சீனி வெடிகள்

சீனி வெடிகள்

சீனி வெடிகள்

பிப்ரவரி 16, 2022

ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யவே துறவு வாழ்க்கை வாழ்கிறோம் என்று துறவிகள் சொல்வது உண்மையா? கொரோனா காலத்தில் அவர்கள் சேவை செய்ய வந்த மக்களுக்காக செய்த அரிய பெரிய சேவை என்ன?

நாட்டு நடப்புகள்

கொரோனா, கல்விக்கடை, போதனை, பிரசங்கம், நாட்டுப்புற கதை

மேலே இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவின் சோக இசை கேட்பவரின் உள்ளத்தை கரைய வைக்கிறது. குரலில் உள்ள ஏற்ற இறக்க தொனி மனதை உருக வைக்கிறது. கொரோனா மரண சூழலில் இந்த செய்தியை கேட்ட அனைவரும் உடைந்து அழுது விட்டனர் என்பதற்கு வீடியோவிற்கு கீழே உள்ள அத்தனை கமெண்ட்களும் சாட்சிகள்.

கொரோனா சூழ்நிலை, விமர்சனம் செய்யவும் செய்கிற விமர்சனத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளவும் சரியான தருணமாக இருக்காது என்பதால் தான் குறைந்த தாமத காலத்தில் இந்த விமர்சனத்தை இப்போது பதிவிடுகிறோம்.

குருக்களும் மனிதர்கள் தானென்றால் “தன் மந்தைகளுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எவரிடத்திலும் இல்லை” என்கிற பிரசங்கம் எதற்கு? “வேதசாட்சிகளின் இரத்தம் விசுவாசத்தின் வித்து” என்று நீட்டி முழக்கி செய்கிற விசுவாச புரட்சி எதற்கு?

சாமியார்கள் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் சரி, ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும் சேவை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டுமா?

போிடர் காலத்தில் சாமியார்கள் மட்டும் Silent ஆக Safe ஆக இருந்து விட்டு மற்ற காலங்களில் சாமான்யர்களை மட்டும் Violent ஆக உசுப்பேத்தி விடும் ஏமாற்று போதனை பின் எதற்கு? அப்பாவிகளை உசுப்பேத்தி விட்டு அவர்கள் பலியாகினால் இல்லாத விண்ணகம் சென்றதாக புரூடா கதைகளை அவிழ்த்து விடுவீர்கள், நீங்கள் மட்டும் இந்த உலகத்திலேயே நீடுழி நிரந்தரமாக வாழ ஆசைப்படுகிறீர்கள். இல்லையா?

எச்சரிக்கையாக இருக்க சொல்வது வேறு, எரிகிற கொள்ளியில் நைசாக நழுவிக் கொள்ள பார்ப்பது வேறு தானே? மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி, இவர்களுக்கு வந்தால் மட்டும் இரத்தமா?

கடவுளை தூக்கிக் கொண்டு கூவி கூவி வியாபாரம் செய்து காசு பார்த்த இக்னேசியர்கள் கொரோனா காலத்தில் கூட இலவசமாக தெரு தெருவாக சுற்றி வர முடியாதா? இப்போது அவர்கள் போதித்த சக்திமானுக்கு பவர் இல்லையா?

ஒருவேளை கடவுளுக்கு நோய்க்கிருமி ஒட்டி அவர் இறந்து விடக்கூடாது என்கிற புனிதமான எண்ணம் போலும். கொரோனா காலத்தில் கோயிலுக்கு சென்றாலே ஒட்டிக் கொள்கிற கிருமியிலிருந்து காப்பாற்ற முடியாத இந்த கடவுளுக்கு மற்ற நாட்களில் வல்லமை வந்து விடுமா?

