கடவுளும் தமிழக அரசியலும்

கடவுளும் தமிழக அரசியலும்

கடவுளும் தமிழக அரசியலும்

ஜனவரி 29, 2022

கடவுள் மந்திரவாதி கிடையாதுன்னு சொல்றீங்க, மேஜிக்கும் செய்ய மாட்டாரு. எல்லாத்தயும் தீர்மானிக்கிறது அரசியல் அதிகாரம் தான். துன்பத்துக்கும் அது தான் காரணம். அத கடவுளால தடுக்கவும் முடியாது. அப்படின்னா கடவுள் எதுக்கு? கடவுளால ஒண்ணுமே செய்ய முடியாதா?

ஆன்மீக அரசியல்

மக்களாட்சி, சதுரங்க ஆட்டம், சாதுர்யம், அரசியல் மாற்றம், தோ்தல்

கடவுளால மேஜிக் ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு சொல்றது கஷ்டமா இருந்தாலும் அது தான் நூத்துக்கு நூறு உண்மை. கடவுளால இந்த உலகத்துல இருக்குற ஒரு புள்ளிய கூட மாத்த முடியாதுன்னு சொல்றதுக்கு ஒலகத்துல நடந்த, நடக்குற அத்தன கொடுமையான நிகழ்வுகளும் ஆதாரங்கள்.

கடவுள ஒட்டு மொத்த வரலாத்த வச்சி கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்? எவ்வளவு கொடுமை இந்த ஒலகத்துல கடவுள் பேர வச்சியே நடந்திருக்கு. கடவுள் தடுத்தாரா? இல்லயே? அதனால தான் ஆணித்தரமா சொல்றோம், இந்த ஒலகத்த ஆளுறது மனுசன் தான். இங்க அத்தனயயும் தீர்மானிக்கிறது அதிகாரம் தான். கடவுள் இல்ல.

தமிழ்நாட்டுல மாற்றம் வரனும்னா நல்லவரு ஒருத்தரு சி.எம் ஆகனும். அப்படி அரசியல் மாற்றம் வர்றது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே தெரியும். அந்த மாற்றத்துக்கு தடையா இருக்கிறதும் மத நிறுவனங்கள் செய்ற ஆன்மீகம் தான்னு நடு நிலையோட பார்த்தாலே நல்லா புரியும்.

தமிழ்நாட்டு அரசியல்ல திராவிடத்த தாண்டி வேற யாரும் உள்ள நுழைய முடியாதபடி அவங்களுக்கு அரக்க பலம் இருக்கு. கொத்தடிமை வாக்கு வங்கி இருக்கு. சிறு பான்மை ஆதரவும் இருக்கு. புதுசா வர்றவங்க கணிசமா ஓட்டு வாங்கி பலத்த காட்டுனாலும் அதிகார பலத்த வச்சி அவங்க கட்சிய ஒடைச்சி கொஞ்ச நாள்ல இல்லாம திராவிடம் பண்ணிரும். அதுக்கு பல உதாரணமும் இருக்கு.

ஆட்சி மாற்றத்த கொண்டு வர எல்லா முயற்சியும் செஞ்சு பார்த்த ஒரு களம் தான் தமிழ்நாடு. மக்களும் மாறல, அரசியல்வாதியும் மாறல, ஆட்சியும் மாறல, காட்சியும் மாறல. இப்ப மாற்றம் வரும்ங்கிற நம்பிக்கையும் பலருக்கு இல்ல. இந்த இயலாமை சூழ்நிலை தான் கடவுள் செயல்படுற விதம்ன்னு நாங்க சொல்றோம்.

கடவுள் யார்? அவர் எப்படி செயல்படுறார்?ன்னு வரலாத்துல, மத நூல்கள்ல, புராணத்துல படிச்சிருந்தா நாங்க பேசுற கடவுள் நம்பிக்கய புரிஞ்சிக்க முடியும். எப்ப மனுசனால முடியாதுங்கிற நிலை வருதோ அப்ப கடவுளோட பலம் செயல்பட தொடங்குது.

நாங்க பேசுறது மூட நம்பிக்கை கடவுள் கிடையாது, மூர்க்கமான கடவுள் நம்பிக்கையும் கிடையாது. இது ஆராய்ந்து அனுபவித்தறிஞ்ச கடவுள் நம்பிக்கை. இத ஆதாரம் கொடுத்து நிரூபிக்க முடியாது, ஆனா நடந்த பிறகு நடந்தத ஆதாரமாக காட்டி ஈசியா விளக்க முடியும்.

நம்ம காலத்து அரசியல் உடல் பலத்த காட்டுற சடுகுடு ஆட்டம் கிடையாது, சாதுர்யமா காய நகர்த்துற சதுரங்க ஆட்டம். இந்த ஆட்டத்துல பேச்சுக்கு இடம் கிடையாது, பேசி பிரயோசனமும் கிடையாது. எதிரி கிட்ட ராணி, பிஷப், யானை, குதிரை, வீரர்கள் அத்தனை பேரும் இருக்காங்க. மூர்க்கமான அதிகார பலம் இருக்கு. ஒட்டு மொத்த ஊடகமும் அவங்கனோட கன்ட்ரோல்ல இருக்கு. அத எதிர்த்து போராடுற மத்தவங்க கிட்ட சொற்ப வீரர்கள் மட்டுந்தான்.

