Breaking News காமெடியர்கள்

Breaking News காமெடியர்கள்

Breaking News காமெடியர்கள்

ஜூலை 02, 2022

பொழுது போக்கு வாழ்வின் ஓர் அங்கம். ஆனால் பொழுது போக்கும், பொழுது போக்கிகளுமே வாழ்க்கையானால் ஒரு சமூகம் எப்படி எல்லாம் சீரழியும் என்பதற்கு நடிகர், நடிகையரின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை ஒட்டு மொத்த தமிழகத்தின் 24 மணி நேர Breaking News ஆக போடும் ஊடகங்கள் இருக்கின்ற தமிழகமே உதாரணம்.

நாட்டு நடப்புகள்

ஊடகம், நடிகர், நடிகையர், செய்தி,

ஓர் இறப்பின் நடுவில் அரசியல் விமர்சனம் செய்யலாமா? என்று நடுநிலை ஓதும் நாரதர்கள் சிலர் சுரம் வாசிக்க தயாராக தான் இருப்பார்கள். ஆனால், இழவு கதைகளை வைத்து தான் பல இலவு காத்த திராவிட சொங்கி கிளிகள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின என்பதை தமிழக அரசியல் அறிந்தவர் மறக்க மாட்டார்கள். அதற்கு உடந்தையாக இருந்தது பண முதலைகள் நடத்தும் இந்த அறமில்லா ஊடகங்களே.

இந்த முன்களப்பு தமிழக ஊடகங்களை பிசாசுகள் என்றோ, உருப்படாத வேலையைச் செய்கிற வீணாய் போனவர்கள் என்றோ சொல்வதில் எள்ளளவும் தவறு இருக்க முடியாது என்பதற்கு இப்படி நடிகையின் திருமணத்தைப் பெரிதுபடுத்திக் காட்டும் ஆவலும், நடிகை வீட்டு ஈமச் சடங்குகளை 24 மணி நேர லைவ் நிகழ்வாக காட்டும் ஈனத்தனமும் ஆதார பதிவுகள்.

தோ்தல் நேரம் என்றால் காலையில் எந்த தலைவர் வீட்டில் பொங்கலும், வடையும் தரமாக கிடைக்கும், மதியம் யார் வீட்டிற்குச் சென்று பேட்டி எடுத்தால் பொறித்த மீனும், சுக்காவும் கிடைக்கும், எந்த தலைவரை காக்கா பிடித்தால் ஓசியில் தமிழ்நாடு முழுவதும் ஏசி காரில் பயணம் செய்யலாம், இரவில் யார் வீட்டு கதவைத் தட்டினால் நாட்டுக் கோழி சாப்பிடலாம் என்று குமூக சர்வேயை இந்த நிரூபர்கள் ரெடி பண்ணி வைத்து இருப்பார்கள் போலும்! தின்பது ஒன்றையே நடுநிலையாக செய்கிற இந்த ஓசி சோறு நிரூபர்களா மக்கள் சார்பாக நின்று அரசியல் வாதிகளை கேள்வி கேட்க போகிறார்கள்? என்பதே நாங்கள் எழுப்பும் கேள்வி.

அவனவனுக்கு ஆயிரம் கவலைகள். இதில் இந்த நடிகையரின் கல்யாணமும், கணவரின் இறப்பு செய்தியும் மட்டும் தான் தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களின் உள்ளக் குமுறல் போலவும், தேச பக்தி வளர்க்க உதவும் அரிய காட்சிகள் போலவும் நேரலையாக ஒளிபரப்பு செய்வது சகிக்க முடியாத அருவருப்புகள். இதனையும் கண்விழி மூடாமல் பார்த்து புளங்காகிதம் அடைந்து விமர்சனமாக பதிவிடும் தமிகத்தின் கூமுட்டை ரசிக குஞ்சுகளின் எண்ணங்களை என்ன வார்த்தைகள் கொண்டு திட்டினாலும் அது தகும்.

வாழ்வின் மகிழ்வும், இறப்பின் வலியும் அனைவருக்கும் ஒன்று தான். அது என்ன நடிகர், நடிகையர் வீட்டு மகிழ்வுக்கும், இழவுக்கும் மட்டும் இவ்வளவு ஆரவாரம் மற்றும் ஆர்ப்பாட்டம்? தமிழ் நாட்டில் நடிகர், நடிகையருக்கு மட்டுந்தான் குடும்பம், கஷ்டம், வாழ்க்கையின் வலி இருக்கிறதா என்ன? மற்றவரெல்லாம் இந்த சமூகத்திற்கு தேவை இல்லாதவர்களா?

