கடவுளும், அறிவியலும்

கடவுளும், அறிவியலும்

கடவுளும், அறிவியலும்

அக்டோபர் 28, 2021

கடவுள் நம்பிக்கை

Miracle ங்கிற வார்த்தய புரிஞ்சுக்க, அத ஒட்டுன ரெண்டு வார்த்தைய நாம படிக்கனும். மந்திரம், தந்திரம். இந்த ரெண்டுக்கும் ரொம்ப நெருக்கம், கொஞ்சம் வித்தியாசம்.

நீங்க மேஜிக் ஷோ பாத்திருக்கீங்களா? அதாங்க, கண்கட்டி வித்தை அது மந்திரம் கிடையாது, வெறும் தந்திரம் – தான்னு, மேஜிக் ஷோ நடத்துறவங்களே, மொதல்ல சொல்லிட்டு தான் நடத்துவாங்க.

ஆனா, நம்ம கண்ணுக்கு எப்படி தெரியுது? உண்மையிலேயே நடக்குற மாதிரி தெரியுது இல்ல? இது மக்கள ரசிக்க வைக்கிற ஒரு கலை. அத்தோட இத தொழிலா ஒரு சில குடும்பங்கள் பாரம்பரியமா செஞ்சிட்டு வாராங்க.

அடுத்தது மந்திரம். சொன்னா நடக்குறதுக்கு பேரு மந்திரம் ன்னு நாம புரிஞ்சி வச்சிருப்போம்! ஆனா, உண்மையில, அப்படி ஒண்ணு கெடயவே கெடயாது. நடக்கவும் முடியாது.

உண்மையிலே, இது மதநூல்கள்ளல கடவுள் நம்பிக்கய வெளிப்படுத்த சுருக்கமா பயன்படுத்துற ஒரு வகையான மொழி வடிவம்.

நெஜ வாழ்க்கயில யாராவது எனக்கு மந்திரம் தெரியும் ன்னு சொல்லி ஏதாவது செஞ்சிக்காட்டுனா, அத சித்து வேலன்னும் சொல்லலாம் அல்லது ஏமாத்து வேலன்னும் சொல்லலாம், தந்திரம்ன்னும் சொல்லலாம்.

ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம்: இது ஒரு பக்கா பிராடுத்தனம்.

மந்திரம், மந்திரவாதின்னு சொன்னாலே அது பொய் தாங்க! அப்படி ஒண்ணு எக்காலத்திலயும் நடந்தததே கெடயாது! ஆனா, காலா காலாமா செய்யப்பட்டு வர்ற அயோக்கியத்தானம்.

Miracle - ங்கிறது, மந்திரமோ, தந்திரமோ கிடையாது. அது கடவுளோட ஆற்றல். ஆனா, மந்திரத்திலயும்சரி, தந்திரத்திலேயும் சரி, மனுச அறிவு தான் எல்லாமே. கடவுளுக்கு அங்க வேலயே கிடையாது.

பொதுவா, புதுமை – அப்படிங்கிற வார்த்தைய நாம கேட்ட உடனே, நம்ம ஞாபகத்துக்கு வர்றது, இந்த மந்திரம்.

கடவுள் நம்ம முன்னால வந்து, வரம் கொடுப்பாரு, சொடக்கு போடறுதுக்குள்ள புது வீடு வந்துரும், புது காரு வந்துரும், பக்தா! உன் தவத்தை மெச்சி, நீ கேட்கிற வரத்தைக் கொடுக்கேன்! ஒரு நிமிசத்துல கேன்சர் கட்டி மாயமா மறைஞ்சிடுச்சி.

இப்படித்தான நினைக்கீங்க? அப்படி ஒரு Magic வரலாத்துல இதுவர எங்கேயும், எப்போதும் நடந்ததும் கிடையாது. நடக்கவே முடியாதுங்க!

ஆனா, மதநூல்கள்ல நாம வாசிக்கிற Miracle - ங்கிறது, இது கிடையாதுங்க!

அப்ப மதநூல்ல சொல்லப்பட்டிருக்கிற Miracle - ங்கிறது என்ன? அத கொஞ்சம் ஆங்கிலத்துல சொல்றேனே! அது கொஞ்சம் புரிஞ்சிக்க ஈசி. “Extraordinary acts in a ‘Natural’ Way is a MIRACLE” – இதாங்க புதுமை.

“அசாதாரணமான நிகழ்ச்சி, இயற்கையாகவே, நாம் ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் நடப்பது தான் ‘Miracle”.

அது நடந்துச்சுன்னா, இப்போதைக்கு எப்படி இது நடந்துச்சுன்னு, அறிவியலாலே விளக்க முடியாத அசாதாரணமான நிகழ்வா இருக்கலாம். ஆனா, கண்டிப்பா ஒருநாள், அறிவியலால அதுக்கு விளக்கம் சொல்ல முடியும். ஏன்னா, புதுமை-ங்கிறது, அறிவியலுக்கு அப்பாற்பட்டது கிடையாதுங்க. இயற்கை விதிகளுக்கு முரணானதும் கிடையாதுங்க.

அதே வேளயில, அது நடக்கும்போது, நம்மால ஆச்சரியப்படாம இருக்க முடியாது. ஏன்னா, அது சாதாரணமான நிகழ்வு கிடையாது, அசாதாரணமானது. It is NOT ORDINARY, rather IT IS STH EXTRAORDINARY.

கல்லு சப்பாத்தியா மார்றதோ, பாம்பு தேளா மாறுவதோ இயற்கை விதிகளுக்கு, முரணானது. அப்படி எதுவுமே இயல்பா இயற்கையா மாற முடியாதுங்க.

வேணும்னா அறிவியல் ஆராய்ச்சியாள ஒரு சில கெமிக்கல்ஸ் கலந்து, செயற்கையா மாத்த முடியும்ங்க!

அப்ப மதநூல்கள்ல போட்டிருக்குன்னா? அதான் ஏற்கெனவே சொன்னேனே அது ஒரு சமய இலக்கிய மொழி வடிவம். It should NOT be READ & INTERPRETED LITERALLY. It’s a SYMBOLIC LANGUAGE.

எங்கயாவது, ‘புதுமை’ ‘அற்புதம்’நடக்குதுன்னு சொன்னாங்கன்னா, அது “கட்டுக்கதைங்க”.

“பிறவியிலேயே” முடமானவன் நடக்க முடியாதுங்க.

குறிப்பிட்ட பிள்ளக்கி மட்டும் அள்ளிக் கொடுத்திட்டு, மத்தவங்கள பட்டினி போடுற தாய், நம்ம பாரத மண்ணுலயே இருக்க மாட்டாங்க! ஒலகத்துக்கே படியளக்கிற கடவுள்ங்கிற தாய, எப்படிங்கஒங்களால அப்புடி கற்பன பண்ணி பாக்க முடியுது?