கிழக்கும் மேற்கும்
ஜனவரி 27, 2022
சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு பழமொழி உண்டு. அதுக்கு பெஸ்ட் எடுத்துக்காட்டு நம்ம மேற்கு உலக நாடுகள் தான். சார்லஸ் டார்வின் கொள்கையில இருக்குற அத்தனை அம்சங்களும் இவங்களுக்கு கச்சிதமா அப்படியே பொருந்தும்.
உலக நிகழ்வுகள்
நாகரீகம், கண்டுபிடிப்பு, இயற்கை, பூமி, அட்சய பாத்திரம்
சாதனை பண்ண போறேன், வரலாறு படைக்க போறேன், புதுசா கண்டுபிடிக்க போறேன்னு அத்தன வம்புகளயும் விலை கொடுத்து வாங்கி இந்த பூமிய குரங்கு கையில கிடைச்ச பூமாலையா சீரழிச்சி சின்னா பின்னமா சிதைச்சி வச்சிருக்காங்க.
இயற்கை எப்படிங்க அதுவா நோய உருவாக்கும்? எலிய பிடிச்சி ஆராச்சிங்கிற போ்ல மருந்துகள கொடுத்து சோதிச்சா பிளேக் நோய் வரத்தானே செய்யும்? காட்டுல இருக்குற குரங்குகள பிடிச்சி அத கட்டிப்போட்டு தொட்டு ஆராய்ச்சி பண்ணா எய்ட்ஸ் பரவத் தானே செய்யும்? கண்ட கண்ட கருமாந்திரத்த உருவாக்க புதுசு புதுசா ஆராய்ச்சி செஞ்சா தினுசு தினுசா கொரோனா உருவாகி வாட்டி வதைக்க தானே செய்யும்?
அடுத்த நாடுகள பிடிக்க போறேன்னு காட்டுமிராண்டியா சண்டக்கி போறது. அப்புறம் கை, கால், தலய இழந்துட்டு நிக்குறது. வெட்டித்தனமா கெமிக்கல் வச்சி இதுக்கும் மாத்திரை, மருந்த கண்டு பிடிச்சி அதனால வர்ற பக்க விளைவ மறைச்சிட்டு அதயும் அறிவியல் வளர்ச்சின்னு தற்பெரும பேசுறது. இதுக்கு பேரு தாங்க ஊசி போடும் பகுத்தறிவு.
சக்கரம் கண்டுபிடிச்சது புரட்சியாம், கார் கண்டுபிடிச்சது அறிவியலோட ஆச்சரியமாம். ஆனா அந்த கார வச்சி ரோட்டுல படுத்து கிடக்கிறவன் மேல ஏத்தி குடிகாரன் கொன்னு போட்டா ஆன்மீகம் பதில் சொல்லனுமாம். கடவுள் ஏன் காப்பாத்த வரல?ன்னு வௌக்கம் கொடுக்கனுமாம். நல்லா இருக்குல்ல அந்த கீழை நாட்டு சாக்ரடீசோட உப்பு பெறாத லாஜிக்.
செக்கு எண்ணெய், ஆர்கனிக் புரூட்ஸ், அம்மியில் அரைத்த மசாலான்னு கூத்தாடிகள் வௌம்பரமா நடிக்கிறத பார்த்து அத வாங்க வெக்கமே இல்லாம வரிசையில நிக்குற மாடர்ன் கோமாளிங்கள என்ன சொல்றது? கார்பரேட் கம்பெனிங்க கூத்தாடிகள ஆட உட்டு கலர் கலரா ரீல் விட்டு சொன்னா நம்புவோம், அதயே வழி வழியா வர்ற பரம்பரை வைத்தியமா செஞ்சா எளக்காரம் செய்வோம். இல்ல?
நீங்க பாட்டுக்கு நாகரீகம்ன்னு கண்டத கண்டுபிடிச்சி வச்சிக்கிட்டு எல்லாமே கடவுளோட அருளால தான் நடந்துச்சுன்னு அதுக்கு ஒரு வியாக்கியான பாட்டும் பாடிட்டு, ஆன்மீக வௌக்கமும் கொடுத்துட்டு, பேசாத கடவுள எப்படி எல்லாம் வச்சி செய்றீங்க. மனுசனோட கண்டுபிடிப்பு வரம் இல்லீங்க, வருங்கால தலைமுறைக்கான ஒட்டு மொத்த சாபக்கேடு. அது போக போக புரியும்.
சுகர் வந்து செத்துப் போறது நீங்கன்னா அது ஒங்க சுதந்திரமா இருக்கலாங்க. ஆனா ஒங்க சுதந்திரத்தால ஒங்க தலைமுறைக்கும் கடத்துற ஜீன் மாற்றத்த நீங்க தான் முதல் முறையா உருவாக்குறீங்க. அத மறக்காதீங்க. இத தடுக்க கடவுள் வரவும் மாட்டாரு, புதுமயும் செய்ய மாட்டாரு, மேஜிக்கும் போட மாட்டாரு.
பகல் பூரா ஒங்களுக்கு சூரியன் இருக்கு. இராத்திரி நிலா வெளிச்சம் இருக்கு. சுத்தி மரங்கள் இருக்கு. ஒங்களுக்கு எதுக்குங்க லைட் வேணும்? சூரியன் மறைஞ்சா தூங்குறது தான ஒங்க ஒடம்போட புரோகிராம்? முழிச்சிருந்தா கண்ணு குருடா தான போகும்? அதுக்கு கண்ணாடி கண்டுபிடிச்சா அறிவியல் வளர்ச்சியா? பணத்துகாக ராத்திரி பூரா தூங்காம முழிச்சி நீங்க வேல பாத்தா ஒடம்புல நோய் வர தான் செய்யும். கடவுள் என்னங்க செய்ய முடியும்?
