தமிழக வாக்காள பெருமக்கள்

தமிழக வாக்காள பெருமக்கள்

தமிழக வாக்காள பெருமக்கள்

பிப்ரவரி 25, 2022

வட மாநிலத்தவரை விட தமிழர்கள் அறிவிலும், பகுத்தறிவிலும் வளர்ந்தவர்களா? தமிழர்களை எவரும் ஏமாற்ற முடியாதா? தமிழக வாக்காள பெருமக்கள் சிந்தித்து வாக்களித்து தீர்ப்பு எழுதுகிறவர்களா? உள்ளாட்சி தோ்தல் முடிவு சொல்லும் செய்தி என்ன?

நாட்டு நடப்புகள்

வாக்கு வங்கி, சின்னங்கள், கூத்தாடிகள், உள்ளாட்சி தோ்தல்

வாக்கு என்றால் என்ன? வாக்கின் வலிமை என்ன? வாக்கு செலுத்தும் போது இருக்க வேண்டிய பொறுப்பு என்ன? என்கிற அடிப்படை அறிவு இல்லாது இண்டர்நெட் யுகத்திலும் வாக்களிக்க தகுதியே இல்லாத ஒரு கூட்டம் இந்த பாரத தேசத்தில் இருக்கிறது என்றால் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழகமே.

அறிவோ, சிந்தனையோ வளராத இங்குள்ள பல வாக்காள பெரு மக்களுக்கு பரிணாம வளர்ச்சியும் முழுமை பெறாது குறை மாசத்திலேயே நின்று விட்டதற்கான அறிகுறியே திராவிட கேவல ஆட்சி முறையை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக அனுபவித்தும் தொடர்ந்து வாக்களிக்கும் பரிதாப காட்சிகள்.

இரும்பு, கரும்பு, பருப்பு என்கிற அடுக்கு மொழி பேச சிலரையும், இறந்து போன தலைவர் வேடங்கள் புனைந்து சிலரையும், சினிமா கூத்தாடிகள் போல் மாறு வேடம் கட்டி பலரையும் கூட்டிச் சென்று வாக்கு சேகரிக்க சென்றாலே ஒட்டு மொத்த வாக்குகளையும் கறந்து விடலாம் என்பதற்கு தற்போதைய உள்ளாட்சி தோ்தல் ஆதாரம்.

கூத்தாடிகளை திரைகளில் கூத்தாட வைத்தும் அவர்களை காண விருப்பம் காட்டிய மக்களை ஏமாற்ற அரசியல் மேடைகளில் நிற்க வைத்தும் அன்றைக்கே செய்த திரைக் கவர்ச்சி அரசியலை இந்த திராவிட கூட்டம் இன்றளவும் கூசாது பின்பற்றி வருகிறது.

சொற்புத்தியோ சுயபுத்தியோ இல்லாத இங்கு வாழும் ஆண்கள் பலருக்கு குடிக்க ஒருவேளைக்கு குவார்ட்டர் வாங்கி கொடுத்தாலே ஏமாற்றி விடலாம். பெண்களுக்கு பரிசுப் பொருளாக பாத்திரம் கொடுத்தாலே அம்புட்டு ஓட்டையும் வாறி இறைத்து விடலாம். சீரியல் நடிகைகளை களம் இறக்கினால் மிஞ்சியிருக்கிற ஓட்டுக்களையும் தட்டிச் சென்று விடலாம். திரைத்துறையே தமிழக அரசியலை நிர்ணயிக்கிற துர்பாக்கிய நிலை.

எளிதில் உணர்ச்சி வயப்பட்டு ஏமாந்து போகிற இந்த கொத்தடிமை வாக்காளர்களின் மனநிலையை ஏமாற்று திருட்டு கூட்டம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. இவர்களோடு நின்று அறவியல் பேசி மோதுவது தலையைக் கொண்டு பாறையை முட்டுவதற்கு சமம்.

மதவாதம் என்று மாற்றுக் கட்சியினரை பேசினாலும் இந்தி எதிர்ப்பை கையில் தூக்கினாலும் இலவச திட்டங்களை வெறுமனே அறிவித்தாலே போதும், வெற்று வார்த்தைகளை நயமாக பேசினாலே வாக்குகளைச் செலுத்தி விடும் வக்கற்ற இனம் தமிழினம். உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்தாலே ஒரு தலை முறைக்கு இவர்களை ஆண்டு விடலாம்.

ஐந்து ஆண்டுகளில் ஆற்று மணல் வரை கொள்ளை அடித்து விட்டு போராடிய ஏழை எளிய சாமான்ய மக்களை சுட்டு கொலை செய்து விட்டு குற்ற உணர்ச்சியே இல்லாமல் தோ்தல் நேரத்தில் காதுகளில் மைக்கை மாட்டி ஒரு பிளாஸ்டிக் மண்வெட்டியை தூக்கி நானும் விவசாயி தான் என்றாலே கை தட்டி விசில் பறக்க செய்யும் இரத்தத்தின் இரத்தம் ஒரு பக்கம்.

சிமெண்ட் ரோடு போட்டு சூட்டிங் நடத்தி வாய்க்கால் வரப்பில் நடக்கும் தங்கள் தலைவரைப் பார்த்து புளங்காகிதம் அடையும் கொத்தடிமை உபிஎஸ்கள் மறுபுறம். இந்த வாக்கு வங்கி என்றைக்குமே இரண்டு பேருக்கும் குறைவுபட போவதில்லை.

வெற்றிடம் நிரம்பி விட்டது என்று மார்தட்டும் இந்த இரண்டு திராவிட கட்சிகளின் சின்னங்களையும் ஒரு தோ்தலில் பறித்து வேறு சின்னத்தில் நிற்க வைத்து தோ்தலை நடத்தினால் திராவிட கட்சி தலைவர்களுக்கு கூட டெப்பாசிட் தொகை கூட மிஞ்சாது. சின்னங்களே இங்கு வெற்றியை தீர்மானிக்கின்றன. மற்றபடி பகுத்தறிவும் வளரவில்லை, பரிணாம வளர்ச்சியும் இங்குள்ளவர் இன்னமும் அடையவில்லை. சிறுபான்மை ஆன்மீகமும் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறையாகவே இருக்கிறது.

திராவிட கட்சிகளின் சின்னத்தில் ரவுடிகளை, கொலை, கொள்ளை, கடத்தல் வழக்கு உள்ளவரை வேட்பாளராக நிற்க வைத்தாலும் சின்னங்களைப் பார்த்து மட்டுமே ஓட்டு குத்தும் கொத்தடிமைகளின் கூடாரம் கண்டிப்பாக வெற்றி பெற வைத்து விடும்.

உண்மையில் கீழடியை மேற்கொண்டு தோண்டிப் பார்க்காமல் மூடி விடுவதே நல்லது. இல்லை யென்றால் பகுத்தறிவு பூமி என்று வீராப்பு பேசுகிற இப்போதே தமிழக மானம் இந்த பாடு படுகிறது என்றால், இதற்கு முந்தைய வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால் என்ன நாற்றம் எடுக்க போகிறதோ?