வரலாற்றுப் பொய்யர்கள்

வரலாற்றுப் பொய்யர்கள்

வரலாற்றுப் பொய்யர்கள்

ஜனவரி 18, 2022

நாங்கள் தான் தமிழர்களை படிக்க வைத்தோம் என்பது திராவிட டிராமா கம்பெனியின் வழக்கமான உருட்டலில் ஒன்று. இந்த தீயவாள் பாசறை நமக்கு வரலாற்றைச் சொல்லி தந்திருக்கிற ஆக்கத்தை பார்க்க வரலாறு பாடத்தை ஒருமுறை சுற்றி வருவோமா?

நாட்டு நடப்புகள்

ஹிட்லர், அலெக்சாண்டர், நெப்போலியன், வாஸ்கோடகாமா, மெகல்லன், கொலம்பஸ்

அலெக்சாண்டரை மாவீரனாக வரலாற்று பாடப் புத்தகத்தில் படிக்க வைத்தார்கள். இலட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று அந்த இரத்த மழையில் குளிர் காய்ந்த ஈவு இரக்கமில்லா அரக்கன் ஒருவன் எப்படி வீரனாக முடியும்? பெரியவாளின் பகுத்தறிவு எப்படி பல்லிளிக்கிறது பார்த்தீர்களா?

நெப்போலியன் ராஜ தந்திரம் நிறைந்த மிகச் சிறந்த போர் வீரனாம். புத்தகமாய் எழுதி தள்ளியிருக்கிற ஒரு ஐஏஎஸ் அறிவு ஜீவி இப்படி நமக்கு அன்பாக பாடம் நடத்துகிறார்.

நாகரீக உலகிலும் தன் பேராசைக்காக அதிகார திமிரில் அடுத்த நாட்டை சூறையாட தன் நாட்டு வீரர்களை பலி கொடுத்த மிருக உள்ளம் படைத்த கோழையை அந்த நாட்டு மக்களே காறி உமிழ்கிறார்கள். ஆனால் பகுத்தறிவு பாசறையில் ஏவல் பணி செய்யும் இது போன்ற பலியாடுகள், வீராதி வீரன், சூராதி சூரன் என்று காமெடி பேசி தங்களையே தரம் தாழ்த்தி கொள்கிறார்கள்.

அந்த மாவீரன், தீவில் அடைபட்டிருந்த போது தப்பிக்க கொடுக்கப்பட்ட வரைபடத்தை பார்க்காமலேயே இறந்து விட்டானாம். நன்னெறியாக பாடம் நடத்தி பரிதாபம் கொள்ள வைக்கிறார்கள். ஏன் தீவிலிருந்து தப்பி இன்னும் பல பெண்களின் தாலி அறுக்கவா?

வாஸ்கோடகாமா, மெகல்லன், கொலம்பஸ் கடல் மார்க்கமாக வழி கண்டுபிடித்த சூரர்களாம். உண்மையில் இவர்கள் யார்? செல்வமும், செழிப்புமாக இருந்த கிழக்கு ராஜ்ஜியங்களை தங்கள் மேற்கு எஜமானர்கள் சுரண்டி தின்ன காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு வழி திறந்து விட்டவர்கள்.

மேல் நாட்டார் பார்வையில் அவர்கள் ஹீரோக்களாக இருக்கலாம், ஆனால் நமக்கு நம்மையே காட்டி கொடுத்த கயவர்களாக தானே அறிமுகமாகி இருக்க வேண்டும்? யார் இவர்களை ஹீரோக்களாக மாற்றியது? பொய், புரட்டிற்கு பெயர் போன நம்மை படிக்க வைத்த ஓசி சோறு திராவிடம் தான்.

இந்த திருடர் பாசறையில் வளர்ந்த அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக இவர்களை வரலாற்று ஹீரோக்களாக அடுக்கு மொழியில் அரசியல் மேடைகளில் பேசி, கவிதை நடையில் புத்தகமாக எழுதி, நம்மை பாடமாக படிக்க வைத்து உருட்டல் டிராமா போட்டு இருக்கிறார்கள்.

நெப்போலியன் மாவீரன் என்றால் சமகாலத்தில் வாழ்ந்த ஹிட்லர் மட்டும் எப்படி அயோக்கியனாக முடியும்? உயிர்களைக் கொல்வது பாவமென்றால், அந்த அளவுகோல் அத்தனை பேருக்கும் ஒன்றாக தானே இருக்க வேண்டும்? மாஞ்சோலையில் இவர்கள் சுட்டுக் கொன்றால் அஹிம்சை, ஸ்டொ்லைட்டில் நடந்தால் அது அரச பயங்கர வாதம். என்ன உருட்டு உருட்டுகிறது பாருங்கள் இந்த குள்ள நரி கூட்டம்.

