பொய் மூட்டைகள்

பொய் மூட்டைகள்

பொய் மூட்டைகள்

மே 08, 2022

நாம் வாழும் தமிழகத்தில் திராவிடர் கூடம் பல பொய் மூட்டை கதைகளை எளியவரின் சிந்தனையில் தந்திரமாக திணித்து இருக்கிறது. அறிவியல், ஆன்மீகம், உளவியல் என்கிற அழகு மொழியில் அடுக்கடுக்காக உலா வரும் இந்த பொய் மூட்டைகள் சிலவற்றை திறந்து பார்ப்போமா?

நாட்டு நடப்புகள்

விடாமுயற்சி, தன்னம்பிக்கை, திறமை, உழைப்பு

விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்வில் எதையும் சாதித்து விடலாம், கடின உழைப்பு இருந்தால் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை என்பது திராவிட பகுத்தறிவு நம் காலத்தில் விதைத்த தூக்க முடியாத பொய் மூட்டை. இதனை அண்டப் புளுகு, ஆகாச புளுகு என்று கூட சொல்லலாம்.

உண்மையில் நன்றாக படிக்கிற குழந்தை, மனப்பாட சக்தி நிறைந்த குழந்தை, விளையாட்டு திறன் நிறைந்த குழந்தையை தீர்மானிப்பது விடா முயற்சியோ, தன்னம்பிக்கையோ, கடின உழைப்போ அல்ல, அந்த குழந்தையின் உடல் மூலக்கூறான ஜீனே (Gene) நிர்ணயம் செய்கிறது. ஒரு குழந்தை கருவாக உருவாகிற போதே அந்த குழந்தையின் திறன்கள் முடிவு செய்யப் பட்டு விடுகிறது. அந்த குழந்தை வளர வளர அது இயற்கையாக மெருகேறுகிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் இயல்பான திறன் இருக்கும். பாட்டு, விளையாட்டு, படிப்பு, விஞ்ஞான அறிவு இப்படி பல. இவை எல்லாமே இயல்பாக, இயற்கையாக தனி நபருக்கு கிடைப்பதே. வளர்த்துக் கொள்ள முடிவது அல்ல. ஆர்வம் இருந்தாலும், ஆசை இருந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்க்கப் பெறுவதும் அல்ல. இந்த திறன்கள் அத்தனையும் ஒரு சமுதாயம் சுமூகமாக நகர தேவையே. இவற்றுள் குறிப்பிட்ட திறனுக்கு திறமை என்கிற அரசியல் அடையாளம் கொடுத்து ஏற்றத் தாழ்வை உருவாக்குவது திராவிட குள்ள நரி அரசியலே.

அறிவையோ, திறனையோ கண்டிப்பாக உழைப்பாலோ, விடா முயற்சியாலோ எப்போதும் பெற முடியாது. முடியும் என்று சொல்வது முழுக்க முழுக்க பொய்யே. இருக்கிற இயல்புகளை விட்டு விட்டு பறக்கிற செயற்கைக்கு தாவி ஓடும் ஆய்வக குரங்குகளாக நம் குழந்தைகளை மாற்றுவதே இதன் தந்திர அரசியல். நம்மை ஆள்கிறவர்களின் கபட நாடக அரசியல்.

மார்க் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரிப்பது, தோ்வுக்கு தயார் செய்வது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தீர்மானம் செய்வது குடிமக்களை கேவலப்படுத்துகிற செயலே. ஆள்கிறவர் அறிவில்லாதவர் என்பதன் ஆதாரமே. மக்களாட்சியில் இப்படி அறிவில்லாதவர்களை ஆள தோ்ந்தெடுக்கிற தமிழக மக்களும் புத்தி இல்லாதவர்களே.

