மதநூல்களை படிப்பது எப்படி?
மார்ச் 18, 2022
இந்து மதம் புராண மதமா? மந்திர கதைகளும் மாயா ஜாலா கதைகளும் கற்பனை உலகமா? நிஜத்தில் நடக்க முடியாத பொய் கதைகள் தானே? அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானது தானே? கிறிஸ்தவ மதம் வரலாற்று மதம் தானே?
கடவுள் நம்பிக்கை
புராணம், ஆன்மீக நூல், அடையாள மொழி
மத நூல்களில் உள்ள நிகழ்வுகளைப் பற்றி பகுத்தறிவு கேட்கும் கேள்விகள் நியாயமாக தோன்றுவதற்கு காரணம் ஆன்மீகத்தை போதிக்கிறவருக்கு, அந்த போதனையைக் கேட்கிற பக்தர்களுக்கும் மதநூல்களை எப்படிப் படிக்க வேண்டும் என்கிற பார்வை இல்லாதது தான்.
புராணம் என்பது கட்டுக் கதை அல்ல. மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத ஆன்மீக உண்மையை வெளிப்படுத்தும் ஒரு சமய வடிவ மொழி. அதில் வரலாறும் இருக்கிறது, வழிகாட்டும் உண்மையும் இருக்கிறது. பைபிளும் வரலாற்று நூல் அல்ல. பைபிளை தவிர்த்த வரலாற்று நூல்களில் இயேசுவைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. இப்படி பார்த்தால் பைபிளும் புராண நூலே.
மதநூல்கள் எதுவுமே நமக்கு அறிவியலை கற்றுத்தரவோ வரலாற்றை விவரிக்கவோ எழுதப்பட்டவை அல்ல. அது இறை அனுபவ பதிவு நூல். ஆதாரங்கள் அடிப்படையில் அல்ல, நம்பிக்கை அடிப்படையில் வாசிக்கப் பட வேண்டிய நூல். It should not be read LITTERALLY rather SYMBOLICALLY.
மாயா ஜால கதைகள் என்பது பழைய கால இலக்கிய உலகில் பயன்படுத்த பட்ட ஒரு சமய அடையாள மொழி. திரைப்படத்தில் ஒரே பாடலில் கதாநாயகன் ஏழ்மையிலிருந்து பணக்காரராக மாறுகிற சினிமா மொழி போல.
பொதுவாக ஆன்மீக நூல் என்பது இறையனுபவம் பெற்ற ஒருவரின் நினைவிலிருந்தோ (Memory - (That which is remembered) – Smruti), கேட்டதிலிருந்தோ (Hearing - That which is heard - Sruti), அனுபவத்திலிருந்தோ (Experience – That which is experienced - Anubhava) எழுதப்படுவது ஆகும். இது குறிப்பிட்ட காலத்தில் ஒரு மதத்தின் புனித நூலாக அடையாளம் தரப்பட்டு ஏற்கப்பட்டது.
அதே போல இந்த மத நூல்கள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக எழுதப்பட்டது. அது நம் காலத்திற்காக எழுதப்பட்டது அல்ல. பைபிளும், குர்ஆனும் அது தோன்றிய நாட்டு மக்களுக்காக எழுதப்பட்டது. பாரத நாட்டு மக்களுக்காக அல்ல. காலனி ஆதிக்கம், படையெடுப்பே மதங்கள், மத நூல்கள் பரவி குழப்பம் வித்திட்டது.
எல்லாமே கடவுள் அனுபவத்தின் வெளிப்பாடு தான். கடவுள் ஒருவரே. எல்லா இடத்திலும் அவரை அனுபவிக்க முடியும். அந்த அனுபவம் அந்தந்த கலாச்சார, பண்பாடு, அறிவு வளர்ச்சி பிண்ணனியில் புரிந்து கொள்ளப் பட்டது. ஏடுகளில் எழுதப்பட்டது. அனைத்தும் உண்மையே. புரிந்து கொண்டதில் தான் தவறு இருக்கிறது.
மத நூல்களில் நாம் வாசிக்கும் மந்திரங்கள் ஒரு வகையான அடையாள மொழியே (Symbolic Language) தவிர, மூட நம்பிக்கைகள் அல்ல. இதில் வார்த்தைகள் முக்கியமல்ல, அதற்குள்ளே மறைந்து கிடக்கும் கடவுளின் மொழி தான் முக்கியம். அது புரிய ஆழமான ஆன்மீக அறிவும், அனுபவமும் வேண்டும்.