அடுத்தவனின் மனையாளை தன் வயப்படுத்த, விருப்பமில்லாத ஒரு பெண்ணை கட்டாய திருமணம் செய்ய, ஒட்டு மொத்த தன் வீரர்களையும் பலி கொடுத்த இந்த நரகாசுர கூட்டம் தான் நாம் கடவுளை வழிபட கூடாது, தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மங்கள துதி பாட வேண்டும் என்று பாடம் நடத்துகிற அதிசய பிறவிகள்.

இப்போதைய வாரிசு ஆட்சியில் புதிய பாடங்களுக்கு எழுத பட்டிமன்றம் தயாராகி கொண்டு இருக்கிறது. என்ன அளவுகோல் தெரியுமா? புராணத்திற்கு இடம் இல்லையாம், பகுத்தறிவு கதைகள் மட்டுந்தானாம்.

புராணத்தில் இருக்கிற கடவுள் நம்பிக்கை கதைகளை மாணவர்கள் படித்தால் முட்டாளாகி விடுவார்களாம். ஆகவே நன்னெறி கதைகளுக்கு மனைவி, இணைவி, துணைவி கதைகளையும், கணக்கு பாடத்திற்கு சர்க்கரை திருடிய விஞ்ஞான முறைகளையும் பாட நூல்களில் சோ்ப்பார்கள் போலும்.

ஏழைகள் வியர்வை சிந்தி வரியாக கொடுக்கும் பணத்தை வள்ளுவருக்கு சிலை வடித்து கடலில் கொட்டினால் முத்தமிழ் அறிஞர் பட்டம். இதை வேறோருவர் பட்டேலுக்கு செய்தால் சர்வாதிகாரி என்கிற புளுகல். இது தான் புளுத்த அரிசி வழங்கும் இவர்களின் பித்தலாட்ட லாஜிக் பாடம்.

இவர்கள் கடவுளை அருவருப்பாக பேசலாம், புராணத்தை கேலி செய்யலாம். ஆனால் இந்த பகுத்தறிவு பிறவிகள் செய்யும் திருட்டுத் தனங்களை, பேசும் பொய் மூட்டைகளை, ஊழல் நிர்வாகத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற நினைப்பு வந்தாலே குண்டாஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள்.

உழைக்காமல் அடுத்தவர் உழைப்பில் உட்கார்ந்து தின்று சுரண்டிப் பிழைக்கும் இந்த ஈன பிறவிகளை கடவுள் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் செய்கிற அநியாயங்களை கடவுளால் தடுக்கவும் முடியாது, தட்டிக் கேட்கவும் முடியாது.

மக்களாட்சியில் இந்த மூடர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற பலம் மக்களிடத்தில் தான் இருக்கிறது. அவர்கள் மட்டுமே அதனை செய்ய முடியும். கடவுளால் அதனை செய்ய முடியாது. அப்படியே அவர் செய்ய நினைத்தாலும், அவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துகிற புனித மத நிறுவனத்தின் தலைகள் பார்த்து பக்குவமாய் ஊதி கோபால புரத்திற்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றி விடுவார்கள். இரத்தமும் சதையும் தின்று சலித்து விட்டதால், எலும்பு துண்டுக்கு ஆசை படும் ஓநாய் கூட்டம் இது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட தன் மகளுக்காக காங்கிரஸ் கயவர்களின் அத்தனை மக்கள் விரோத சட்டங்களும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முட்டுக் கொடுத்தது மட்டுமல்லாது, ஒரு இனத்தையே கருவறுக்க துணை போன இந்த தெய்வ பிறவிகளுக்கு வக்காலத்து வாங்கி உச்சி முகர்கிற இந்த வெள்ளை அங்கிகள் போதிக்கிற இறுதிக் காலம் வரவே வராது.

நம் காலத்தில் நம் ஒற்றை வாக்கை உருப்படியாக செலுத்துவோம். ஆனால், எத்தனை பிறவி எடுத்தாலும் எங்கள் வாக்கு இந்த திராவிட வார்ப்புகளுக்கு கிடையாது. அது சாவான பாவம் என்று இந்த வெள்ளை அங்கிகள் சாபமே போட்டாலும், கருக்கு மட்டைகளோடு நரகத்திற்குச் செல்வதையே பேரானந்தமாக கருதுகிறோம்.