கடவுள் ஒண்ணும் மந்திரவாதி அல்ல

கடவுள் ஒண்ணும் மந்திரவாதி அல்ல

கடவுள் ஒண்ணும் மந்திரவாதி அல்ல

அக்டோபர் 24, 2021

கடவுள் நம்பிக்கை

“கடவுள் ஒரு மந்திரவாதி!” இதானங்க, கடவுள நீங்க காலாகாலாமா பாக்குற பார்வ. இப்ப நான் ஒங்ககிட்ட ஒரு கேள்வி கேக்குறேன். ‘Miracle’ நடக்குதுன்னு நம்புறீங்களா?

நொண்டி நடந்திருப்பாங்க!!! ஆனா நா கேக்குறது, பிறவியிலேயே போலியோவால கால் ஊனமான யாராவது நடந்துருக்காங்களா? பிறவிக்குருடான யாருக்காவது பார்வை கிடைச்சிருக்கா? ஊமை யாராவது பேசியிருக்காங்களா?

ஒருவேள, நீங்க ஒரு காலத்துல நடந்தததா கேள்விப்பட்டத, வாசிச்சத, நம்பிக்கயோட, கத கதயா என்கிட்ட சொல்லலாம்.

ஆனா, நா கேக்குறது, நம்மோட காலத்துல நடந்த கதய, ஒரு கதயவாவது, சொல்லுங்க!!!

மழுப்பக்கூடாது! ஒங்க பதில் இப்படி இருக்கனும்: இவன் பிறவிக்குருடன், ஆனா, ஒலகமே ஆச்சரியப்படுறாப்ல இப்ப இவன் எல்லாத்தயும் போல பாக்குறான்.

நடந்திருந்தா தைரியமா சொல்லுங்க! இன்னமும் ஒலகத்துல பல மாற்றுத்திறனாளிங்க இருக்காங்க! அவுங்க எல்லாத்தயும் வரிசயா வரச்சொல்லி, Miracle தொடரட்டும்! நல்லது தானங்க?

அப்புடி நடந்தா, நம்புறதுல யாருக்கு என்னங்க பிரச்சனை? மக்கள் நல்லா மகிழ்ச்சியா சந்தோசமா இருக்கனும். அதுக்கு தானங்க எல்லாரும் ஆசப்படுறோம்?

நீங்க சாட்சி சொல்றது நியாயமா இருக்கனுங்க, நியாயப்படுத்துறதா இருக்கக்கூடாது.

முடியாதுங்க. ஏன்னா, இதுவர அப்படி நடந்தது கெடயாதுங்க! மழுப்பலாம்! வாதம் செய்யலாம்! வரிஞ்சி கட்டிக்கிட்டு வரலாம். ஆனா, அப்படி நடக்கலன்னு எல்லாருக்குமே தெரியும்ங்க!

இப்பா நா கேக்குறேன்: உங்க கடவுளுக்கு இப்ப நிகழ்காலத்துல பவர் கிடையாதா? கதயில தான், பவர் உண்டா?

கடவுளால, தலவலி, கண்வலி, காய்ச்சலத்தான் குணப்படுத்த முடியுமா? நாள்பட்ட கேன்சர்-லாம், அவரோட பவர்க்கு கீழ வராதா?

நா யாரயும் கிண்டல் செய்யலீங்க? இதெல்லாம் பகுத்தறிவோட கேள்விங்க! நீங்க பதில் சொல்லித்தாங்க ஆகனும்! இன்னும் எத்தன காலத்துக்குத்தாங்க முட்டுக்கொடுத்துட்டே போவீங்க! நடந்தா நம்புறதுல யாருக்குங்க கஷ்டம்?

எனக்கு ஏதாவது நடந்திருமா? நடந்திருமா? ன்னு, நம்ம ஏழ பாழ சனங்க எல்லாம், கோயில் கோயிலா அலையுறத பாத்தும், ஒங்களால இன்னமும் வைராக்கியத்தோட வரிஞ்சிக்கட்டிட்டு பேச முடியுதுன்னா, ஒங்களுக்கு என்னோட Royal Salute– ங்க!

ஆனா, மனச்சாட்சி உள்ளவங்களால அப்படி இருக்க முடியாதுங்க! இப்படி பேசுறதுனால, நா கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவன்னு நெனச்சிடாதீங்க! நான் "கடவுள மந்திரவாதியா காட்ட நினைக்கிற" ஒவ்வொருத்தனுக்கும் எதிரிங்க!

அப்ப Miracle நடக்கவே இல்லன்னு சொல்றீங்களா? ன்னு எங்கிட்ட கேட்டீங்கன்னா, என்னோட பதில இன்னமும் ஒங்களுக்கு திருப்தியா அமையிறாப்ல சொல்லனும்ல?

அதனால, Miracle நடக்குதா? இல்லையா?ங்கிறத தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி“Miracle”ன்னா, என்னாங்கிறத, சரியா புரிஞ்சுக்கனும்ல?