நடப்பதை தடுக்க முடியாதவர் கடவுள்
அக்டோபர் 20, 2021
கடவுள் நம்பிக்கை
வாழ்க்கையில என்ன முடிவு எடுத்தாலும், ‘நா’ தான் பொறுப்புன்னா, காலம்பூரா கடவுள எதுக்காக புடிச்சிகிட்டுத் தொங்கனும்?
நீங்க கோயிலுக்குப் போனாலும் சரி, போகலனாலும் சரி. நீங்க நோ்த்திக்கடன் செஞ்சாலும் சரி, செய்யலனாலும் சரி, முட்டுப்போட்டு நடந்தாலும் சரி, நடக்கலன்னாலும் சரி,....
மொட்டை அடிச்சாலும் சரி, அடிக்கலன்னாலும் சரி, நீங்க யோக்கியனா இருந்தாலும் சரி, அயோக்கியனா இருந்தாலும் சரி. கேட்டாலும் சரி, கேட்கலன்னாலும் சரி, ஒறுத்தல் இருந்தாலும் சரி, இல்லன்னாலும் சரி.....
அதுக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் துளியளவு தொடர்பும் கிடையாது!
நீங்க செய்ற எதுவும் ஒங்க வாழ்க்கையில எந்த மேஜிக்கயும் பண்ணப்போறதில்ல! நீங்க செய்யாததுனால அது ஒங்களுக்கு சாபமாவும் மாறப்போறதில்ல! நடக்கிறது நடந்தே தீரும்!
இத உங்களால ஏத்துக்க முடியாதுன்னு தெரியும்? ஏன்னா, கடவுளுக்கு முக்காலமும் தெரியும், அவரோட சக்திக்கு ஈடு இணையே கிடையாது – அப்படிங்கிறது உங்க வாதம். அதனால, நான் சொல்றத நம்ப மாட்டேன்னு, சொல்வீங்க.
சரி, நீங்க சொல்ற வாதத்த தான, 2000 வருசமா சொல்லிகிட்டு இருக்கீங்க. ஒங்க கேள்விக்கு பதில் கிடைச்சிருக்கா? இல்லையே?
அப்படின்னா, ஒரே ஒரு தடவ இப்புடி யோசிச்சுப் பாக்கலாமே? காசா, பணமா? இலவசம் தானங்க!
இது ஒங்களோட மனக்கோட்ட தானங்க! நீங்க யாரு கோட்டயயும் புடிக்கலியே ? புடிக்கலன்னா எந்த நிமிசமும் உதறி தள்ளிரலாமே? இன்னமும் சொதந்திரம் ஒங்க கிட்ட தானங்க இருக்கு! நா புடுங்கலியே?
இப்ப, உங்க வாதத்துக்கே வார்றேன். கடவுளுக்கு நீங்க சொல்ற மாதிரி, நாளைக்கு நடக்குறது, எதிர்காலத்துல நடக்குறது தெரியும்னா, பகுத்தறிவாதிங்க கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்குல்ல!!!
பகுத்தறிவு கேக்குற கேள்விங்களுக்கு ஆன்மீகமும் காலத்துக்கு ஏத்தாப்ல பதில கொடுக்கனுமில்ல! கடவுள் இருக்குறார்னு நம்புறீங்கன்னா நீங்க எதுக்காக பயப்படனுங்க? நீங்க எதுக்காக பொங்கனுங்க?
கஷ்டத்துல இருக்குற மக்களுக்கு ஆறுதல் சொல்றது மட்டும் ஆன்மீகவாதிகளோட வேல இல்லீங்க!
கடவுள பத்தின கேள்விகளுக்கு, காலத்துக்கு ஏத்த சரியான பதிலயும், கடவுள பத்தின ‘காலத்துக்கேத்த’சரியான புரிதலயும் கொடுக்க வேண்டிய பொறுப்பும் இருக்குதுங்க!
இப்பவும் நீங்க, பாரம்பரியத்த பிடிச்சி தொங்கிட்டு இருந்தா……
- எனக்கு வர்ற எல்லா கஷ்டமும் தெரியும்னா, ஏன் காப்பாத்தல? கஷ்டத்த பாத்து சிரிக்க அவரு ‘ஸடிஸ்டா’?
- ‘கொரோனாவ’ கடவுள் ஏன் ‘Allow’ பண்ணுனாரு? மனுசனே தப்பு செஞ்சிருந்தாலும், அப்பாவிங்க எதுக்காக சாகனும்? சுனாமி நேரத்துல ‘அப்பாவி’ங்க தான செத்தாங்க?
- தப்பு செய்யுறவன கடவுள், முதல்லேயே தடுத்து நிறுத்துனா, அப்பாவிய காப்பாத்தியிருக்காமே? தப்பு செஞ்சவங்கள நடமாட விட்டுட்டு, காரணமே தெரியாதவங்க ஏன் சாகனும்?
- எல்லாமே விதிப்படி தான் நடக்கும்னா, நாம அம்புட்டு பேரையும் கொல பண்ணிட்டு, பால் வடிய முகத்த வச்சிகிட்டு, “கடவுள் எனக்கு விதியா எழுதி வச்சுட்டான்னு” சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாமே???
- "நான் கஷ்டப்படனும்னு எனக்கு தலவிதிய எழுதுற சக்திக்கு பேரு, கடவுளா இருக்க முடியுமா?"
- நல்லவங்க நல்லது செஞ்சதுக்காக, செத்துருக்காங்க! அலக்கழிக்கப்படுறாங்க, அட்லீஸ்ட் அவுங்களயாவது முக்காலமும் தெரிஞ்சவரு, காப்பாத்தியிருக்கலாமே?
இந்த கேள்விங்களுக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா? முடிஞ்சா முயற்சி பண்ணி பாருங்களேன்! ("முயற்சி திருவினையாக" வாழ்த்துகள்)...