காலத்தை கணிக்க முடிகிறவர் கடவுள்

காலத்தை கணிக்க முடிகிறவர் கடவுள்

காலத்தை கணிக்க முடிகிறவர் கடவுள்

அக்டோபர் 17, 2021

கடவுள் நம்பிக்கை

கடவுளும் சாதாரண ஜோசியக்காருன்னா, அவருக்கு பவரே கிடையாதா? இதல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

ஏங்க, நான் அப்படி சொல்லலயே? கடவுள் – னாலே, அவரு சக்திமான் தானுங்க!!! அப்படின்னா, கடவுள, நா எதுக்கு ஜோசியர் – ன்னு, சொல்லனும்?

ஒரு ஜோசியக்காரன்ட்ட நாம எதுக்கு போறோம்? எதிர்காலத்துல என்ன நடக்கும்னு அவருக்கு கணிக்க தெரியும்னு, நம்பிக்கையில போறோம்.

ஒருவேள ஃபியூச்சர்ல கண்டம் இருக்குன்னு சொன்னா, சொல்லவே வேண்டாம். ஏதாவது பரிகாரம் சொல்லுங்கன்னு, முந்திக்கிடுவோம்.

நம்மளோட பாதய மாத்திக்கிறது தாங்க பரிகாரம். பணமோ, பொருளோ, பதவியோ எது கொடுத்தாலும் அது வியாபாரம் மட்டுந்தாங்க!

இந்த வழியில போனா, இது தா நடக்கும்னு கணிச்சி சொல்றது தான் ஜாதகம். அது பயமுறுத்த இல்ல! "நம்ம நடக்கிற பாதய மாத்திக்க சொல்ற ஒரு அறிவுர!"

சரி, அத விடுங்க. இப்ப கடவுள எதுக்காக ஜோசியக்கார வேலையோட, நா கோத்து விடணும்?

கடவுளாலயும், எதிர்காலத்த, கணிக்க மட்டுந்தான் முடியும் - ங்கிறது தான், என்னோட வாதம். கணிச்சி அத ஒரு சில அடையாளங்கள் மூலமா, மனுசங்க மூலமா ஒணர்த்த வேண்டியவங்களுக்கு ஒணர்த்துறாரு! ஏன்னா, அவரால பேச முடியாது.

அவரு தா ஊமையாச்சே!. அவரு கணிச்சி சொல்றது, நம்மோட நல்லதுக்காகத்தான். அவருக்கு இது தேவையே இல்லீங்க! Everything Was Well-Programmed and Well-Ordered in the beginning. இதுக்கு மேல கடவுள் என்னங்க செய்யனும்?

நோகாம நொங்கு துன்னுறது தான நம்மளோட வேல! ஆனா, கொரங்கு புத்தி. கை சும்மா இருக்காதே? நோண்ட சொல்லும்! அத தா நாம செஞ்சி வச்சிருக்கோம்!

Order அ – Disorder பண்ணித் தொலைச்சிருக்கோம்! அதுக்காக கடவுள் தான் படைச்ச ஒலகத்த அழிய விட்டுற முடியுமா? படைச்ச பொறுப்பு இருக்குல்ல! தர்ம தேவதையா நீதிய நிலைநிறுத்துற பொறுப்பும் இருக்குல்ல!

கடவுளால ‘எதிர்காலத்துல நடக்குறத’ எப்படி கணிக்க முடியுது?ன்னு கேட்டா, என்னோட பதில், கடவுளுக்கு “நாம மனசுல என்ன “நினைக்கிறோமோ”, அத அறிஞ்சிக்கிற சக்தி இருக்கு”.

அந்த எண்ணத்த வச்சே நம்மள, அவரால நம்மோட சிந்தன ஓட்டத்த கணிக்க முடியும்’ன்னு சொல்றேன். நம்ம "முழு ஜாதகமும்" அவரோட கையில இருக்கும்! அது Perfect– ஆன கணிப்பா இருக்கும். ஆனா "கணிப்பு" மட்டுந்தான்.

நாம நினைக்கிறதை தான், அவரால கணிக்க முடியுமே தவிர, அது நடக்குமா? அத நாம நடத்துவோமான்னு, அவருக்கே தெரிய முடியாது! ஏன்னா "சுதந்திரம்" நம்மோடதுங்க.

அடுத்த நிமிசங்கிறதே 'புது ஸ்லேட்டுங்க!' அதுல என்ன எழுதனுங்கிறத முடிவு பண்ணுறது, நாம தாங்க.

நாம ஒண்ணு நெனச்சாலும், நாம நெனைக்கிறது எல்லாத்தையும், செய்றது இல்லையே? அத எப்படிங்க கடவுளால உறுதியா சொல்ல முடியும்?

செய்ய தேவயில்லாதத, செய்ய கூடாதத, செய்தா பழிபாதகத்துல முடியுங்கிறத “குத்த உணர்ச்சி” மூலமா, செய்யப்போற ‘கடைசி கணம்’ வர ஒணர்த்த முயற்சி எடுக்கிறாரு கடவுள். ஆனா, தடுத்து நிறுத்த முடியிற அந்த கயிற பாசத்தால மனுசங்களுக்கு சொதந்திரமா கொடுத்திட்டாரு. அதுதான் வினையில முடியப்போகுதுன்னு தெரியாம.

அதனால தான் சொல்றேன், இது தான் கடவுள், ஒவ்வொரு மனுசனுக்கும் கொடுத்திருக்கிற சுதந்திரம். அவனோட கணக்க, அவனே எழுதுற வரம். எழுதுன பெறகு, எத வச்சும் அழிக்க முடியாது. எழுதியது எழுதியதே!

அதனால நடக்கப்போறத கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது,

ஒருவேள, நீங்க நெனைக்கலாம். ஏதாவது ஆபத்துன்னா, அவரோட சக்திய வச்சு, தடுக்க முடியாதா?ன்னு. முடியும், ஆனா முடியாது! இயற்கை விதிங்களுக்கு முரணா அவரால பண்ண முடியாதே?

எந்த ‘மனுசன்’ மேலயும், தன்னோட எந்த பவரையும் பயன்படுத்தி, கடவுள் ‘இன்புளுவன்ஸ்’ பண்ணவும் கூடாதே! அப்புடி பண்ணுனா அது ‘சொதந்திரமும் இல்ல, நடக்கிறதுக்கு நாம பொறுப்பும் இல்லயே!’.

இத, இயற்கை நியதின்னு சொன்னாலும் சரி, கடவுள் ‘தலையிட’ முடியாத நிலையில இருக்காருன்னு நீங்களா புரிஞ்சிகிட்டாலும் சரி. இது ஒரு ஊகம் மட்டுந்தாங்க!

நாந்தான் ஏற்கெனவே சொன்னேனே, இது Just ஒரு Hypothesis. நம்புனா எப்புடி இருக்கும்னு ‘கற்பனை’ பண்ணிப் பாருங்க! காசா? பணமா? இலவசம் தானங்க!