திராவிடமும் இந்தி அழிப்பும்

திராவிடமும் இந்தி அழிப்பும்

திராவிடமும் இந்தி அழிப்பும்

நவம்பர் 10, 2022

நெருப்பை உரசிப் பார்க்க வேண்டாம், இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்கள் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் நடுவண் அரசின் இந்தி மொழி நிலைப்பாடு பற்றி புலம்புவது சரி தானா?

நாட்டு நடப்புகள்

மொழி, தமிழ், திராவிட மாடல், பள்ளி

திராவிட மாடல் ஆட்சியில் நடக்கும் தகிடு தத்தங்களை மறைக்கவும், ஓசி டிக்கெட் வாங்கி ஓசி பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை கூல் செய்யவும் தங்கள் தரப்பு சொம்பு ஊடகங்களைக் கொண்டு விடியல் அரசு நடத்தும் மற்றொரு கேவலமான நாடகமே திராவிடத்தின் இந்த புலம்பல். ஏதோ வரலாறு முழுவதும் இவர்கள் தான் தமிழைத் தாங்கிப் பிடித்தது போலவும், இல்லை என்றால் தமிழ் என்றைக்கோ அழிந்திருக்கும் என்பது போலவும் திராவிட படம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

மத்திய அரசு தமிழை அழிக்க முனைகிறது, இந்தி மொழியை திணிக்க முயல்கிறது என்கிற இவருடைய அல்பதனமான குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று பார்த்தால் இதிலும் இந்த திராவிடத்தின் கள்ளத்தனமே அப்பட்டமாக வெளிப்படுகிறது. 1967 ல் இருந்து ஒரு தலைமுறையாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்திருக்கும் இந்த திராவிடம் தமிழ் மொழி வளர சுய விளம்பரம் செய்ததைத் தவிர வேறு ஒன்றும் செய்ததில்லை என்பதற்கு கீழ்க்காணும் தரவுகள் ஆதாரம்.

இன்றைக்கு ஆங்கில மோகம் பிடித்து திரியும் தமிழகத்தின் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கையை கூட்டியது திராவிட மாடல் தான். அரசு நடத்தும் பள்ளிகளுக்கு பிள்ளைகளை பெற்றோர் அனுப்பாததற்கு காரணம் இவர்களின் கல்வி மாடல் தான். தமிழில் பேசவே தெரியாத இன்னமும் தமிழில் வாசிக்கவும் பயப்படுகிற குழந்தைகளை உருவாக்கியது திராவிடத்தின் கொள்கைகள் தான். இவரின் குடும்ப உறவுகளும், அமைச்சர்களும் நடத்தும் மெட்ரிக் பள்ளிகளும், CBSE பள்ளிகளும் தமிழகத்தின் எத்தனை இருக்கின்றன என்பதை புள்ளி விபரங்களே காட்டிக் கொடுக்கிறது.

இவர்கள் பிள்ளைகள் மட்டும் எல்லா மொழிகளையும் படித்து மத்திய அமைச்சராக ஆக வேண்டும், ஆனால் அடுத்தவர் பிள்ளைகள் தமிழையும் படிக்க தெரியாது ஹிந்தியும் தெரியாது குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும். இது தான் திராவிடத்தின் அற்பத்தனம். தன் குடும்பத்திற்கு ஒன்று, தன்னை நம்பி வாக்களிக்கும் வெகு சன மக்களுக்கு ஒன்று என்று காலத்திற்கும் ஏமாற்றிப் பிழைப்பதை சித்தாந்தமாக கொள்வதே திராவிடத்தின் குள்ளநரித்தன சித்தாந்தம். மருத்துவ மனைகள் உலகத்தரம் என்று உதார் விட்டு விட்டு, இவர்களுக்கு ஒன்று என்றால் மட்டும் தனியார் மருத்துவமனையில் படுத்துக் கொள்கிற அதே பழைய சித்தாந்தம் தான்.

இந்தி மொழி படிப்பதில் என்ன தவறு? நம் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பொது மொழி அவசியம். ஒரு மொழியை அதுவும் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியை பொது மொழியாக முன்மொழிவதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆங்கிலம் காலனி ஆதிக்கத்தால் நுழைந்த மொழி. அது உலக மொழி என்றால் இந்தி என்கிற மொழி இந்தியர்களின் மொழியாக இருப்பதில் என்ன தவறு? மும்மொழி கொள்கை மற்ற மாநிலங்களின் தாய்மொழியை எந்த விதத்திலும் சிதைக்கவில்லையே? சொல்லப் போனால் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் தான் பாடங்கள் நடத்தப் பட வேண்டும் என்கிற தேசிய கல்வி கொள்கை திட்டம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவத்தை தானே கொடுக்கிறது? திராவிட மாடல் போல தமிழைச் சிதைக்கவில்லையே.

திராவிட மாடல் ஆங்கில மோகத்தைத் திணித்து தாய்மொழி தெரியாத சவலைகளாக நம் குழந்தைகள் வளர வழி வகுக்கவில்லையா? இவர்களின் கேவலமான திராவிட மாடலை விட இதில் என்ன மொழி திணிப்பை இந்த திராவிட முதல்வர் கண்டார்? சொற்புத்தியோ, சொந்த புத்தியோ இல்லாது இந்த இந்த இலட்சணத்தில் இருக்கிற திராவிட முதல்வர் தமிழகத்தை எப்படி முன்னேற்ற பாதைக்கு வழிநடத்த முடியும்? ஒரு புதிய மொழியை அதுவும் நம் தேசத்தில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்கிற பொன்னான வாய்ப்பு அல்லவா இது. வேலை வாய்ப்பு பெறவும் உதவுமே.

