திராவிட தோழர் பாதிரியார்

திராவிட தோழர் பாதிரியார்

திராவிட தோழர் பாதிரியார்

ஜூலை 08, 2022

சிறுபான்மை மக்களிடையே மத வெறியைத் தூண்டி திராவிட ஊழல் அரசியல் வாதிகள் தொடர்ந்து கொள்ளையடிக்க மற்றும் சாராயம் காய்த்து விற்க உறுதுணையாக இருப்பது கிறிஸ்தவ ஆயர் பேரவை. இந்த ஆயர் பேரவை – திராவிடர் கூட நல்லுறவுக்காக 25 ஆண்டு காலம் முட்டுக் கொடுத்து வருகிற வேலையைக் கச்சிதமாக செய்து வரும் பாதிரியார் ஜெகத் கஸ்பாரைப் பற்றி இந்த கட்டுரையில் படிப்போம்.

நாட்டு நடப்புகள்

இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், மத ஒற்றுமை

தனிநபர் விமர்சனம் எங்களது நோக்கம் அல்ல, எனினும் இந்த தனி நபருடைய கருத்து ஒட்டு மொத்த கிறிஸ்தவ மக்களின் கருத்தாக பார்க்கப் படுகிற பேராபத்து நிலவுவதாலும், இவர் பேசுகிற பிரிவினை பேச்சு மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய கிறிஸ்தவ ஆயர்கள் அமைதி காத்து இவரை வழி மொழிவதாலும், இவர் ஒரு வரலாற்றுப் பொய்யர் என்பது கூட தெரியாமல் இளையோர் பலர் தவறான பாதைக்கு செல்லாது தடுப்பதற்காகவும், மொழி, கலை, பண்பாடு பேசி வெளிநாட்டு வாழ் தமிழர்களை ஏமாற்றி காசு சுரண்டுவதை தடுக்கவுமே விமர்சிக்கிறோம்.

ஆதீனங்கள் அரசியல் பேசினால் கொதித்து எழுகிற திராவிட கூட்டம் இந்த கத்தோலிக்க பாதிரியார் அரசியலும், பிரிவினை வாதமும் பேசுகிற போது மட்டும் ஏன் அமைதி காக்கிறார்கள்? பைபிளை போதிக்க வந்த இந்த தேவ தூதருக்கு முஸ்லீம்கள் நடுவில் என்ன வேலை? கடவுள் நம்பிக்கையை அறிக்கையிட வேண்டிய இவருக்கு கடவுளை நம்பாத திராவிடர் கழகத்தில் என்ன கூட்டு? அரசியலில் எந்த பாதிரியாரும் ஈடுபடக் கூடாது என்று இவர்களது திருச்சபைச் சட்டம் கூறுகையில், திமுக என்கிற கட்சிக்கு மட்டும் இவர் முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இவையே எங்களது அடிப்படை கேள்விகள்.

இவர் வேலை செய்ய வேண்டியது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை கத்தோலிக்க மறைமாவட்டத்தில். ஆனால், தொடர்ந்து சென்னையில் தங்கிக் கொண்டு திமுக கூடாரத்தில் தன்னை கொத்தடிமையாக இணைத்துக் கொண்டு, தேவாலயத்தில் வேலை பார்க்காமல் கட்சி வேலை பார்க்கிறவர் எப்படி ஒரு பாதிரியாராக இருக்க கிறிஸ்தவ சட்டம் அனுமதி அளிக்கிறது? கிறிஸ்தவ போதனைகளை போதிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறவர் அரசியல் பொதுக் கூட்டத்தின் அத்தனை மேடைகளிலும் தோன்றிக் கொண்டு பிரிவினை பேசுவதை ஏன் கிறிஸ்தவ மதம் அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.

பொழுது விடிந்தால் உடைந்த டேப் ரிக்கார்டர் போல பிஜேபிக்கு எதிராக வில்லுப் பாட்டு பாடுவதையும், திமுகவுக்கு ஆதரவாக பக்திப் பாடல் பாடுவதை மட்டுமே தன் பூசாரி தொழிலாக செய்து வருகிறார். துள்ளி, துடித்து, கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, உணர்ச்சி வயப்பட்டு பேசி சிறுபான்மை இளைஞர்களைத் தூண்டி விடுவதைப் பார்க்கையில் எப்படி இந்த பாதிரியாரை பொறுமையாக ஆயர் கூட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.

இவரை ஏன் தேச துரோக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கக் கூடாது என்பதே எங்களது வாதம். 40% நிலப்பரப்பை முஸ்லீம் மற்றும் பட்டியலின மக்களைப் பிரித்துக் கேட்டு போராட தூண்டி விட்டு சதி செய்கிறார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரான போர் இல்லையா? இந்திய முஸ்லீம்கள் 57 முஸ்லீம் நாடுகளின் ஆதரவைப் பெற்று இந்தியாவுக்கு எதிராக கிளர்ந்து எழ ஐடியா தருகிறார். இது சதிச் செயல் கிடையாதா? ஒற்றுமையை போதிக்க வேண்டிய ஒரு பாதிரியார் பேசுகிற பேச்சா இது?

இந்திய நாட்டை எப்படியாவது துண்டாடி விட வேண்டும் என்கிற வன்மமே இவருடைய விஷம் கக்கும் வார்த்தைகளில் புரிந்து கொள்ள முடிகிறது. இவரைப் போன்றவர்கள் அன்பைப் போதித்த இயேசுவின் போதனைக்கு அவமானத்தை ஏற்படுத்த வில்லையா? இவருடைய பேச்சு இந்து – கிறிஸ்தவம், இந்து - முஸ்லீம் பிரச்சனைக்காக அஸ்திவாரம் போடுவது இல்லையா? உண்மையில், மத ஒற்றுமை நிலவும் தமிழகத்தை சிறுபான்மை மத வெறி ஊட்டி துண்டாட துடிக்கும் ஒரு விஷக் கிருமியே இந்த பாதிரி.

