மொினா அரசியல்

மொினா அரசியல்

மொினா அரசியல்

ஆகஸ்ட் 24, 2022

கோயில் கட்டுதலை விட ஒரு ஏழைக்கு கல்வி, மருத்துவம், வேலை கொடுப்பது மேலானது என்று ஆன்மீகத்தை கேலி பேசிய சினிமா துறையினர், ஊழல் ராசாவுக்கு பேனா சிலை வைப்பதில் ஊமையான மர்மம் என்ன?

நாட்டு நடப்புகள்

சிலை, தமிழக அரசு, முதல்வர், பகுத்தறிவு

கொரோனா நேரத்தில் 4000 ரூபாய் கூட உதவி தொகையாக ஒரு குடும்பத்திற்கு கொடுக்க வக்கில்லாத தமிழக அரசு, மக்களின் வரிப்பணத்தில் முன்னாள் முதல்வருக்கு 400 கோடி செலவழிப்பது சரியா என்று, உதிரி கட்சிகள் கேட்கிற கேள்விக்கு நேராக பதில் சொல்ல திராணி இல்லாது தங்களின் ஊடகங்களையும், ஜால்ரா போடும் சினிமா நடிகர், நடிகையரையும் களம் இறக்கி 3000 கோடிக்கு படேலுக்கு மத்திய அரசு சிலை வைத்தது சரியா என்று, எதிர்வாதம் செய்கிற நமுத்துப் போன அறிவே திராவிட பகுத்தறிவு. மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றா? இரண்டையும் ஒப்பீடு செய்வது சரியானதா?

ஒரு மாநில அரசின் கடமை உணவு, உறைவிடம், மருத்துவம், வேலை வாய்ப்பு என்கிற தன் மாநில மக்களின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வது. மத்திய அரசின் கடமை நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது, அந்நிய செலவாணி பெருக்க வெளிநாட்டு பயணியரைக் கவர சுற்றுலாவை ஊக்கப் படுத்துவது. தமிழகத்தில் பசி, பட்டினி, வேலை வாய்ப்பு, மருத்துவம் என்கிற எல்லாவற்றிலும் தன்னிறைவு அடைந்து விட்டோமா? இல்லையே. இன்னமும் ஏழைகள் ரேசன் அரிசி சாப்பிடும் இழிநிலை, அடுத்த வேளை சோற்றுக்கு உத்திரவாதம் இல்லாத நிலை தான் பல குடும்பங்களில் இருக்கிறது என்பதை அரசு மறுக்க முடியுமா? அதனைச் செய்ய அரசு இயந்திரத்தை பயன்படுத்தாமல் செஸ் போட்டி நடத்தவும், செத்தவருக்கு சிலை வைக்கவும் மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கிற திராவிட அரசை கேள்வி கேட்பது நியாயம் தானே?

அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க வழியில்லை என்று ஒத்துக் கொள்கிற இன்றைய முதல்வர் இந்த இக்கட்டான நிலையிலும் 400 கோடியை அநியாயமாக சிலை வைக்க கடலில் கொட்டினால், அவரை எந்த வார்த்தை கொண்டு விமர்சனம் செய்தாலும் குற்றம் இல்லையே? இப்படிப் பட்ட அறிவிலியை முதல்வராக தோ்ந்தெடுக்க ஓட்டு போட்ட தமிழ் நாட்டு மக்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதில் தவறு இல்லையே?

ஒரு முன்னாள் முதல்வருக்கு இதைக் கூட செய்ய கூடாதா? என்று மக்கு மாதேஷ் போல ஊடகங்களில் பலர் முட்டுக் கொடுக்கலாம். இந்திய ஜனநாயக ஆட்சி முறையில் முதல்வராக இருந்ததாலேயே அவர்களுக்கு இரண்டு கொம்புகள் முளைத்து விடாது. அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் ஏற்கெனவே கோடியில் சம்பளம் வரிப்பணத்தில் கொடுக்கிறோம். சலுகைகள் கிடைக்கிறது. இது போதாது என்று ஐந்தாண்டு முடிந்த பிறகும் அவருக்கு ஓய்வூதியம், வீடு, மதிப்பு, மரியாதை. இதற்கு மேலும் கோடிகளை வெற்று கல்லறைக்காக செலவழிப்பது அக்கிரமம் இல்லையா?