வாங்குறீங்க சரி, சேத்து வச்சிருக்கிற அத்தன பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் பொருள எங்க போயி புதைச்சி இல்லாம செய்ய போறீங்க? ஒங்க பேராசைக்காக இயற்கைய எப்படி எல்லாம் நாசம் பண்ணி வச்சிருக்கீங்க? எப்படி எல்லாம் வாட்டி வதைக்கீங்க? அதுக்கு என்ன பதில் சொல்றீங்க?
இயற்கையா வர்றது மண்ணோட மண்ணா மக்கி போயிரும். ஆனா மனுசனோட செயற்கை, பிளாஸ்டிக்கா கதிர் வீச்சா காலத்துக்கும் அழியாம புற்று நோய், மலட்டுத் தன்மைனு அத்தனை நோயயும் உருவாக்குமே? இந்த வளர்ச்சிய கடவுள் குடுக்கல. நீங்க தான் வளர்ச்சின்னு நம்புறீங்க.
கெட்டது நடந்தா மட்டும் கடவுள தேடுறது. மத்ததுக்கு ஒங்க அறிவு திமிர்ல பேசுறது. நீங்க பூஜை போட்டு மாடி கட்டிடம் கட்டுனா கடவுள் விபத்து நடக்காம காப்பாத்தனுமா? கடவுளுக்கே லஞ்சமா? கடவுளா ஒங்களுக்கு கார் கண்டுபிடிக்க வழி சொன்னாரு. கடவுளா பெட்ரோல் எடுக்க போர் போட சொன்னாரு. கடவுளா நிலக்கரிய கொத்து கொத்தா அள்ளி எடுத்து விற்க சொன்னாரு?
பூமி தங்க முட்டை போடுற வாத்துங்க. நம்ம தேவைக்கு அள்ள அள்ள கொடுக்கிற அட்சய பாத்திரம். அத ஒரேடியா கொன்னா அத்தன முட்டயயும் எடுத்திரலாம்னு நினைக்கிற முட்டாள் தனத்துக்கு பேரு தான் பகுத்தறிவு.
தொழிற் புரட்சின்னு தங்கம், வெள்ளி, இரும்புன்னு அத்தன தாது பொருளையும் பூமியில இருந்து உருவுறோம். அது பூமியோட ஒடம்போட அங்கம்ங்க. பூமி சம நிலையோட இயங்க அது தேவைங்க.
இப்ப சொல்லுங்க, சுனாமி, வெள்ளம், பருவ நிலை மாறுபாடு வந்தா கடவுள் எதுக்கு காப்பாத்தனும்? மனுசங்க செய்ற அத்தனைக்கும் முட்டுக் கொடுக்கிறதுக்கா? காப்பாத்தாம இருந்தா தாங்க அவரு கடவுள், காப்பாத்துனா அவரு கடவுளாவே இருக்க முடியாதுங்க.
மண்ணுல விதை போட்டா உரம் போடாம தண்ணி ஊத்தாம பாதுகாப்பு இல்லாம அது தானாவே முளைக்கிற ஆச்சரியம் தான் கடவுளோட படைப்பு. அதுல இருக்குற தாது மணல வழிச்சி எடுத்து ஒங்க பேராசைக்கு பணமாக்குனா, எப்படிங்க நாளைக்கு அதுல உயிரு இருக்கும்? எவ்வளவு தண்ணீ இருந்தாலும் உறிஞ்சி குடிக்கிற அந்த தாய் மேல எப்படிங்க சிங்கார City ன்னு பீத்திக்கிட்டு ஊர் பூரா தார் ரோடு போட மனசு வருது?
இதயெல்லாம் ஆன்மீக வாதிங்க பேச மாட்டாங்க. அதுக்கு பதிலா தடுப்பு ஊசி போடுங்க, நீங்க தடுப்பூசி போடலன்னா ஒலகத்துல நடக்குற ஒவ்வொரு சாவுக்கும் நீங்க தான் காரணம், அது சாவான பாவம்னு சாபம் போடுவாங்க. அதிகார வர்க்கத்துக்கு பக்க வாத்தியமா இருந்து பாத்து பக்குவமா பீப்பி ஊதுவாங்க.
நீங்க வேணா பாருங்க, சீக்கிரத்துல ஒடம்புல இருக்குற அத்தன நோய் எதிர்ப்பு சக்தியயும் கண்ட கண்ட ஊசிய போட்டு உருவி எடுத்துட்டு அதுக்கு பிறகு மாசத்துக்கு ஒரு தடுப்பூசி போட்டா தான் உயிர் வாழ முடியுமங்கிற ஒரு நிலை உருவாகுதா? இல்லையான்னு?
அதயும் அறிவியல் வளர்ச்சின்னு ஆன்மீக வாதிங்க ஹாயா ரெகமண்ட் பண்ணுவாங்க. மங்களமான இசையோட மஞ்சள் துண்ட கட்டிக்கிட்டு கூத்தாடிங்க அட்வைஸ் பண்ணுவாங்க. நாமளும் கொத்தடிமையா பல்ல இளிச்சிகிட்டு உசுருக்கு பயந்து ஊசிய போடுவோம். Wait and See.