வழக்கும், தீர்ப்பும்

வழக்கும், தீர்ப்பும்

வழக்கும், தீர்ப்பும்

மே 27, 2022

ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்ய துணை போனவர்களை மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்வது சரியானதா? மன்னிப்பது குற்றங்களை பெருக செய்யாதா? பிரதமர் கொலை வழக்கிலேயே இப்படி நடந்தால் மற்றவர் வழக்கு என்னவாவது?

நாட்டு நடப்புகள்

சட்டம், சமத்துவம், உயிர், இலங்கை

தமிகத்தின் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மூலை முடுக்கெல்லாம் கூவிக் கொண்டு எழுப்புகிற ஒரே கேள்வி இது தான்: ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்ய உதவி செய்தவருக்கு எப்படி மன்னிப்பு வழங்குவது? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கும், அதில் ஒருவருக்கு மன்னிப்பும் வழங்கி விடுதலை செய்த தீர்ப்பு பற்றிய விவாதமே இது.

காங்கிரஸ் பண முதலைகளுக்கு எதிர்ப்பு பேசியே ஆக வேண்டிய நிர்பந்தம், எனவே வாங்கிய காசுக்கு கூவுகிறார்கள். ஆனால் தமிழக பிஜேபி சங்கிகளின் தலைகள் எதற்காக கூவி திரிகிறது? இப்படி ஒரு அரை வேக்காடு வாதத்தை எப்படி இவ்வளவு சத்தமாக கத்த முடிகிறது? நோட்டாவை தாண்ட முடியாத கோவத்தில் இருக்கிறவர்கள் பேசியாவது இருப்பதை காட்ட முயற்சியா? இவர்களின் வாதம் ஊனம் இல்லையா?

சட்டத்தின் முன் அனைவரின் சமம் என்பது தானே அரசியல் சட்டம்? இதில் எந்த உயிராக இருந்தால் என்ன? பிரதமரின் உயிருக்கு விலை அதிகம், சாமான்யனின் உயிருக்கு விலை குறைவு என்பது என்ன ஒரு மடத்தன விவாதம்? சட்டத்தின் முன் என்ன உயிரில் ஏற்ற தாழ்வு? இது போலியோ நோய் தாக்கிய சூம்பி போன வாதம் அல்லவா? சமத்துவம் தானே நம் அரசியல் அமைப்பின் ஆன்மா?

ஒருவர் பிரதமராக இருக்கிறார் என்பதால் யாருக்கும் இல்லாத அளவுக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப் படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் அள்ளித் தரப்படுகிறது. அது மட்டுந் தான் சாமான்யனுக்கும், ஆட்சியின் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உள்ள வேறுபாடே தவிர உயிரில் என்ன உயர்வு, தாழ்வு வேறுபாடு? உயிர் வலி ஒன்று தானே? அடிப்படை சாசன அறிவே இல்லாது பேசுவதில் எப்படி தமிழக பிஜேபிக்கும், காங்கிரசுக்கும் இதில் அவ்வளவு ஒற்றுமை? குடிமக்கள் ஒவ்வொருவருக்குமா இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க படுகிறது. இல்லையே?

சரி, உயிரில் இந்த ஏற்ற தாழ்வு கற்பித்து கத்துகிற இந்த அரை வேக்காடுகள், தங்களது கட்சி தலைவர்கள் ஊழல் செய்து மாட்டிக் கொண்டால் மட்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நோ் இறக்கமாக வாதாடுகிறார்களே, அது ஏன்? இவர்களுடைய உயிருக்கு மதிப்பு அதிகம் என்றால் இவர்கள் செய்கிற குற்றத்திற்கும் அதிக தண்டனை தானே கொடுக்க வேண்டும்? அப்போது மட்டும் பதுக்கமும், நடுக்கமும் தானாக வந்து எப்படி ஒட்டிக் கொள்கிறது? போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை என்ன செய்வது?

தர்மபுரியில் மூன்று மாணவிகள் தமிழக ஊழல் ராணிக்காக உயிரோடு எரித்துக் கொலை செய்யப் பட்ட வழக்கில் கொடூரம் கொண்ட குற்றவாளிகளை அதிமுக அரசு குறுக்கு வழியில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வில்லையா? அப்போது இந்த கதர் சட்டைகள் ராட்டையில் நூல் ஆட்டிக் கொண்டு இருந்தார்களா? அந்த உயிர்கள் எல்லாம் இப்படி சாவதற்காக பெற்றோரால் நோ்ந்து விட்டவர்களா?

ஏதோ செத்தவரை உலக மகா புனிதர் போல இந்த கதர் சட்டைகள் அழுது பேசி நியாயம் பேசி திரிகிறார்கள். இந்த யோக்கியரின் தாய் ஒரு சீக்கிய படை வீரரால் கொல்லப் பட்டதில் நிகழ்ந்த வன்முறையில் 3000 சீக்கிய பெண்கள் தாலி இழந்த போது இவர் சொன்ன பதில்: “மரம் விழுகிற போது நிலம் அதிரத்தான் செய்யும்”. என்ன ஒரு இரத்த வெறி பிடித்த வார்த்தைகள். இந்த கதர் க்ரூப் குடும்ப உயிர்கள் தான் உயிர்களா? ஏழைகளின் உயிர்கள் எல்லாம் வெறும் ம****?