நீ Introvert, இவன் Extravert, அவள் Ambivert என்கிற உளவியல் அடிமைச் சங்கிலி வகைக்குள் நம் குழந்தையின் தனித்துவத்தைச் சிறைப்படுத்தி அதன் இயல்பான குணத்தோடு வளர விடாமல் ஒட்டு மொத்த உலகத்தின் குழந்தைகளையும் மூன்றே வகைக்குள் அடிமைப் படுத்தி அறிவியல் மூர்க்கம் வெற்றி பெறுகிறது.

நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம், ஐபிஎஸ் ஆகலாம் என்பது வியாபாரம் செய்ய பயன்படும் விளம்பர வாசகங்களே. தன் பெயரில் புத்தகம் வெளி வர எவனோ ஒருவன் எழுதும் தற்புகழ்ச்சி வரிகளே. எல்லாராலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக முடியாது. மனப்பாடம் செய்யும் திறனும், அன்றைய தோ்வில் அதிர்ஷடமும் இருக்கிற குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். சாதனை என்பதே வணிக உலகம் நம் மீது திணிக்கும் மிகப் பெரிய தந்திரமே.

புரட்சி கர சிந்தனைகள் அத்தனையுமே புளுகு மூட்டைகள் தான். இட ஒதுக்கீடு, தலித் விடுதலை, பிராமண எதிர்ப்பு, திராவிடம், பெண்ணியம், தமிழ் தேசியம், மூன்றாம் பாலினம் அனைத்துமே முட்டாள் தனத்தின் உச்சகட்ட கோட்பாடுகள்.

நம் சமூகத்தின் சிறந்த சிந்தனைகளாக விளம்பரம் செய்யப் படுபவை தனி மனித அறிவிலிருந்து வெளி வருபவையே. ஒட்டு மொத்த குழு அனுபவத்தில் இருந்து அல்ல. ஒருவனே ஒட்டு மொத்த குழுமத்திற்கான ஒரு மத நூலை எழுதுகிறான். தனி மனித எண்ணமே ஒட்டு மொத்த குழுமத்திற்கான அடையாளமாக ஊதி ஊதி விளம்பரப் படுத்த பட்டு உண்மை ஆக்கப்படுகிறது. அது அறியாமையில் விளைந்த தாயும் இருக்காலும், ஆதிக்க மூர்க்கத்தில் எழுந்த தாயும் இருக்கலாம். அரசியல் லாபம் பார்க்கும் கேவல எண்ணத்தில் பிறந்த தாயும் இருக்கலாம்.

இசைப் புயலாக இருந்தாலும் சரி, இசைஞானியாக இருந்தாலும் சரி, இசை என்பது இயல்பாக ஒருவருக்கு வாய்க்க பெற்றிருக்கிற திறன் மட்டுமே. அவர்களின் விடா முயற்சியாலோ, கடின உழைப்பாலோ பெற்றது அல்ல. இசைக்கும் திறன், வாய்ப்பு, அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி கல்லாவை கோடிகளால் நிரப்பிக் கொள்கிறார்கள். இதற்கு திறமை என்கிற அடையாளம் கொடுத்து இவர்களை இசையின் ஞானிகளாக்கி காட்டுவது பலரின் அறியாமை, விவரம் பத்தாமை, தாழ்வு மனப்பான்மை கொண்ட ரசிக குஞ்சுகளின் உளவியல் சிக்கலே. சினிமா, விளையாட்டு என அத்தனைக்கும் இது பொருந்தும்.

புனிதர், பாவி என்று மனிதர்களை கடவுள் பெயரால் தரம் பிரிப்பது, காசு பார்க்க பிளான் போடும் மத நிறுவனங்களின் பொய் மூட்டையே. பணமும், அரசியலுமே எவரை புனிதராக்கலாம்? என்பதை தீர்மானிக்கிறது. கடவுள் முன்னிலையில் எல்லாரும் சமமே. யாரும் புனிதர்களும் அல்ல, யாரும் விலை ஏற பெற்றவரும் அல்ல. இயற்கையின் முன் அத்தனை பேரும் தீர்ப்புக்காக காத்திருக்கும் சமத்துவ உயிர்களே.