121 மொழிகளையும், 270 பேச்சு வழக்கு மொழிகளையும் கொண்ட இந்தியாவில் 52.83 கோடி மக்கள் (43.63%) இந்தி மொழி பேசுகின்றனர். 22 அலுவல் மொழிகளில் பெங்காலியை 9.72 கோடி மக்களும் (8.03%) மராத்தியை 8.30 கோடி மக்களும் (6.86%) தெலுங்கை 8.11 கோடி மக்களும் (6.70%) பேசுகின்றனர். இவற்றில் ஐந்தாவதாக 6.90 கோடி மக்கள் பேசுகிற (5.70%) தமிழ் மொழியை இந்திய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று சொல்வதில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கிறதா?

உலகத்தின் தொன்மையான மொழி, உலகத்தின் பல நாடுகளில் பேசுகிற மொழி என்கிற வாதத்தை வைத்தாலும் இன்றைக்கு தமிழகத்தில் எத்தனை போ் தாய்மொழியாம் தமிழைக் கற்பதற்கு மெனக்கெடுகிறார்கள்? பிறந்த குழந்தையை எல்கேஜி, யூகேஜி என்று படிக்க வைத்து தமிழை முடமாக்குகிற வேலையைத் தானே பெற்றோர் பெருமிதத்தோடு திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் செய்கிறார்கள். தமிழை திராவிட மாடல் வளர்க்கிற அருவருப்பான முறைகளை நாம் பார்க்காமலா இருக்கிறோம்? உணர்வுப் பூர்வமாக பேசுவதை விட்டு விட்டு தமிழர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்க பழகிக் கொள்ள வேண்டும் என்பதே எங்களது ஆதங்கம்.

இவர்கள் தமிழ் வளர்ப்பது பற்றி பேசுகிற பொய் தரவுகளை விடுவோம். இந்த திராவிட மாடலின் நிதி அமைச்சர் தமிழக சட்டமன்றத்தில் தமிழில் பட்ஜெட்டின் போது பேசிய கேவலத்தை ஒட்டுமொத்த தேசிய ஊடகங்களும் கேலி பேசவில்லையா? பேச தான் தெரியவில்லை, எழுதியதை படிக்கவுமா தெரியாது? தலைநகர் சென்னையின் பெண் மேயரால் எழுத்துக் கூட்டி கூட தமிழை வாசிக்க முடியாதது தமிழுக்கான கேவலம் இல்லையா? இந்த அவலட்சணங்கள் தான் தமிழ் வளர்க்கும் திராவிடத்தின் இலட்சணம்.

1960 களில் மொழிப்போரை தூண்டி விட்டு அப்பாவிகளைக் காவு கொடுத்து ஆட்சியைப் பிடித்தவர்களே இந்த திராவிடர்கள். அந்த போராட்டத்தில் இவர்களுக்கோ, இவர்களின் குடும்ப வாரிசுகளுக்கோ எந்த வித சிறு காயமோ, உயிர் இழப்போ ஏற்படவில்லை. ஆனால் பல இளைஞர்கள் உயிரிழந்தனர். இப்போதும் மொழி வெறியைத் தூண்டி போராட தூண்டுவாார்கள். இவர்களுக்கு ஆபத்து எதுவுமில்லை. மிஞ்சி போனால் இவர்களை சிறையில் அடைப்பார்கள், வீட்டிலிருந்து சாப்பாடு போகும், சிறைத்துறையும் ஏசி அமைத்து இவர்கள் பொழுது போக்க எல்சிடி திரை அமைத்துத் தரும். சாக போவது அப்பாவி கொத்தடிமை திராவிட தொண்டர்களே. இழப்பீடு கொடுத்து அதிலும் அரசியல் செய்ய தயங்காத ஈனப்பிறவியரே திராவிட தலைகள்.

மதுவின் போதையிலும் திராவிட அடிவருடிகளாம் சினிமா கூத்தாடிகளின் மயக்கத்திலும் இருக்கிற வெகு சன மக்களை எழுப்பவும் முடியாது, அவர்களின் மது மற்றும் சினிமா போதையை தெளிய வைக்கவும் முடியாது. அதனால் வெகு சன மக்களின் உயர்விற்காக சிந்திக்கிற மேல்நிலையினர் இந்த திராவிடத்தையும் அவர்களோடு ஒட்டிக் கொண்டு வாலாட்டி திரிகிற மதவெறி நிறுவன தலைவர்களையும் ஒன்று சோ்ந்து ஓட ஓட விரட்டி அடிக்க அவரவர் வழியில் தன்னந்தனியாக முயற்சிக்க வேண்டும். சோ்ந்து உழைப்பது பயன் தராது, காரணம், இந்த திராவிட நச்சு வோ் எளிதாக நல்லவர்களின் ஒற்றுமையைச் சிதைத்து விடும்.

பொய் வாக்குறுதிகளை கூசாமல் அள்ளிக் கொடுத்து ஆட்சிக்கு வந்த அர்த்த ராத்திரியில் மாற்றிப் பேசும் இந்த திராவிட மாடலை ஆதரிக்கிற அத்தனை பேருமே நம் காலத்திய அசுரர்கள், இந்த விடியல் தான் வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டு ஓட்டுப் போட்டால் கடவுளால் என்ன தான் செய்ய முடியும்?