இருமாப்பு லேடி சீக்கியருக்கு எதிராக செய்த கேடித்தன கொடூரங்கள் சொல்லி மாளாதே? இவருடைய தவப் புதல்வரின் இந்திய இராணுவ அமைதிப் படை இலங்கை தமிழ் பெண்களிடம் நடந்து கொண்ட ஒழுக்கக் கேடு வெட்க கேடானதே? எமர்ஜென்சியில் எத்தனை அப்பாவிகள் பாதிக்கப் பட்டார்கள்? அதற்கு பதில் சொல்ல இந்த கதர்களுக்கு திராணி இருக்கிறதா?

இந்த குடும்பத்தின் பப்புக் குட்டி கொஞ்ச காலமாக சொல்லி திரிகிறது, இவர்களின் குடும்பம் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாம்? சரி, இலங்கையில் இரண்டு இலட்சம் தமிழ் பெண்களின் தாலிகளை அறுத்த மாபாதக கொலையை செய்ய துணை போன இவரின் தாயை கடவுள் மன்னிப்பாரா? எத்தனை ஜென்மம் எடுத்தாலும் துடைக்க முடிகிற பழிபாவமா அது? குற்றப் பரிகார பலிகளே மூச்சு தாங்காதே?

ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்ததை சரி என்று வாதாட வில்லை. எந்த கொலையையும் நியாயப் படுத்தி பேசவும் இல்லை. கொலையில் என்ன உயர்வு, தாழ்வு என்பதே இந்த கட்டுரையின் அடிநாத கேள்வி. மக்களாட்சியில் ஆண்டியின் உயிரும், ஆள்பவனின் உயிரும் அரசியல் சாசனப்படி சமமே என்பதே வாதம். எந்த உயிரும் எவருக்கும் உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என்பதே இந்த பிடிவாதம்.

ஒரு கொலைக்கான தண்டனையை விட அவர்(கள்) இந்திய தண்டனைச் சட்டப்படி அதிகமாகவே அனுபவித்து விட்டார்(கள்) என்பதை எவராவது மறுப்பார்களா? அவர்கள் குற்றவாளிகள் என்று சொன்ன தீர்ப்பை யாரும் மறுக்க வில்லையே? இவர்களையும் நியாயப் படுத்த வில்லையே?

எங்கோ நடக்கிற இலங்கை என்கிற அடுத்த நாட்டின் பிரச்சனைக்கு இங்கிருக்கிற தமிழர் ஏன் புரட்சி என்கிற பெயரில் உதவி செய்ய வேண்டும்? விடுதலை புலிகளோடு ஏன் தொடர்பு வேண்டும்? தேவை இல்லாத பிரச்சனையில் மூக்கை நுழைத்து மாட்டிக் கொண்டால் 30 ஆண்டுகள் சிறையில் கிடக்க வேண்டியது வரும் தானே? இவர்கள் போய் மாட்டிக் கொள்வார்கள், அடுத்தவர் தியாகம் செய்து இவர்களைக் காப்பாற்ற வேண்டுமா?

காஷ்மீரில் பாகிஸ்தான் நுழைந்தால் தீவிரவாதம், இலங்கையில் தமிழர் மூக்கை நுழைத்தால் புனித வாதமா? அது என்ன இது வேறு? அது வேறு? என்று பூசி, மெழுகி, பூஜை போட்டு புனிதர் பட்டம் கொடுக்கிற பழக்கம்? பணமும், படை பயிற்சியும் கொடுத்து தூண்டி விட்ட காங்கிரசின் கேவல அரசியல் இது இல்லயா? அதற்கான எதிர்வினை அல்லவா? அது அவர்கள் பிரச்சனை. அவர்கள் தானே தீர்வு காண வேண்டும்? அவர்களால் மட்டும் தானே தீர்வும் கண்டு பிடிக்க முடியும்? தமிழகத்தில் வேறு பிரச்சனையே இல்லையா? கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாத கொத்தடிமை தமிழர்கள் வைகுண்டம் போக வழி சொல்வது வேடிக்கை அல்லவா?

அடுத்த நாட்டில் நாட்டாமை செய்கிற அதிகாரத்தை இந்த மூத்திர குடிகளுக்கு கொடுத்தது யார்? சாதி, கட்சி, மதம், நிறம் என்கிற வெறி பிடித்த வன்மத்தின் எதிரொலி இல்லையா இந்த இனவெறி? தமிழ், தமிழன், மூத்தக்குடி, முதல் குடி என்று எவ்வளவு வெறி ஏற்றி விட்டு கட்சி தலைவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்? இளையோரின் உள்ளத்தில் விஷத்தை விதைக்கிறார்கள்? இது கடவுளின் பார்வையில் அருவருப்பு இல்லையா? அநியாயம் இல்லையா? அதர்மம் இல்லையா?

விடுதலை செய்யப்பட்டவர் அப்பாவியும் அல்ல, காங்கிரஸ் குடும்பம் ரத்தக் கறை படியாததும் அல்ல. கொலை நடப்பது ஒன்றும் இந்தியாவில் புதிதும் அல்ல. இதில் சரி, தவறு என்று சொல்வதற்கு ஏதுமில்லை. எழுவர் விடுதலை தொடர்பாக நடக்கும் அத்தனையும் பிஜேபி, காங்கிரஸ் செய்யும் கேவல அரசியலின் வெளிப்பாடு மட்டுமே. முதலில் தமிழ் நாட்டு அடிப்படை பிரச்சனைகளுக்கு இந்த திராவிட சாக்கடைகள் வழி சொல்லட்டும், அதன் பின் வைகுண்ட வழி சொல்லலாம்.