையேந்தி நிற்கிற அவலத்தை அருவருப்பாகவோ பார்க்காத ஒரு கூட்டம் இந்த அறிவியல் யுகத்திலும் இருக்கிறது என்றால், அது இந்த முன் தோன்றிய மூத்தக்குடி கூட்டம் தான்.

நாட்டு நடப்புகள்

மூத்தக்குடி, இனாம், பொங்கல், இலவசம்

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி என்பதற்கு பதிலாக, ******* என்று யாராவது பாடியிருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும். காரணம், இங்கே நடக்கிற கேலிக் கூத்துக்களின் நாற்றம் குடலைப் புரட்டுகிறது.

முதல் நாகரிகமே இங்கு தான் தோன்றியதாம், ஆயிரம் ரூபாய் டோக்கனைப் பெற, கால் கடுக்க ரோசத்தோடு நிற்கும் கேவலத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

வீரத்திற்கு பெயர் போன கூட்டமாம், ஐந்தாயிரம் தருவேன் என்று சொன்னதால் வாக்களித்தோம் என்று வெட்கமே இல்லாமல், வக்கணையாக பேச துணிகிற அந்த வறட்டு தைரியத்தைப் பார்த்தாலே புரிகிறது.

ஆட்சியாளர்கள் நம்மை கொத்தடிமையாய் நடத்துகிறார்கள் என்கிற கேவலம் இல்லை. நாம் உட்கார வைத்தவனிடமே எதற்காக கையேந்தி நிற்க வேண்டும்? என்கிற சொரணை கேள்வி வரவில்லை. எனவே, கேவலமோ, சொரணையோ இல்லாத இந்த கொத்தடிமைக் கூட்டத்தை, ****** என்று சொல்வது தானே அறமாக இருக்க முடியும்?

கடந்த கால வரலாறு பேசி பேசியே பெருமை தம்பட்டம் அடிக்கிற இந்த தற்பெருமைக் கூட்டம், நிகழ் காலத்தில் நடப்பதை பற்றிய கூச்சமோ, இன்னமும் அடிமையாக இருக்கிறோம் என்கிற வருத்தமோ, எள்ளளவும் இன்றி இருப்பது தான் பகுத்தறிவு கொடுத்த புரட்சி அறிவு போலும்!

இலக்கியத்தில் புலியை முரம் கொண்டு விரட்டியடித்த பிராடு கதைகள் இருக்கட்டும், நிகழ்காலத்தில் ஒரு ஓட்டை கூட உருப்படியாக போட தெரிகிற அறிவு வளர்ச்சி இல்லையே? வாக்கையே ஐந்துக்கும், பத்துக்கும் இன்னமும் விற்றுக்கொண்டு இருக்கிற மனநோய் தானே இருக்கிறது.

விஞ்ஞான திருடர் கூட்டத்தின் ஊழல்கள் ஒரு புறத்தில் இருக்கட்டும். இந்த ரேசன் கடைகளில் கொடுக்கப்படும் இனாம் யாருக்கு? மாடி வீடுகளில் வாழ்கிறவனும், ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு வரிசை கட்டி நிற்கிறானே? இது தான் திட்டங்கள் ஏழைகளை அடைகிற இலட்சணமா?

எப்படி ஏழைகளுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு, அத்தனை பேருக்கும் சமூக நீதியோடு வழங்கப்படுகிறது? மற்றவர்களுக்கு கட் செய்தால் அத்தனை ஓட்டுக்களும் காலியாகி விடும் என்கிற பகுத்தறிவே இந்த சமூக நீதிக்கான காரணம். இப்பொழுதே அடுத்த எலக்சனுக்கான தோ்தல் பணியை தொடங்குகிற சாணக்கியத்தனமாக இருக்கும் போலும்! ஓட்டுக்காக என்ன தகிடு தத்தங்களையும், பகுத்தறிவோடு செய்யும் கூட்டமல்லவா இந்த திருட்டு கூடாரம்!

பொங்கல் அறுவடையின் திருவிழாவாம். என்ன அறுவடை செய்து கிழித்து விட்டது இந்த குடிகார கூட்டம். இன்னமும் திராவிடத்திடம் கொத்தடிமையாக இருப்பதே உரைக்காத இவர்கள், பழையதை கழிக்கும் போகி கொண்டாடி என்ன புதிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்?

முதல் நாளில், பொங்கல் தின்று விட்டு, புதுப்படங்களைப் பார்த்து விட்டு குறட்டை விட போகிறார்கள். இரண்டாம் நாளில், மாடுகளிடம் குத்து வாங்கிக் கொண்டு ஆம்புலன்சில் தட புடலாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல பட போகிறார்கள். மூன்றாம் நாளில், மிச்ச மீதி இருப்பதை, குடித்து காலி செய்ய போகிறார்கள்? இதற்கு இத்தனை களேபரமா?

நாடு நாசமாக போனால் எனக்கென்ன? எவன் கொள்ளையடித்து சம்பாதிக்க ஆட்சி செய்தால் எனக்கென்ன? எனக்கு ஓசியாக பொங்கலும், குடிக்க ரூபாயும் கொடுத்தால், எவனுக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுவேன் என்பதே அறமும், மறமும் சார்ந்த இங்குள்ளவர்களின் ஐவகை நில வாழ்வு.

வருங்காலத்தில் புளியில் பல்லி அல்ல, எலியே இருந்தாலும், அந்த நேரத்தில் புலம்புவதோடு சரி. கண நேரத்தில் அதையும் தூற எடுத்துப் போட்டு தூர் வாரி விட்டு, அத்தனையும் மறந்து கடந்து சென்று விடுவார்கள்.

தன் நிலத்தில் சிந்தப்பட்ட இரத்தக் கறை காயும் முன்பே, மனச்சாட்சி இல்லாது திராவிடத்துக்கே அத்தனை ஓட்டுக்களையும் வாரி வழங்கியதிலேயே இவர்களின் ஆக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உலகத்திற்கு உப்பு ஏற்றுமதி செய்வதோடு சரி, சோற்றிலே உப்பு சோ்க்க மாட்டார்கள் என்று.

அடிபட்டும், மிதிபட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும், பொய் வழக்குகள் வாங்கியும் புத்தி வராத படித்த, டாக்டர் பட்டம் வாங்கிய அணு உலை போராளிகளே, இன்னமும் சொரணையில்லாது திராவிட திருடர்களுக்கு தோ்தலில் ஆதரவு கேட்டு போகிற போது, மற்றவர்களை என்ன சொல்ல?

ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை. இவ்வளவையும் செய்து விட்டு, எப்படி இந்த மூத்தக்குடிகளால் குற்ற உணர்வே இல்லாமல் கடவுளின் சன்னிதானத்தில் மண்டியிட்டு வேண்ட முடிகிறது? கடவுளை அவ்வளவு ஏமாளியாகவா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?