இது தான் களம். இதுக்குள்ள தான் ஆடனும். இந்த இடத்துல, எனக்கு அது இருந்தா செயிச்சிருவேன், இது இருந்தா செயிச்சிருவேன்னு வெட்டி வீராப்பு பேசி பிரயோசனம் கிடையாது. இது தான் சூழல். இதுக்குள்ள ஆட்டத்த ஆட மனதளவுல தயார் ஆகனும், ஆட்டத்த உன்னிப்பா கவனிக்கனும், பொறுமையா காய்கள நகர்த்தனும். எதிரி நகர்த்துறத பொறுத்து தான் நம்ம காய்கள நகர்த்தியாகனும். அதுக்கு அறிவ விட அதிக சாதுர்யம் வேணும். அது தான் அரசியல் சாணக்கியத்தனம்.

எதிரியோடு, அறத்தோட சண்ட போடனும், ஒண்டிக்கு ஒண்டி வரனும்னு பேசுறது கோமாளித்தனம் மட்டுமில்ல. தமிழ் நாட்டு அரசியல் இன்னும் புரியாத பால்வாடி பேச்சு. இப்ப சாதுர்யமா காய் நகர்த்தி செயிக்கிற சாணக்யன, கொண்டு வர வேண்டிய நேரத்துல, காலத்துல, தோ்தல்ல, சரியான எடத்துல கரெக்டா நாங்க நம்புற கடவுள் கொண்டு வருவாரு.

கிரேக்க புராணத்துல ஒரு கதை உண்டு. குறிப்பிட்ட நாள்ல கடவுளோட தூதர் குளத்த கலக்குவாரு. குளத்த சுத்தி பல நோயாளி இருப்பாங்க. அவரு கலக்குற குளத்துல முதல்ல யார் முங்கி எழுறாங்களோ, அவங்களுக்கு நோய் சுகமாகும். புராணம்ங்கிறது கதயோ, கற்பனையோ கிடையாது. மனித அறிவால புரிய முடியாத ஆன்மீக உண்மைய உணர்ற விதத்துல வெளிப்படுத்துற ஒரு சமய மொழி. அது வாழ்க்கயோடு தொடர்புடையது.

அதே மாதிரி 70 வருசத்துக்கு ஒருமுறை அல்லது ஒரு தலைமுறை மாற்றம் இயற்கையா, இயல்பா அரசியல்ல உருவாகும். வெற்றிடம். பெரியார் காலத்துல அது உருவாகிச்சி. முதல்வர் ஆகிற வாய்ப்பு பெரியாருக்கு கிடைச்சிச்சு. ஆனா அத புரிஞ்சிக்கிற ஆன்மீகம் அவரு கிட்ட இல்ல.

பகுத்தறிவ வச்சு சமயத்துல நடக்குற அநீதிகள தட்டிக் கேட்க தெரிஞ்ச பெரியாருக்கு அரசியல் அதிகாரம் தான் எல்லாத்தயும் நிர்ணியக்கிற சக்திங்கிறத ஆராய்ந்து பார்க்கிற ஆன்மீக அறிவு இல்லாததுனால அது புரியாம போச்சு. அலாவுதீனோட அற்புத விளக்கு தவறான ஒருத்தன் கிட்ட சிக்குன மாதிரி தப்பானவங்க கைக்கு அதிகாரம் கை மாறி போச்சு.

கடவுள் வரலாத்துல நோ்ல எப்பவும் வந்தது கிடையாது. யாருக்கும் காட்சி கொடுத்ததும் கிடையாது. அவரு வானத்துல இருந்து நம்மள பாத்துக்கிட்டு இருக்கிறவரும் கிடையாது. ராமரோ, இயேசுவோ, நபிகளோ இந்த ஒலகத்துல வாழ்ந்தப்ப எந்த மக்களும் அவங்கள ஏத்துக்கல. ஒருத்தவர காட்டுக்கு அனுப்புனாங்க. இன்னொருத்தர காட்டிக் கொடுத்து கொன்னாங்க. அடுத்தவர கல்லால எறிஞ்சி விரட்டுனாங்க.

நம்ம காலத்துல கடவுள் அயோக்கியன வேட்டையாட கத்தியோ, சூலாயுதமோ கொண்டு வர மாட்டாரு. ஏன்னா இது பண்ணையார் காலம் இல்ல. மக்களாட்சி. நம்ம காலத்துல வாழ்ற அரக்கனுக்கு கொம்பு இருக்காது. பரிணாம வளர்ச்சி அடைஞ்சி இருப்பாங்க. மக்களாட்சியில அவங்களோட வதம் நடக்குற காலம் தோ்தல் நேரமா மட்டுந்தான் இருக்க முடியும். மத்த நேரத்துல அவங்களோட பலம் ஆக்ரோசமா இருக்கும்.

மேஜிக் இல்ல, மந்திரம் இல்ல, தந்திரம் இல்ல. ஆனா கடவுளோட ஞானம் அவங்கள வீழ்த்தி மக்களோட வாழ்க்கையில ஒளியேத்தும். இது தான் வரலாத்துல நடந்திருக்கு. புராணமா மத நூல்கள்ல கடவுள் வெளிப்பட்ட விதமா சமய மொழியில பதியப்பட்டிருக்கு.

இப்படி தான் கடவுள் செயல்பட முடியும். இந்த கடவுளோட செயல்பாடு தமிழ்நாட்ல ஒரு தோ்தல்ல நம்ம காலத்துல கட்டாயம் நடக்கும், அரசியல் மாற்றம் வரும், ஆட்சியும் காட்சியும் மாறும். அது தான் நாங்க தொடர்ந்து பேசுற ஆன்மீக அரசியல். நம்ப வேண்டாம். ஒங்க ஒத்த ஓட்ட உருப்படியா போடுங்க.