கடவுளை படைத்தது யார்?
பிப்ரவரி 20, 2022
கடவுள் பாரபட்சம் காட்டுகிறவரா? பைபிள் சொல்வது போல இஸ்ரயேல் மக்களை கடவுள் தோ்ந்தெடுத்தாரா? கானான் நாடு கடவுள் வாக்களித்த நாடா? கடவுள் அடுத்த நாடுகளுக்கு எதிராக சண்டை போட்டாரா? அடுத்த நாட்டு வீரர்களை வாளுக்கு இரையாக்கினாரா?
கடவுள் நம்பிக்கை
இஸ்ரயேல், கடவுள், பாலும் தேனும், தாய், மீட்பின் வரலாற்றில்
கடவுள் எந்த காலத்திலும் இந்த உலகத்தில் தோன்றியதும் இல்லை. கடவுளை யாரும் பார்த்ததும் இல்லை. கடவுள் தங்களை தோ்ந்தெடுத்தார் என்பது அவர்கள் தங்களுக்காக எழுதிய இறையியல். அது ஒட்டு மொத்த உலகத்திற்கான உண்மை அல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட இனத்தின் தனிப்பட்ட பார்வை.
நாடோடிகளாக அலைந்து திரிந்த இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய தலைவர்களுக்கு ஒரு கட்டத்தில் நாடு பிடிக்கும் பேராசை ஏற்பட்டது. ஆனால் அவர்களிடம் வீரர்களும் இல்லை, போர் கருவிகளும் இல்லை, போர் தந்திரங்களும் தெரியாது. எனவே அறிவாளிகள் ஒன்று கூடி விவாதித்தனர். இறுதியில் கடவுள் என்னும் ஆயுதத்தை உருவாக்கினர். அந்த கடவுள் தான் அவர்கள் உருவாக்கிய யாவே இறைவன்.
பல மொழி பேசும் மக்கள் சோ்ந்து வாழ்ந்த வளம் கொழித்த பகுதியே கானான் தேசம். பாகால் என்னும் தெய்வ நம்பிக்கை கொண்ட அவர்கள் எல்லா மக்களின் கடவுளையும் ஏற்றுக் கொண்ட விசால மனம் படைத்தவர்கள். பாறையாக கிடந்த தரிசு நிலத்தை பாலும் தேனும் பொழியும் தேசமாக மாற்றிய விவசாயிகளே இந்த கானான் மக்கள். பாகால் தெய்வத்தின் அருளாக அதனை நம்பினர்.
வந்தாரை வரவேற்ற தேசம். அனைவரையும் வாழ வைத்த தேசம். ஆனால் அந்த நல்ல உள்ளமே அவர்களின் அழிவுக்கான பள்ளமாக அமைந்தது. அவர்களை வஞ்சகமாக தோற்கடித்து வீழ்த்தி கானானை கைப்பற்றிய வரலாறு தான் இஸ்ரயேல் தலையெடுத்த தொடக்கம். அதையே அவர்கள் மீட்பின் வரலாறாகவும் எழுதினர். இஸ்ரயேல் தலைகளின் பார்வையில் இது அவர்களுக்கான மீட்பின் வரலாறு. ஆனால் நாட்டை இழந்த கானான் மக்கள் பார்வையில்?
அடுத்தவரின் நாட்டை அபகரித்துக் கொண்ட பிறகு அதனை நியாயப் படுத்த ஒரு வரலாறு தேவைப்பட்டது. கடவுளும் தேவைப்பட்டார். அண்டை நாடுகளில் உலாவிய புராணங்களில் இருந்து இந்த ஒரே கடவுள் தியரியை படிப்படியாக உருவாக்கினர்.
எகிப்து, சுமேரியர், பாபிலோனியர், உகரித் போன்ற மத்திய கிழக்கு பகுதி நாடுகளில் இருந்து இரவலாக வாங்கி தங்கள் சொந்த இறையியலாக எழுதிய புராணக் கதைகள் தான் ஆதாம், ஏவாள், நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு கதைகள். உண்மையில் இவர்கள் நம்புவதாக சொல்லும் கடவுள் உலகத்தை படைக்கவில்லை. சொல்ல போனால் இந்த கடவுளையே படைத்தது இவர்கள் தான். கண், காது, மூக்கு வைத்து இவர்களாக உருவாக்கியது தான் இந்த ஒரே கடவுள்.
பிழைப்புக்காக தமிழகத்தில் தங்கி கூலி வேலை செய்யும் வட மாநிலத்தவரை எப்படி எல்லாம் வசவு பாடுகிறோம்? தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழ் மண் என்று சிறுபான்மை ஆன்மீக வாதிகள் வேறு தோ்தல் காலத்தில் சாமான்யரை உசுப்பேற்றி விடுகிறார்கள். தங்கள் நாட்டை இழந்து உயிரிழந்த அந்த கானான் தேசத்து மக்களுக்கு இந்த ஆன்மீகவாதிகள் என்ன பதில் சொல்ல முடியும்? கடவுளின் விருப்பம் என்றா? இதையே வடநாட்டவர் இவர்களுக்குச் செய்தால் ஏற்றுக் கொள்வார்களா?
