திராவிட எலிகேசிகள்

திராவிட எலிகேசிகள்

திராவிட எலிகேசிகள்

பிப்ரவரி 13, 2022

வீர சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மண்டியிட்டார், மன்னிப்பு கேட்டார் என்று அவரை கேலி செய்யும் இந்த திராவிட சொங்கிகள் கூட்டம், நம் காலத்தில் மண்டியிட்டு மண் தின்ற வரலாற்றுப் பக்கங்களை கொஞ்சம் திருப்பி பார்ப்போமா?

நாட்டு நடப்புகள்

வீர சாவர்க்கர், வெள்ளையர்கள், கொள்ளையர்கள், ஒழுக்க சீலர்

இந்திரா காந்தியையும் அவரது சர்வாதிகார ஆட்சியையும் கடுமையாக சாடிய இந்த கொத்தடிமைகளின் சாணக்கிய தலைவர் ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக’ என்று குனிந்து, பணிந்து அடிமையாக இந்திரா முன்னிலையில் வசனம் பேசியது நினைவில்லையா?

காவியை தமிழகத்தில் கால் ஊன்ற விட மாட்டோம் என்று முன் தோ்தலில் கொக்கரித்து விட்டு பின் தோ்தலில் வாஜ்பாய் அவர்களோடு கூட்டணி வைக்க காலில் விழுந்து கதறி அழுத வீரம் புரண்ட காட்சிகளை தமிழகமே காறி துப்பியது நினைவில்லையா?

இந்த திராவிட தலைவர்களில் அறநெறி வழுவாதவர் யார்? இவர்களில் ஒழுக்க சீலர் யார்? உண்மையில் அறத்தைப் பற்றி பேசவோ, மற்றவரை குறை பேசி கிண்டல் செய்யவோ அருகதை இல்லாத இவர்களின் தனிப்பட்ட வாழ்வை தோண்ட ஆரம்பித்தால் கூவத்தை விட தாங்க முடியாத சாக்கடை நாற்றம் குடலைப் புரட்டுமே?

வீர சாவர்க்கரை கிண்டல் செய்வது இருக்கட்டும். ஊழல் செய்த வழக்கில் கைது என்கிற பேச்சு எழுவதற்கு முன்னதாகவே முன்ஜாமீன் கேட்டு போராடுகிற இந்த திராவிட தலைகளின் வீர தீர காட்சிகளை செய்திகளில் அன்றாடம் நாம் பார்த்தது கிடையாதா?

கைது நடந்தாலும் இதயத்தில் கை வைத்து நெஞ்சு வலி என்று நடித்து வீல் சேரில் உட்கார்ந்து மருத்துவமனையில் படுத்துக் கொள்கிற கேவலம் எந்த வகையான வீரத்தில் சேரும்? உலகமே அதிர்ந்து பார்த்த கின்னஸ் ரெக்கார்டான 110 முறை வாய்தா வாங்கியது தான் சிங்கத்தின் துணிவு கொண்ட வீரமா?

நள்ளிரவு கைதின் போது கத்தி கூப்பாடு போட்டார்களே! இவர்கள் ஆட்சியில் நள்ளிரவில் யாரையுமே கைது செய்ததில்லையா? இவர்களுக்கு விளக்கு பிடிக்க சூரியன் இருக்கிறது. ஆனால் சாமான்யர்கள் ஓடி ஒளிந்தால் சட்டத்தை மதிக்காத கோழைகள். அப்படியா?

வீர சாவர்க்கரை கிண்டல் செய்கிற இவர்கள் ஒன்றும் வீராதி வீரர்களோ சூராதி சூரர்களோ அல்ல. வெறும் கைதுக்கே பம்மி பதுங்கி பயந்து நடுங்கும் கோழைகள். வெட்டி பேச்சும், வீராப்பும் மட்டும் தான் இவர்களின் குல வழக்கம். இதையும் சிந்தித்து சீர் தூக்கிப் பார்க்கிற திறன் இல்லாது இது போன்ற 2 ரூபாய் திராவிட கொத்தடிமைகள் போடும் பதிவுகளை மற்றவருக்கு Forward செய்து நையாண்டி செய்கிற படித்த கோமாளி தமிழர்களை யார் வேப்பிலை அடித்து மந்திரிப்பது?

தாங்கள் செய்கிற அத்தனை குற்றங்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ள தொண்டர்களை உசுப்பேத்தி விட்டு அரசு பேருந்துகளுக்கு தீ வைத்து அப்பாவி மாணவிகள் மீது தங்கள் வீரத்தைக் காட்டிய கோரக்காட்சிகளை திராவிட அடிமை ஆட்சி நடந்த தமிழகத்தில் நம் காலத்தில் பார்த்தது கிடையாதா?