பேய், ஆவி, மறு உலகம், சொர்க்கம், நரகம், உத்தரிக்கிற ஸ்தல கதைகள் அனைத்தும் ஏழைகளை ஏமாற்றி காசு பார்க்க ஆன்மீக அறிவாளிகள் சிலர் கிரேக்க, உரோமை புராணத்தில் இருந்து உருவாக்கிய பொய் மூட்டைகளே. மனமாற்றம் என்பது மன்னிக்க முடியா பாவம் செய்து குற்ற உணர்வில் தத்தளித்த சில கொடூர பாவிகளின் உளவியல் உளறல்களே. மனமாற்றம் நடக்கவே முடியாது. ஒரு மனிதனின் குணத்தைச் சுட்டுப் போட்டாலும் மாற்ற முடியாது, அது சென்மத்திற்கும் மாறாது. பார்வை மாற்றம் மட்டுமே சாத்தியம்.

பாவ மன்னிப்பு என்பது ஆன்மீக அறிவாளிகள் சிலர் தாங்கள் செய்த கொடிய குற்றப் பழியில் இருந்து தப்பித்துக் கொள்ள உருவாக்கிய குறுக்கு வழியே. கடவுளால் எவருடைய பாவங்களையும் மன்னிக்க முடியாது. கடவுளும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டவரே. கர்ம வினை காவு கேட்டே தீரும்.

ஒரு மார்க்கத்தின் மகானாக இருந்தாலும் சரி, கடவுளை நம்பாத நாத்திகனாக இருந்தாலும் சரி. செய்த வினைக்கு தண்டனையை நிச்சயம் ஒருவன் அனுபவித்தே தீருவான். கடவுளால் தனக்கு பிடித்தவரை மட்டும் காப்பாற்ற முடியாது. தனக்கு இவர்கள் பிடித்தவர்கள் என்று சொல்கிறவரும், அவர்களை மட்டும் காப்பாற்ற துணிகிறவரும் கடவுளாயும் இருக்க முடியாது.

மனிதன் தான் படைப்பில் உயர்ந்த சிகரம், மனிதன் கடவுளின் சாயலைக் கொண்டு இருக்கிறான், இந்த உலகத்தில் படைக்கப் பட்டிருக்கிற அனைத்துமே மனிதனுக்காக படைக்கப் பட்டு அவனுடைய பயன்பாட்டிற்காக இருக்கின்றன என்பது பொய் மூட்டையின் உச்சகட்டம். இயற்கை என்கிற உலகத்தில் மனிதன் ஒரு அங்கம், அவ்வளவே. இங்கே வாழ்கிற எல்லா உயிர்களுக்கும் சம உரிமை இருக்கிறது. மனிதன் படைப்பில் உயர்ந்தவன் என்பதே முட்டாள் தனமான ஆன்மீக கோட்பாடு.

அறிவால் உயர்ந்தவன் என்பதால் மனிதன் படைப்பின் உச்சம் கிடையாது. அந்த அறிவு இந்த உலகத்தைப் பாதுகாக்க கடவுள் கொடுத்த வரம். மற்றபடி மனிதன் மற்ற உயிர்களை விட எதிலும் உயர்ந்தவன் கிடையாது. இயற்கையின் முன் அனைத்து உயிர்களும் சமம். மனிதன் விதி விலக்கல்ல.

உண்பதும், நிம்மதியாக உறங்கி எழுவதுமே வாழ்க்கை. இதற்குள் இயந்திர இரைச்சலை உருவாக்கி பிறப்பு முதல் இறப்பு வரை நொந்து வெந்து சாவதையே சாதனை வாழ்க்கை என்று தமிழகத்தில் படம் காட்டும் திராவிட பகுத்தறிவு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திர பொய் மூட்டை.