சாட்டை முருகன் பேசிய பேச்சுக்கு சீறிப் பாய்கிற குண்டர் சட்டம் இப்போது கும்பகர்ண தூக்கம் போட்டுக் கிடப்பதன் மர்மம் என்ன? சாமான்யன் என்றால் சட்டம் எப்படி பாயும், திராவிட அரசியல் வாதிகளோடு தொடர்பில் இருந்தால் சட்டம் எப்படி பம்மும் என்பதற்கு இந்த கஸ்பார் ஒரு நல்ல உதாரணம். பிரதமர் மோடியை ஹிட்லரோடு ஒப்பிட்டு இந்த மேற்கத்திய ஞானி விமர்சிக்கிறார். இந்தியாவில் உண்மையிலேயே நடப்பது ஹிட்லர் ஆட்சியாக இருந்திருந்தால் இந்த பாதிரியார் இவ்வளவு வம்பு பேசிக் கொண்டு திரிய முடியுமா?

இந்திய ஜனநாயகத்தை கேலி பேசும் இவர், தான் சார்ந்திருக்கும் மத நிறுவனத்தில் இருக்கிற பாப்புமார்களின் ஹிட்லர் - சர்வாதிகாரத்தைப் பற்றி வாய் மூடி இருப்பது ஏன்? ஐரோப்பியர் மட்டுமே போப்பாக முடியும் என்கிற வருணாஸ்ர தர்மம் இவருடைய குருட்டு கண்களுக்கு தட்டுப் பட வில்லையா? தன் குடும்பத்தையே திருத்த வழிகாணாத இந்த குருட்டு வழிகாட்டி ஊரார் வீட்டு பிரச்சனையில் தலையிட்டு என்ன தீர்வு தர போகிறார்? ஆண், பெண் சமத்துவம் இல்லை என்று சபரிமலை பிரச்சனையில் பேசியது போல தன் மதத்தில் போராடுவாரா? அப்படி முணகினாலே வேட்டி கிழிந்து விடும் என்பது அவருக்கே தெரியும்.

பெற்ற தாய் பசியாய் இருந்தால் கூட அறமற்ற செயல்களைச் செய்ய மாட்டோம் என்று இந்த திராவிடம் வாதம் செய்கிறது. மக்கள் எதிர்ப்பை மீறி ஸ்டொ்லைட், தாது மணல் ஆலையை திராவிட அரசுகள் நிறுவியது அறமான செயலா? மதுக்கடைகளை முதல் கையெழுத்தில் மூடுவோம் என்று சொல்லி இன்னமும் சாராய கடைகளை நடத்தும் முகஸ்டாலின் அரசியல் தான் அறமான செயலா? நாம் தமிழர் கட்சி தலைவர் பேசியதை வெட்டி, ஒட்டி ஒளிபரப்பிய வீடியோக்கள், ஆடியோக்கள் அறமான செயலா? பொய்களை எப்படி எல்லாம் தமிழ் மொழியை வைத்து பசப்பித் திரிகிறார்.

ஒரு பாதிரியாராக இருந்து கொண்டு, கிறிஸ்தவர்களின் தாயான மாதா, உரோமை படை வீரன் ஒருவனால் கற்பழிக்கப் பட்டு அதில் மாதாவுக்கும் – அந்த படை வீரனுக்கும் பிறந்த குழந்தையே இயேசு என்று பல் சமய உரையாடல் கூட்டத்தில் தைரியமாக பேசுகிறார். இதையே வேறு ஒருவர் பேசியிருந்தால் என்ன ஆகி இருக்கும்? இதனைக் கேட்டும் கண்டு கொள்ளாமல் தமிழக ஆயர் பேரவை தூங்கிக் கொண்டு இருக்கிறது. வலியவனுக்கு ஒரு நியாயம், எளியவனுக்கு ஒரு நியாயம். இதுவே வாடிகன் நரகத்தின் புனித தீர்ப்பு.

தமிழை வளர்ப்பதும், திருக்குறள் புகழ் பேசுவதும், ஈழம் மலர செய்வதும் விருப்பம் என்றால் எதற்காக இந்த கத்தோலிக்க பாதிரியார் வேடம் இவருக்கு? இவர்கள் இளையோர் இயக்கம், சேனைப் படை என்று வைத்தால் அது சாத்வீகமான குழுக்கள், ஆனால் இந்துக்களை RSS, VHP என்று ஒன்றிணைத்தால் அது பயங்கரவாத கும்பலாம். இவர்களுக்கு ஒரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயம். இவர்கள் செய்தால் புனிதம், அடுத்தவர் செய்தால் அது பாவ காரியம்.

இவர் மீது ஆதாரப் பூர்வ குற்றச் சாட்டுகள் நிறைய இருக்கின்றன. கிறிஸ்தவ மத நிறுவனத்தின் சட்டத்திற்கு புறம்பாக தனிப்பட்ட விதத்தில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடவடிக்கை இல்லை. மன்னிப்பு பற்றி பீடத்தில் இருந்து கொண்டு புனித பாடம் நடத்துகிற இந்த ஞானி மாற்று கருத்து பேசிய ஈழத்தமிழர் ஒருவரை இலண்டனில் வைத்து You Are A Shame என்று சாபம் போடுகிறார். ஆயர் பேரவை செவிடன் காதில் ஊதிய சங்காக மழுங்கிக் கிடக்கிறது. நல்ல பாதிரியார், நல்ல ஆயர் கூட்டம். விளங்கிடும் இயேசுவின் இந்திய திருச்சபை!