400 கோடியை கல்வித் தரம் உயர்த்த செலவிடலாம், மருத்துவத் தரத்திற்கு செலவிடலாம், ரேசன் அரிசியை ஒழிக்க பயன்படுத்தலாம் - இப்படி மக்களின் கண்ணீரைப் போக்க மக்களின் வரிப் பணத்தை செலவழிப்பது தானே தர்மம்! கொரோனா நேரத்தில் கஜானா காலி என்று ஐந்துக்கும் பத்துக்கும் இவர்கள் பொது மக்களிடம் பிச்சை கேட்டது நமக்கு நியாபகம் இல்லையா? பின் இதில் ஊதாரித்தன செலவு எதற்கு? இந்த அறிவைத் தானே உடன் பிறப்புகளுக்கு ரேசன் அரிசி போட்டு தன் குடும்பத்திற்கு பிரியாணி ரைஸ் போடும் திராவிட பகுத்தறிவு என்று நாங்கள் விமர்சனம் செய்கிறோம்!

திட்டம் எதுவும் இவர்கள் சொல்கிற பட்ஜெட்டில் முடிந்து விட போவதில்லை. ஐந்தாண்டு இழுத்தடித்து இன்னும் 400 கோடி செலவாகி விட்டது என்று கணக்கு எழுதுவார்கள். யார் கேட்க முடியும்? இவர்கள் எழுதுவது தானே கணக்கு. முதல்வர் ஒவ்வொரு நாளும் சென்று பார்வையிட்ட போக்குவரத்து, பாதுகாப்பு செலவு என்று சில கோடிகளை ஒதுக்கீடு செய்வார்கள், மக்களின் வரிப்பணத்தில் மின்சாரத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஆடம்பர மின் விளக்கு அமைத்து இலட்சத்தில் மாதா மாதம் மின்சார பில் கட்டுவார்கள். வருடத்திற்கு 6 கோடி பூவிற்கு மட்டுமே செலவு என்றால் எவ்வளவு அராஜகம் நிறைந்த இரக்கமே இல்லாத ஒருவரை ஓட்டு போட்டு தமிழக மக்கள் தங்களை ஆள தோ்ந்தெடுத்து இருக்கிறார்கள், பாருங்கள்.

பணத்தை விடுவோம், இந்த திட்டம் சுற்றுப் புற சூழலுக்கு எவ்வளவு மாசுகளை ஏற்படுத்த போகிறது! சிலை இருக்கும் இடம் வரை வழித்தடம் போட இன்னும் 400 கோடி ஒதுக்குவார்கள், படகு விடுவார்கள், டீசலைக் கலப்பார்கள், மீனினத்தை அழிப்பார்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பார்கள். இயற்கையோடு விளையாடுகிற போது கடல் என்னும் இயற்கை அன்னை சுனாமியாக சீற்றமெடுத்து ஒட்டுமொத்த நகரையும் காவு வாங்கி விட மாட்டாளா? இயற்கையைச் சீரழித்து சின்னா பின்னமாக்கி அதன் கோபத்தை கிளறுகிற அளவுக்கு அப்படி என்ன சிலை வைக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.

அத்தனை உயிர்களும் இயற்கைச் சீற்றத்தில் அநியாயமாக போன பிறகு இத்துப் போன கிறிஸ்தவ மத குருமார்கள் பழைய பஞ்சாங்கத்தையே சோக கீதமாக பாடுவார்கள்: அப்பாவிகளின் இறப்பிற்கு யார் காரணம்? கடவுள் ஏன் இந்த பேராபத்தை பார்த்து அமைதியாக இருந்தார்? என்கிற நமுத்துப் போன கேள்விகளை தூண்டி விட்டு பாவ பரிகார பூஜைகளைச் செய்ய வழி சொல்வார்கள். திராவிடம் செய்கிற அத்தனை அட்டுழியத்தையும் மறைத்து கடவுள் மீது பழியைப் போட்டு ஊழல் தந்தைக்கு புனிதர் பட்டம் கொடுக்கிற சொம்பு தூக்கியே தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையும், திராவிட இயக்கமும்.

மக்களின் வரிப்பணத்தில் கோடிகளில் சிலை வேலை தொடங்கி விட்டது. அடுத்த என்ன தெய்வ சமாதி அடைய வைத்து கும்பாபிஷேகம் நடத்த தொடங்குவார்கள். அதற்கும் வருடந்தோறும் மக்களின் வரிப்பணத்தில் நிதி ஒதுக்கீடு செய்வார்கள். கேட்டால் வழிபாடு வேறு, வணக்கம் செலுத்துவது வேறு என்று இந்த திராவிட பகுத்தறிவு அந்தர் பல்டி அடிக்கும். வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தியே முதல் இருக்கையை அபகரித்துக் கொண்ட பக்கா கிரிமினல் அல்லவா இந்த திராவிட பகுத்தறிவு.