வீர சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினாராம். அதில் என்ன தவறை கண்டு விட்டார்கள்? அதில் என்ன கோழைத்தனத்தை இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்? ஆங்கிலேயர்கள் என்ன புனிதவான்களா, அவர்கள் சிறையில் அடைத்தவுடன் இந்தியர்கள் குற்றவாளியாகி விடுவதற்கு?அவர்கள் என்ன சட்டப்படி தான் இந்தியர்களை கைது செய்தார்களா? சிறையில் அடைத்தார்களா? செய்த குற்றத்திற்கு ஏற்ப தான் தீர்ப்பு வழங்கினார்களா?

அடுத்த நாட்டைச் சுரண்டி தின்னுகிறோம் என்கிற அடிப்படை குற்ற உணர்வே இல்லாத மிருக வெறி பிடித்த வெள்ளையர்கள் வெறும் பிணந் தின்னும் கழுகுகளே. இந்தியாவை சூறையாடிய கொள்ளைக்கார கூட்டமே. முழுக்க முழுக்க 420களே. இதில் வெளியே செல்ல என்ன வழி இருந்தாலும் அதை முயற்சித்துப் பார்ப்பது தானே சாதுர்யத்தனம்?

மன்னிப்பு கேட்டு சிறையை விட்டு வெளியே வர போராடுவதில் என்ன தவறு? போராடியாயிற்று. அதற்கான முடிவு நினைத்தது போல கிடைக்கவில்லை. இனிமேல் அடுத்து எப்படி தப்பிப்பது என்பது தானே யதார்த்தம்? நெப்போலியன் தப்பிக்க கொடுக்கப்பட்ட வரைபடத்தை அவன் பார்க்காமலேயே இறந்து விட்டான் என்று பதை பதைக்கிறது இந்த பகுத்தறிவு கூட்டம். நெப்போலியனுக்கு ஒரு நீதி, நம்மவர்க்கு ஒரு நீதியா? இது தான் கீழை நாட்டு சாக்ரடீசின் அளவுகோல் தத்துவமா?

நம் மக்களை மருந்துக்கும் மனிதனாகவே மதிக்காத ஆங்கிலேயர்களிடம் ஏன் அறத்தோடு சிறையில் கிடந்து வேதனை அடைய வேண்டும்? இப்படி வதைப்பட்டு சாவதை எந்த கடவுள் விரும்புவார்? இருக்கிற அத்தனை வாய்ப்புக்களையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவனை தப்பிக்க வைப்பது தானே கடவுளின் உணர்வாக இருக்க முடியும்?

அடிமைப்படுத்துகிற கொள்ளைக்கார வெள்ளையன் கொடுக்கிற தண்டனையை அப்படியே காலத்திற்கும் ஏற்று அடிபட்டுச் செத்தால் அது தான் வீரமா? அடுத்தவனை கொலை செய்து அவனை புனிதனாக்க வேண்டும், வீரவணக்கம் பாட வேண்டும். ஆனால் தன் குடும்பத்தில் ஊழலே செய்து தன் பிள்ளை சிறைக்குச் சென்றாலும் ஒட்டு மொத்த இனத்தையும் காவு கொடுத்தாவது அவளை வெளியே கொண்டு வந்து விட வேண்டும். இல்லையா?

இந்த திராவிட உத்தமர்கள் நடத்துகிற அறவழி போராட்டத்திலேயே எப்படி குள்ளநரிக்களாய் பதுங்கிக் கொள்வார்கள் தெரியுமா? ஆனால் இவர்களை நம்பிச் செல்கிற ஏமாளி தமிழர்கள் தாமிரபரணி மாஞ்சோலையிலும், இந்தி போராட்டத்திலும், ஸ்டொ்லைட் போராட்டத்திலும் நெஞ்சுக்கு நேரே நின்று குண்டடி பட்டு சாக வேண்டும்.

இவர்களுக்கு ஒரு நியாயம், சாமான்யனுக்கு ஒரு நியாயம். இது தான் இந்த பத்தறிவு திராவிட தலைகளின் அறநெறி கோட்பாடு. சாமான்யனை கோர்த்து விட்டு கொளுத்தி விட்டு பத்திரிக்கை அலுவலகத்தையே எரிக்கிற வேலையைச் செய்கிற அரசியல் கோட்பாடு.

வீர சாவர்க்கர் வாழ்க்கையை உயர்த்திப் பிடிக்கிற விமர்சனம் அல்ல இது. அதனைப் பற்றிய அக்கறையும் எங்களுடையது அல்ல. ஆனால் கொள்ளைக்கார வெள்ளையர்களிடம் தப்பிக்க ஒருவருடைய சூழலில் கால பிண்ணனியில் அவர் எடுத்த யதார்த்த முடிவை கேலியும் கிண்டலும் பேசி கேவலப்படுத்தவோ, அறவியல் விமர்சனம் செய்யவோ, ஒழுக்கப்பாடம் நடத்தவோ இந்த திராவிட தலைவர்களில் எவருக்கும் கடுகளவு யோக்கியதை இல்லை என்கிற நிதர்சனத்தைச் சொல்லவே எங்களின் இந்த விமர்சனம்.