திராவிட வர்ணாஸ்ரம தர்மம்

திராவிட வர்ணாஸ்ரம தர்மம்

திராவிட வர்ணாஸ்ரம தர்மம்

ஜனவரி 21, 2022

தமிழகத்தில் மன்னராட்சியை கொண்டு வர துடிக்கும் திராவிட கைக்கூலிகள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் இரண்டு. ஒன்று சனாதன தர்மம், மற்றொன்று வர்ணாஸ்ரம தர்மம்.

நாட்டு நடப்புகள்

சனாதன தர்மம், வர்ணாஸ்ரம தர்மம், பார்ப்பனர்கள், உடன்பிறப்பு

சனாதன தர்மம் நம்மை அடக்கி வைத்திருந்தது, வர்ணாஸ்ரம தர்மத்தால் நம்மை அடிமைப் படுத்தி வைத்து இருந்தார்கள் என்று கிடைக்கிற மேடைகளில் எல்லாம் புரட்சி பேசுகிற இந்த வரலாற்று பொய்யர் கூட்டம் எப்போது தான் நிகழ் காலத்தை பேச போகிறதோ?

நிகழ்காலம் பேசினால் சோற்றுக்கு வழியில்லாமல் போய்விடும் என்கிற வயிற்று பயம் கூட காரணமாக இருக்கலாம். எனவே தான் சொல்லி வைத்தது போல இவர்களின் அணியில் இருக்கிற அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக அம்னீஷியா மறதி வியாதியால் பீடிக்கப் பட்டு இருக்கிறார்கள்.

சனாதன வாதிகளை முறியடிக்க வேண்டுமாம், காரணம் பார்ப்பனர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று சூழ்ச்சி செய்து வர்ணாஸ்ரம தர்மத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார்களாம். அதெல்லாம் இருக்கட்டும்.

கடந்த 50 வருசமாக அதிகாரத்தின் தலையில் உக்காந்து ஆட்சி செய்தது யார்? பார்ப்பனர்களா? இந்த திராவிடம் பேசியவர்களா? கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகள் இந்த திராவிடம் தானே ஆட்சி செய்திருக்கிறது. இவர்கள் வாழ்க்கையில் விண்ணளவு முன்னேற்றம். ஆனால் பாமர மக்கள்?

நாற்றமெடுக்கிற அரிசியை கொடுக்கிறார்கள். உடன்பிறப்பே என்று அழைப்பது நிஜமென்றால் இவர்களும் குடும்பத்தோடு ஒவ்வொரு நாளும் ரேசன் அரிசியைச் சாப்பிட்டு வர வேண்டுமே? தன் குடிகள் ரேசன் கடையில் அரிசி வாங்கி தின்பதை பார்க்கிற ஒரு தலைவர் எவருக்காவது கண்ணகிக்கு சிலையும், கூத்தாடிகளுக்கு விருது வழங்க அரசு செலவில் கலை விழாவும், நூற்றாண்டு மண்டபத்திற்கு கோடியும் செலவழிக்க மனம் வருமா?

எளியவரிடம் நயமாக பேசி நாசுக்காக அவர்களை நசுக்குவதே இவர்களின் பரம்பரை அரசியல். பார்ப்பனர்கள் தலையில் இருந்த போதாவது பார்ப்பனருள் எவரும் தலையாக இருக்கலாம் என்கிற சமத்துவம் இருந்தது. ஆனால் இந்த திராவிட வர்ணாஸ்ரம தர்மத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வழி வழியாக தலையில் அமர முடியும்.

மற்ற எல்லாரும் ஏவல் வேலை செய்வதற்கு மட்டுந்தான். அதற்கும் அத்தனை வெள்ளை அங்கிகளும் வரிசை கட்டி நிற்கிறார்களே? இதில் அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் ஏதுமில்லை என்று ஊதுகிற எக்காளம் வேறு?

சமூக நீதி என்கிற பெயரிலும் பகுத்தறிவு என்கிற போர்வையிலும் பல விஷமமான விதைகளை விதைத்து ஐம்பது ஆண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு அழகாக பிரித்தாளும் பித்தலாட்டம் செய்து அழகாக பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் சூழ்ச்சி அறியாத கொத்தடிமை கூட்டமே தமிழகம்.

உயர்ந்த சாதியில் இருக்கிற பிராமணன் என்றாலே அத்தனை பேரும் பாவிகளா? தாழ்ந்தவர் என்றாலே அத்தனை போ்களும் புனிதர்களா? இந்த பொதுப் புத்தியை எந்த சுத்தியல் கொண்டு உடைப்பது? இந்த பொதுமைப் படுத்திப் பேசும் விதையை யார் விதைத்தது?