உயிரைக் கொல்லும் காலரா நோய் கப்பலை தாக்கியபோது தங்கள் உயிரையும் பாராது எம் முன்னோர் பணிவிடை செய்தார்கள் என்று முழங்கிய முழக்கம் எல்லாம் சீனி வெடி தானா கோபால்? “எல்லாமே கடவுளின் அதி மிகு மகிமைக்கே” என்கிற விருது வாக்கெல்லாம் வெறும் பொக்கு வெடி தானா கோபால்?

வட நாட்டில் மரித்த கமரேட்டுக்கு வணக்கம் செலுத்த திராவிட திருடர்களை அழைத்து வந்து கேவலமான பிண அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறீர்களே, வெட்கமாக இல்லையா? கூடன்குளம், மாஞ்சோலை, ஸ்டொ்லைட்டில் எளியவர்கள் அநியாயமாக சுடப்பட்டு கொல்லப்பட்டபோது ஒரு Twitter சுடு குஞ்சு கூட உங்களிடம் இருந்து வர வில்லையே?

பாவப்பட்ட ஒரு சாமியார் உடலில் குண்டு துளைத்த போது எதிர்ப்பு தெரிவிக்க ஆமை வேகம் கூட எழவில்லையே? உங்கள் குடும்ப உறவின் உயிருக்கு தான் மதிப்பு உண்டா? மற்ற உயிர்கள் எல்லாம் கிள்ளுக் கீரையா? திருட்டு திராவிடத்தின் குடும்ப அரசியலை அப்படியே வாழ்விலும் பிரதிபலித்து வாழ்கிறீர்களே?

ஏராளமான மனித உயிர்களை மிருகத்தனமாக வேட்டையாடி கொன்ற கறை சேவகர்கள் மனம் மாறி வரலாற்றில் ஜம்மென்று உட்கார்ந்து கொள்கிறார்கள். ஆனால் காலம் முழுவதும் புனித சேவகியாக வாழும் எம் மண்ணின் தாய்மார்கள் எல்லாம் ஞானசவுந்தரிகளாக நாட்டுப்புற கதைகளோடு கரைந்து விடுகிறார்கள்.

ஏடுகளில் மட்டுமே புரட்சி பேசிக்கொண்டு தங்கள் கல்வி கடைகளில் வியாபாரம் நன்றாக நடக்க அதிகார வர்க்கத்தோடு ஒட்டிக் கொண்டு பொய் கதைகளை மட்டுமே ஆவணப்படுத்த மெனக்கெடும் இது போன்ற அறிவுசார் முனிவர்களிடம் இருந்து புறப்பட்டு வரும் அத்தனையும் கடைந்தெடுத்த விஷமத்தன சிந்தனைகளே.

ஏனென்றால் இவர்கள் யதார்த்த வாழ்க்கையில் ஏழை எளிய, சாமான்ய மக்களின் வலியை உணர முடியாத பணக்கார ஏழ்மைத் துறவு வாழ்க்கை நடத்துகிறவர்கள். மருந்திற்கும் உதவாத வெற்று வாதங்களை அறிவார்ந்த தத்துவங்களாக விளம்பரம் செய்து அதனை அப்பாவிகளிடம் விதைத்து அவர்களை பலியாடுகளாக காவு கொடுத்து குளிர் காயும் அருவருப்பு அரசியல் செய்ய தெரிந்த சாதுர்ய கில்லாடிகள்.

கதை சொல்வதில் கைதோ்ந்த இவர்களின் வாழ்வியலுக்கு சிறந்த உதாரணம் ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை தான். இருக்க இடம் கொடுத்தால் ஒட்டு மொத்த கூடாரத்தையுமே சுருட்டி பட்டா போட்டு ஆட்டய போட்டு விடுவார்கள். முதலில் மதுரை பேராலய பிரச்சனைக்கு நியாயமான தீர்ப்பு சொல்லுங்கள். அதன் பிறகு மற்றவர்களுக்காக வாதாட உயர் நீதிமன்றம் செல்லலாம்.