எல்லா மத நூல்களுமே தவறாக புரிந்து கொள்ளப் படுவதற்கு காரணம் சரியான முறையில் விளக்கம் கொடுக்க தெரியாததே. சரியாக விளக்கம் கொடுக்காமைக்கு அறியாமை, அறிவின்மை, மூடத்தனம், மூர்க்கத்தனம், மூடநம்பிக்கை, ஆதிக்க வெறி என்பது காரணம்.
உதாரணமாக, வர்ணாஸ்ரம தர்மம் என்பது ஒரு சமூகம் எப்படி இருந்தால் சிறப்பாக இயங்கும் என்பதை நம் உடலோடு பொருத்திப் பார்த்து விளக்கும் அருமையான தத்துவம். ஆனால் காலப்போக்கில் அது திராவிடத்தால் அரசியல் ஆதாயம் பெற தவறாக விளக்கப்பட்டு வெறுப்பு உருவாக காரணமாகியது.
நம் உடலில் கை, காலில் எது பெரிது? என்று கேட்டால் கேட்கிறவன் பைத்திய காரன் தானே? அத்தனையும் இயங்கினால் தானே நகரவே முடியும்? இதில் ஏற்றத்தாழ்வு ஏன்? இதில் நாம் பார்க்கும் குலக்கல்வி முறையிலும் தவறு ஒன்றுமில்லை. அதனை தவறாக திரித்துக் காட்டி தோ்தல் அரசியலில் வாக்கு லாபம் அடைய துடிப்பதும் திராவிட குள்ள நரிகளின் பிரிவினை அரசியலே.
மீனவனின் மகன் கடல் தாயிடம் செல்ல மறுப்பானா? பனையேறியின் மகனுக்கு இயல்பாக மரத்தின் மீதேறும் வித்தை வந்திடாதா? அதனை அவன் தானே இயல்பாக செய்ய முடியும்? விரும்பியவரும் செய்ய தடை இல்லையே? விருப்பம் இல்லை என்றால் விரும்பிய மற்றதை தோ்வு செய்யலாமே? இது தானே குலக் கல்வி? அரசியல் லாபத்திற்காக புகுத்தப்பட்ட சமச்சீர் கல்வியை விட இது தரமான கல்வியாயிற்றே?
மக்களாட்சியில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வைத்திருப்பது ஆன்மீகம் அல்ல, திராவிட பகுத்தறிவு. ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவருக்கு மட்டும் ஏன் அநியாய சம்பளம்? போலீசுக்கும், வாத்தியாருக்கும் மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள்? படித்தவன் உயர்ந்தவன், படிக்காதவன் தாழ்ந்தவன் என்கிற ஏற்றத்தாழ்வை வளர்த்தது திராவிடம் இல்லையா?
பணம் தான் ஏற்றத் தாழ்வு உருவாக்கி மக்களை பிரித்துக் காட்டுகிறது. அரசுப் பணி என்றால் அதிக சம்பளம் என்பது என்ன நியாயம்? உடல் உழைப்பிற்கு உயர் ஊதியம் தராதது யாருடைய பிரச்சனை? அரசா? ஆன்மீகமா? எல்லா தொழிலுக்கும் நியாயமான சம்பளம் கொடுத்தால் அத்தனை பணிகளைச் செய்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவார்களே? எல்லாமும் தேவை தானே? ஐம்பது ஆண்டு கழித்து பிளாஸ்டிக் அரிசியா தின்ன ஆசைப் படுகிறோம்? பேப்பர் முட்டை செய்தா ஆம்லெட் செய்ய போகிறோம்?
ஐந்து வருட எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் என்றால் கடல், பனை, விவசாயம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஏன் ஓய்வூதியம் வழங்குவது பற்றி இதுவரை இந்த திராவிட மங்குனிகள் சிந்திக்க வில்லை. வரி கட்ட வில்லையா? உடல் உழைப்பை தர வில்லையா? எம்எல்ஏக்களை விட எதிலே தாழ்ந்து போய் விட்டார்கள்? ஏற்றத் தாழ்வு உருவாக்காத சம்பளத்தைக் கொடுத்தால் அத்தனை பேரும் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் கொடுத்தால் இங்கு பிரச்சனை எதுவும் உருவாகாதே?
கடவுள் நம்பிக்கையை கொச்சைப் படுத்தி, எள்ளி நகையாடி ஆட்சியைப் பிடித்த திராவிடத்தை எதிர்க்க மத நூல்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்கிற பார்வை மாற்றத்தை பக்தர்களுக்கு கொடுத்தாலே திராவிடம் ஊசிப் போன குருமா ஆகிவிடும். திராவிட குடிகார கூடாரம் தகர்ந்து விழும்.