இதுவரை தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் திருமணமே நடந்தது கிடையாதா? இள வயது பெண்களின் தாலி அறுந்ததே கிடையாதா? டாஸ்மாக்கிற்கு பலியானவர் எத்தனை போ் இருக்கிறார்கள்? கணவன் இழந்ததால் கைம்பெண் ஆகி அடுத்த வேளை சோறே கேள்விக் குறியாகிய எத்தனை இலட்சம் பெண்கள் இருக்கிறார்கள். திருமணம் ஆகாத பெண்கள் எத்தனை இலட்சம் போ் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி, இவர்களது வாழ்விற்கு அரசு என்ன தான் பதில் வைத்து இருக்கிறது என்பது பற்றி இந்த சீப்பு செந்தில்கள், பௌடர் பாண்டியன்கள் ஆக்கப் பூர்வ விவாதம் செய்து இருக்கிறார்களா? இல்லையே. பொழுது விடிந்து விட்டால் திமுக தற்குறிகளின் புகழ் பாடுவது ஒன்றையே தானே இங்கிருக்கிற அத்தனை ஊடகம் செய்கின்றன?

இந்த நடிகையின் கணவரின் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக மாண்பு மிகு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும் தமிழக அதிகாரிகள் உறுப்பு கிடைக்க முயற்சி செய்தார்கள் என்று இங்கிருக்கிற சுகாரதாரத் துறை அமைச்சர் கூச்சமே இல்லாது பேட்டி தருகிறார். இந்த நடிகைக்கு மட்டும் ஏன் தமிழக அரசு இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று அந்த நேரத்தில் அந்த முட்டாள் அமைச்சரை ஒரு நிரூபராவது வாதங்களால் துளைத்திருக்க வேண்டாமா?

ஒரு முதல்வர் எதற்காக வெறும் நடிகைக்காக இவ்வளவு மெனக் கெட வேண்டும்? என்று நிரூபர்கள் குழுவாக தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? அப்படி செய்ய வக்கில்லாது அந்த மங்குனி அமைச்சர் சொல்வதை கிளிப்பேச்சு போல இந்த ஊடக பேடிகள் குறிப்பெடுத்து எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். சொல்வதைக் குறிப்பெடுக்க தான் இப்போது ரிக்கார்டர்கள் இருக்கிறதே? இதற்கு எதற்கு மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு சலுகைகளை இந்த மக்கு நிரூபர்களுக்கு அள்ளித் தர வேண்டும்? மக்களின் சார்பாக நின்று கேள்வி கேட்க தானே இத்தனை சலுகைகள்?

இது போதாது என்று அமைச்சர் சகிதம் வீட்டிற்குச் சென்று அஞ்சலி வேறு. இது என்ன பாரபட்சம்? இந்த நடிகை வீட்டு இறப்பிற்கு போனால் தமிழகத்தின் இரண்டு கோடி வீட்டு குடும்ப இறப்புகளுக்கும் இந்த டிராமா கம்பெனி அமைச்சர்கள் போவது தானே நியாயம்? ஏழைகளும், சாமான்யர்களும் வெறுமனே இந்த மங்குனிகளுக்கு ஓட்டுப் போடும் ஓட்டாண்டி வேலையைச் செய்வதற்கு மட்டுந்தானா?

இந்த நடிகை தமிழகத்திற்கு பெருமை சோ்த்தவர் என்று கொரோனா புகழ் சுகாரத்துறை செயலர் துதிபாடுகிறார். படத்தில் கண்டபடி நடனமாடி காசு சம்பாதித்தால் அது தமிழகத்திற்கு பெருமை சோ்ப்பதா? இவர் என்ன, சம்பாதித்த பணத்தை தமிழக மக்களுக்கா கொடுத்தார்? ஒரு ஐ.ஏ.எஸ் சுகாரத் துறை அதிகாரி செய்கிற காரியமா இது? இவ்வளவு தரம் தாழ்ந்த சமூகத்தின் அங்கமாக இருக்கிறோம் என்று நினைத்தாலே அருவருப்பாக உள்ளது.