அடுத்தவர் நாட்டை அநியாயமாக பறித்து தனக்கு பிடித்தவருக்கு கொடுப்பவர் கடவுளாக இருக்க முடியுமா? ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு தடவிய தாய்மார் உண்டோ? சொந்த நாட்டு மக்களின் பெண்கள், குழந்தைகளை வாளால் வெட்டி கொலை செய்து அடுத்தவர் குடியேற வழிவகுக்கும் மாபாதகத்தை கடவுளா செய்ய சொல்வார்? உயிரோடிருந்த ஆண்களை கொத்தடிமையாக நடத்த கடவுளா அனுமதிப்பார்?
ஒருபுறத்தில் கொத்தடிமையை ஆதரித்து விட்டு மறுபுறத்தில் இஸ்ரயேல் மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்டவர் எப்படி உண்மையான கடவுளாக இருக்க முடியும்? எந்த தாயாவது தன் பிள்ளைகள் நடுவில் பாரபட்சம் காட்டுவாளா? அப்படி காட்டுகிறவள் தாய் என்கிற பெயருக்கு பொருத்தமாக இருக்க முடியுமா? பின் எப்படி கடவுளை மட்டும் இவ்வளவுக்கு மட்டுந் தட்டி நம்பிக்கை என்கிற பெயரில் பேச நம்க்கு தைரியம் வருகிறது? பேசாத கடவுளுக்கு வசனம் எழுதியவர் யார்? கொடூரராக சித்தரித்தது யார்?
எத்தனை பிள்ளை பெற்றாலும் அத்தனை பேரையும் அன்பு செய்கிறவளே ஒரு தாய். ‘ஒரே மாதிரியான அன்பு காட்டவில்லை’ என்று தாயன்பை கொச்சைப் படுத்தினால் அது பிள்ளைகளின் மூடத்தனமே. ஏனென்றால் தாயன்பு குறை சொல்ல முடியாதது.
தந்தை, தாய் அன்பில் தாயன்பே சிறந்தது. ஆண், பெண்ணில் சமத்துவம் இல்லை. பெண்ணே உயர்ந்தவள். ஆண், பெண் சமத்துவம் பேசுவதே அருவருப்பானது. பெண்ணே முதன்மை. முதலில் படைக்கப் பட்ட மனிதன் ஆணாக இருக்கலாம். ஆனால் கடவுள் பெண் தானே? எல்லாருக்கும் தாய் அவள் தானே?
மீட்பின் வரலாற்றில் கடவுள் வழி நடத்தவில்லை. கடவுளையே இவர்கள் தான் இழுத்து சென்றார்கள். தாங்கள் விரும்பியபடி வசனம் எழுதி கைப் பொம்மையாக ஆட்டுவித்தார்கள். தங்களின் கீழ்த்தரமான செயல்களுக்கு கடவுளின் பெயர் கொடுத்து நியாயப் படுத்தினார்கள்.
எரிபலிகள் படைத்தால் எத்தகைய பாவத்திலிருந்தும் தப்பி விடலாம், கடவுளையே குளிர்வித்து விடலாம் என்கிற புரூடா தத்துவத்தை உலகத்திற்கு முதன் முதலில் அறிமுகம் செய்த மாமேதைகள் இவர்களே.
ஒரே கடவுள், அவர் மட்டுமே உண்மையான கடவுள் என்கிற ஆதிக்க வெறி பிடித்த சிந்தனையின் ஜீவ ஊற்று இவர்கள் தான். சாதி, மதம், நிறம், இனம் என்ற பிரிவினை ஆக்டோபசாக இன்றைக்கு மனிதத்தை இறுக்கி நசுக்குவதின் மூலப் பத்திரமே இவர்கள் தான்.
ஆதிக்க வெறி கொண்ட அறிவுச் செருக்கு உதவா கரைகளை தோ்ந்தெடுக்க கடவுள் முட்டாளும் இல்லை. ஐந்தறிவு மிருக மனநிலை கொண்ட இவர்களுக்காக இரக்கமில்லாது மற்றவர்களைக் கொல்ல சொல்ல கடவுள் மனச்சாட்சி இல்லாதவரும் இல்லை. கடவுள் ஒரு தாய். அவள் அனைவருக்கும் தாய். எல்லாருக்கும் பொதுவான தாய். யாரையும் தோ்ந்தெடுத்து மற்றவர்களை கொலை செய்ய சொல்லும் கொலைகாரி அல்ல அவள்.
ஆதிக்கம் செலுத்தி மற்றவரை அடிமைப் படுத்த நினைக்கும் எதுவும் கடவுளிடம் இருந்து வர முடியாது. அது சைத்தானிய கூட்ட கூலிப் படைகளிடம் இருந்தே தோன்ற முடியும்.