ஓட்டுக்காக சாதியைப் பிரிப்பது, ஒற்றுமையைச் சீர்குலைக்க வணிகர் சங்கங்களை இரண்டாக்குவது, மத வெறியை ஏற்றி கிறிஸ்தவரையும் முஸ்லீம்களையும் காலத்திற்கும் சிறுபான்மையின மக்களாக அடையாளம் கொடுத்து அதன் தலைவர்களுக்கு சில எலும்பு துண்டுகளை வீசி எறிந்து வாக்குகளை அறுவடை செய்வது. ஊர் ரெண்டு பட்டால் தானே இவர்கள் காலத்திற்கும் ஆளலாம்?

நல்லவன் என்றால் எந்த சாதியில் இருந்தாலும் மதத்தில் இருந்தாலும் வசதியாக வாழ்பவன் என்றாலும் நல்லவனாக தான் இருப்பான். மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே. அது போல தான் கெட்டவனும். ஆனால் இதற்கு விதிவிலக்கு திராவிட திருடர் பாசறை மட்டுந்தான். ஒட்டுமொத்த கூடாரமும் அயோக்கிய பாசறை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம்!

மன்னராட்சி வேண்டாம் என்று தான் மக்களாட்சி முறைக்கு வந்திருக்கிறோம். ஆனால் மீண்டும் மன்னராட்சி முறையை கொண்டு வர கொடி பிடிக்கிற உதவாக்கரை உடன் பிறப்புக்களை என்ன சொல்லி திட்டுவது? இந்த அடிமை கூட்டத்திற்கு என்ன அறிவு புகட்டி விழிப்புணர்வு கொடுப்பது?

படிக்க வைத்து நாங்கள் தான் அறிவை வளர்த்து விட்டோம் என்று வாய் கிழிய கத்துகிற இந்த டிராமா கூட்டம், குடிக்க வைத்து சீரழித்ததை மட்டும் வசதியாக மறந்து விடுவார்கள். இவர்கள் படிக்க வைத்தால் காலத்திற்கும் இந்த குடும்பத்திற்கு அடிமைச் சேவகம் செய்ய வேண்டுமா? இவர்களின் சொந்த காசிலா படிக்க வைத்தார்கள்? இவர்கள் இல்லை என்றால் படிப்பே தமிழ்நாட்டில் வந்திருக்காது என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்கார தனம்?

பெரியாரையும் மணியம்மையையும் கேட்கவே கூசுகிற அருவருப்பு மொழியில் பேசிய இந்த தெய்வ பிறவிகள் தான் யதார்த்த வாழ்வில் இஷ்டம் போல வாழ்ந்து விட்டு புராணத்தை தோண்டி எடுத்து கேலிப்பேச்சாக மேடைகளில் பேசித்திரிந்த ஒழுக்க சீலர்கள்.

பிராமணர் என்றாலே எதிர்க்க வேண்டும் என்கிற வெறுப்பு விதையை அடுத்த தலைமுறை உள்ளத்தில் விதைத்து, பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, தமிழக மக்களைக் காலத்திற்கும் கொத்தடிமையாக வைத்திருப்பதே இந்த திருட்டு குடும்பத்தின் நூற்றாண்டு மெகா பிளான். இதற்கு துணை போகிற கூஜா வேலையைத் தான் ஆதரவுக் கரம் நீட்டுகிற புனிதர் கூட்டம் செய்து கொண்டு இருக்கிறது.

தனக்கு முதல்வர் பதவி, மூத்தவனுக்கு துணை முதல்வர் பதவி, இளையவனுக்கு மத்திய அமைச்சர் பதவி, மகளுக்கு நாடாளுமன்ற பதவி, பேரனுக்கு எம் எல்ஏ பதவி, இரத்த உறவுகளுக்கு மீதியிருக்கிற பதவி. உடன் பிறப்புக்கு போஸ்டர் ஒட்டுவது, கக்கூஸ் காண்ட்ராட், சைக்கிள் ஸ்டேண்ட் குத்தகை.

அத்தனை பதவிகளையும் குடும்பத்திற்கு தாரை வார்த்ததைப் பார்த்த பிறகும் இன்னமும் முட்டுக் கொடுப்பதும், இவர்களிடம் கிடைக்கும் அந்த ஊசிப்போன கஞ்சையும் வாங்கிக் குடிக்க காத்திருக்கும் உடன் பிறப்புக்களின் பகுத்தறிவையும், ஆதரவுக் கரம் நீட்டும் ஆன்மீகத்தையும் என்ன தான் செய்வது?