மெத்த படித்த இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மேதாவிகள் எப்படி இந்த உருப்படாத திராவிட சொங்கி அரசின் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறார்கள் என்பதை இப்படி இவர்கள் பேசும் ஓட்டை வாய் வார்த்தைகளில் இருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இனி என்ன? கடந்த மாதம் சின்ன கலைவாணர் பெயரில் ரோடு திறந்தது போல, அடுத்த ஆண்டில் கண்ணழகி பெயரில் ஒரு ரோட்டுக் கடை பிரியாணி கடை ஒன்று தமிழக அரசு சார்பில் திறப்பார்கள் போலும்! இந்த சாக்கடை அரசியலைத் தானே இந்த இரு பெரும் திராவிட சொங்கி அரசுகள் ஒற்றை தலைமுறையாய் செய்து வருகின்றன.

எதைப் பார்க்க வேண்டும், மக்களுக்கு எதைக் காட்ட வேண்டும் என்று கூட ஆராய்ந்து அறிந்து ஒளிபரப்பு செய்ய தவறுகிற தமிழகத்தின் அத்தனை ஊடக சொம்புகளும் இந்திய சனநாயகத்தில் கேவலத்தின் உச்சமே. இவர்கள் ஜர்னலிசம் என்கிற பெயரில் எப்படி தமிழக அரசியல் வியாதிகளுக்கு சொம்பு தூக்குவது, என்பதை மட்டுமே படித்து கிழித்து பட்டம் பெற்று இருப்பார்கள் போலும்.

எவனோ நாலு நல்லவர்கள், சாமான்யன் சார்பில் நின்று அரசியல்வாதியை நாக்கைப் புடுங்குகிற மாதிரி கேட்கிற கேள்விகள் பின்னால் அத்தனை ஊடக மக்கு மாதேசுகளும் ஒளிந்து கொண்டு சலுகைகளை மட்டும் அனுபவித்துக் கொண்டு திரிகிறார்கள் என்பதே உண்மை. அனைத்து முன்னணி செய்தி ஊடகங்களும் சமூக சீர்திருத்தத்திற்கு அல்ல, சமூக சீரழிவுகளுக்கு துணை போகிற கேவலத்தையே செய்கிறது. நாட்டுக்கும், வீட்டிற்கும் கேடு மது மட்டுமல்ல, இந்த செய்தி சேனல்களும் தான்.

தன் குடும்பம், தன் பிள்ளை, தன் மனைவி என்கிற சுயநல வாழ்வு வாழும் கேடிகளான கோடிகளில் புரளும் நடிகர்கள் வாழும் தமிழகத்தில் தன் குடும்பம், தன் பிள்ளை, தன் மனைவியை விட தனக்கு பிடித்த நடிகர், நடிகையே பெரிது என்று நினைத்து வாழும் கோடிக்கணக்கான கூமுட்டைகள் நம் காலத்திலும் தமிழகத்தில் இருப்பதைப் பார்க்கிற போது மனம் பதை பதைக்கிறது.

ஊழல் வழக்கு, முதல் குற்றவாளியின் இறப்புச் செய்தி தாளாமல் 200 போ் சாவு, கட்டுமரம் நிலை குலைந்த செய்தி கேட்டு 150 போ் சாவு என்று எவனோ ஒருவனின் இலவில் தன் உயிரின் மதிப்பு தெரியாமல் இப்படி அல்பாயுசில் உயிர் விட துணியும் கடைக்கோடி கொத்தடிமை தொண்டனும், நடிகர், நடிகையரின் இந்த ரசிக குஞ்சுகளும் இந்திய பூமித்தாய் சுமந்து கொண்டிருக்கும் தேவையற்ற பாரங்களே, உதவாக் கரைகளே.

தமிழகத்தில் திசை திருப்பும் கேவல அரசியலுக்கும், நடக்கிற ஆட்சியின் அலங்கோலம் மக்களின் கண்களுக்கு தெரியாது மறைக்கிற பாவ காரியத்திற்கும் துணை போகிற தமிழகத்தின் அத்தனை ஊடக கைக்கூலிகளும், நிரூபர்களும் கடவுள் பார்வையில் குற்றவாளிகளே. அவர்கள் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும், வாசிக்கிற ஒவ்வொரு செய்திக்கும், ஒளிபரப்புகிற ஒவ்வாரு நிகழ்ச்சிக்கும் கண்டிப்பாக ஒருநாள் கடவுளுக்கு கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.