எப்படி இவர்களால் நேரத்திற்கு நேரம் மாற்றி மாற்றி பேச முடிகிறது? பல வேஷங்கள் கட்டி மக்களை முட்டாளாக்க முடிகிறது? கல்லை கடவுளாக வைத்து வழிபட்டவனை முட்டாள் என்று சொன்ன பெரியவாள் தனக்கு 100 கோடியில் சிலை வைத்து விழா எடுத்ததைப் பார்த்து புளங்காகிதம் அடைந்தால் அவர் தானே அயோக்கியன், அவர் தானே வெங்காயம்! இந்த பெரியாரை எப்படி சமூக சீர்திருத்தவாதியாக ஏற்றுக்கொள்ள முடியும்?

ஊழலின் தந்தை என விமர்சிக்கப் படுபவருக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடியில் சிலை வைத்து வரிப்பணத்தை இப்போது விரயம் செய்யும் இவர்கள், பின் எதற்காக மக்களின் உயிர்களை ஆபத்து நேரத்தில் தங்கள் உயிர் தந்து காத்த கருப்ப சாமி, முனியசாமி சாமிகளுக்கு மக்களே சொந்த பணத்தில் சிலை வைத்து வணங்கியதை அப்போது கேலி பேசித் திரிந்தார்கள்? இந்து புராணங்களில் இரு மனைவியர் இருந்த கதைகளை எள்ளி நகையாடி விட்டு தங்கள் சொந்த வாழ்வில் வெட்கமே இல்லாமல் மனைவி, இணைவி, துணைவி, கிழவிகளை கூடவே வைத்து வாழ்ந்ததும், கிழவர்கள் குமரியரை சட்டப்பூர்வ திருமணம் செய்ய நிர்பந்தம் செய்ததும் நிகழ் கால வெட்கம் இல்லையா? இவ்வளவையும் கண்ணால் பார்த்தும் இந்த கயவர்களை ஆள்கிற இடத்தில் பொது மக்கள் தூக்கி வைத்தால் கடவுள் என்ன செய்வார்?

அரசியலே தமிழகத்தில் அத்தனையையும் தீர்மானிக்கிறது, கடவுள் அல்ல. ஆள்பவரே இங்கு நடப்பதற்கு பொறுப்பு, ஆண்டவர் அல்ல. இந்த யதார்த்த உண்மையை என்றைக்கு கடவுளை நம்புகிறவர்கள் புரிந்து கொண்டு தோ்தலில் ஓட்டுப் போடுகிறார்களோ, திராவிட கட்சிகளை தமிழகத்திற்கு பிடித்திருக்கிற சாபமாக பார்க்கிறார்களோ, அன்றைக்கே தமிழக அரசியலில் மாற்றம் மலரும். அதுவரை பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஏனென்றால், பொது மக்களின் நலனுக்காக போராடினால் பொய் வழக்குப் போட்டு நம் குடும்பத்தையே சீரழித்துச் சின்னா பின்னமாக்கி விடுவார்கள். நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போட்டால், இது அரசின் கொள்கை முடிவு என்று வாதாடி வெற்றி பெற்று அதற்காகவும் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பு செய்வார்கள். அறிவுப்பூர்வமாக வாதம் செய்தால் ஒவ்வொரு நாளும் தங்கள் கைக்கூலி ஊடகங்களில் தனி நபர் அவதூறு பரப்பி வீடியோ போட்டு நம்மை கேவலப் படுத்துவார்கள். மக்களும் செய்திகளில் வருவதை தான் உண்மை என்று நம்புவார்கள். ஆக, பொது மக்களுக்காக உழைக்கும் அத்தனை பேரும் பைத்தியக் கார டிராபிக் ராமசாமியாக யாருமே இல்லாத அனாதையாக சாக வேண்டியது தான்.

எனவே, பொது மக்களுக்காக உழைக்க விரும்புகிறவர்கள் பொறுமை காத்தே ஆக வேண்டும். அது கடினம் தான், வேறு வழியுமில்லை. மக்களாக திருந்தினால் அன்றி மாற்றம் நடக்குமே தவிர இதில் கடவுள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை, திராவிட ஆட்சியில் தமிழகம் படும் பாட்டை பரிதாபத்தோடு பார்க்கும் நல்ல மனம் கொண்டவர்கள் அரசியல் மாற்றம் கொண்டு வர இதில் செய்வதற்கும் ஒன்றுமில்லை. செய்ய முற்பட்டால் அதற்கான விளைவுகளுக்கும் அவரே பொறுப்பு, கடவுள் தோன்றி எந்த உதவியும் செய்ய முடியாது. ஆக, திராவிட கட்சிகளை ஓட்டுப் போட்டு ஆள வைத்து அழகு பார்க்கும் தமிழக மக்கள் நொந்து, வெந்து ஓட்டாண்டியாகும் காலம் வரை நடப்பதை சைடில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை.