திமுக மறைமாவட்டம்
மே 30, 2023
ஆன்மீகத்தில் அரசியல் கலக்கக் கூடாது என்கிறார்கள். ஆனால் ஊழலில் ஊறிப் போன திராவிட அரசியல் வியாதிகளை ஆன்மீக நிகழ்விற்கு வரவேற்கும் கிறிஸ்தவ மத குருமார்களின் அரசியலை எப்படி விமர்சிப்பது?
நாட்டு நடப்புகள்
ஊழல், முதல்வர், பாதிரியார்
தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள தூத்துக்குடி கிறிஸ்தவ மறைமாவட்டம் தன்னுடைய நூற்றாண்டு விழாவை வருகிற ஜீன் மாதம் கொண்டாடுகிறது. அதற்கான அழைப்பிதழ் தான் இது. கட்சி விழா அழைப்பிதழுக்கும், இந்த ஆன்மீக விழா அழைப்பிதழுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? ஒரு கட்சி மாநாடு போல அத்தனை திமுக தலைவர்களை மட்டும் அழைப்பது இவர்கள் எவ்வளவு கைதோ்ந்த அரசியல் சூழ்ச்சியராக இருக்கிறார்கள் என்பதற்கு சிறந்த ஆதாரம். நூற்றாண்டுகளாக கேவலமான அரசியல்வாதிகளோடு கைகோர்த்து தான், தங்கள் மதத்தையும் வளர்த்தெடுத்து இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நூற்றாண்டு விழாவே சிறந்த உதாரணம்.
இந்த மறைமாவட்டத்தில் சமீபத்தில் பிஜேபிக்கு ஆதரவாக பேசிய ஒரு பாதிரியாரை உடனடியாக திருச்சபையிலிருந்து விலக்க வேண்டும் என்கிற குரல் தமிழகம் முழுவதிலும் இருக்கிற கிறிஸ்தவர்கள் மத்தியில் ஓங்கி ஒலித்தது. ஆனால் ஒரு ஆன்மீக விழாவிற்கு திமுக கட்சியினரை மட்டும் அழைத்து விருந்து வைத்தால் மட்டும் அந்த கிறிஸ்தவ கைக்கூலி கூட்டம் கள்ள மௌனம் காத்து ஓரமாக ஒதுங்கி நிற்கிறது. இவர்களின் திருஅவைச் சட்டம் (287-2)அரசியல் கட்சிகளில் ஈடுபாடுமிக்க பங்கேற்பு கூடாது என்கிறது. அப்படியானால் தங்கள் ஆன்மீக மேடைகளில் குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவர்களை மட்டும் ஏற்றுவது அரசியல் ஆகாதா? தங்களின் புனித சட்டத்திற்கு எதிரானது ஆகாதா?
இவர்கள் அழைப்பது குறிப்பிட்ட கட்சியின் தலைவர்கள் இல்லையாம், மாநிலத்தை ஆளும் கட்சியின் தலைவர்களாம் - சிலர் முட்டுக் கொடுக்கின்றனர். சரி, மாநிலத்தை ஆண்டாலே அழைக்கலாமா? அதிகாரம் இருந்தாலே கூலை கும்பிடு போட வேண்டுமா? இந்த திமுக ஆட்சியில் தானே சாராயக் கடைகள் திறந்து விடப்பட்டு கணக்கில்லா உயிர்கள் செத்து மடிந்து கொண்டு இருக்கின்றன. கள்ளச் சாராயத்திற்கு பலியானோர் கடந்த வாரம் எத்தனை போ். 10 இலட்சம் கொடுத்தால் இறந்தவன் ஆவி சுருண்டு படுத்து விடுமா? பாவக்கறை நீக்கப்பட்டு விடுமா?
தமிழகத்தில் சாராயக் கடைகளை தெருக்கோடியெங்கும் திறந்து பெண்களின் தாலிகளை அறுத்த கொடூரர்கள் இந்த திமுக சாராய வியாபாரிகள் அல்லவா. அவர்களோடு கைகோர்க்க எப்படி மனம் வருகிறது. சாராயமே தீங்கு. இதில் என்ன கள்ளச் சாராயம், நல்ல சாராயம்? சாராயத்தை அரசாங்கம் விற்றால் அது நல்ல சாராயம் ஆகி விடுமா? ஒரே நாளில் இத்தனை பேரை கள்ளச் சாராயம் காய்த்ததற்காக கைது செய்ய முடிகிறது என்றால் இவ்வளவு நாட்களும் இவர்களுக்குத் தெரிந்து தானே இந்த பிசினஸ் நடந்து கொண்டு இருந்திருக்கிறது என்று அர்த்தம். கமிசன் இல்லாமலா மௌனம் காத்தார்கள்?
இந்த திமுக ஆட்சியில் தானே ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகின்றன. இந்த திமுக ஆட்சியில் தானே வாரிசு அரசியல் தலை விரித்து ஆடுகிறது. இவர்கள் வைத்த பேனர் விழுந்து எத்தனை அப்பாவி உயிர்கள் போயிக்கின்றன. இந்த கேள்விகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களால் பதில் தர முடியுமா? கடவுளை கடந்த காலத்தில் எப்படியெல்லாம் தரங்கெட்டு விமர்சித்தார்கள். கடவுள்களை இழிவுபடுத்தினார்கள். கிறிஸ்தவர்களை மனித சதையை உண்ணும் காட்டுமிராண்டிகள் என்றார்கள். இப்போது ஒட்டிக் கொண்டால் பழைய பாவங்கள் கழுவப்பட்டு விடுமா?
இந்த ஆட்சியில் தானே மக்களின் வரிப்பணத்தில் 400 கோடியில் ஊழல் சாம்ராஜ்ஜிய தலைவனின் சிலைக்காக இயற்கையைச் சீரழித்து பணம் கடலில் கொட்டப்படுகிறது. இந்த ஆட்சியில் தானே சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளின் சலுகைகள் பறிக்கப்படுகின்றன. இந்த ஆட்சியில் தானே விலைவாசி எகிறி கொண்டேயிருக்கிறது. இந்த ஆட்சியில் தானே சுய விளம்பரங்களுக்காக மட்டும் பொதுமக்களின் வரிப்பணம் வாரி வாரி இறைக்கப்படுகின்றன. இதையெல்லாம் சிந்திக்க தெரியாத அளவிற்கு அழைக்க ஆதரவு கொடுப்பவர்களின் அறிவு மழுங்கிப் போய்விட்டதா? இதனைப் புரிந்து கொள்ள ஞானம் கூட தேவை இல்லையே? சுயபுத்தி கூட இந்த புண்ணியவான்களுக்கு இல்லையா?
பாஜக ஆட்சி நடக்கும் இடங்களில் நடந்த மோசமான சம்பவங்களை இந்த கிறிஸ்தவ கைக்கூலிகள் பட்டியலிடுகிறார்கள். ஆனால் பாவம், திராவிட அரசுகள் செய்த கோர சம்பவங்கள் எதுவும் இவர்களின் நினைவுகளுக்கு வராது போலும். இதனை என் நினைவாகச் செய்யுங்கள் என்று இவர்களின் தலைவர் சொன்னதை மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நினைவுகூறும் இவர்கள் திராவிட அரசுகள் இந்த 70 ஆண்டுகள் செய்த கேவலங்களை, கொலைகார பாதக செயல்களை மட்டும் மறந்து மன்னித்து விடுகிறார்கள்.
இதே தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையை நிறுவியது யார்? அப்போது மக்கள் சார்பில் நின்று போராடிய சில நல்ல பாதிரியார்களை கைது செய்து சிறையில் அடைத்தது யார்? திராவிடத்திற்கு சொம்படிக்கும் இந்த பாதிரிக் கூட்டங்கள் பதில் சொல்வார்களா? சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு நடக்க நாடாளுமன்றத்தில் ஓட்டளித்தது யார்? தாது மணல் கொள்ளைக் கும்பலை தூத்துக்குடி, திருநேல்வேலி மாநிலத்தில் வளர்த்து விட்டது யார்? தாமிரபரணி மாஞ்சோலையில் ஏழை தொழிலாளிகளை வெறி பிடிக்க சுட்டதும், ஆற்றில் முக்கிக் கொன்றதும் யார்? இந்த புனித மத சாயம் பூசி மெழுகி மக்களைத் திசைதிருப்புவதில் கைதோ்ந்த இந்த பூசாரிக் கூட்டங்கள் பதில் சொல்வார்களா? இவர்கள் என்ன யோக்கியத்தில் ஆலயங்களில் நின்று கடவுளின் வார்த்தையை போதிக்க முடியும்? கொலைகாரனோடு சோ்ந்து கூத்தடிக்கிற இவர்களா கடவுள் சார்பில் நின்று ஏழை எளியவருக்காக பேச போகிறார்கள்?
இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் செத்து மடிய உண்ணாவிரதம் நாடகம் நடத்திய கோமாளி தலைவனை அவ்வளவு எளிதாக இந்த அங்கிகள் கூட்டத்திற்கு மறந்து விட்டதா? எப்படி இதயத்தில் ஈரமே இல்லாமல் இந்த சிறுபான்மை இழிபிறவிகளுக்கு இவர்களால் இன்னமும் வெட்கமே முட்டுக் கொடுக்க முடிகிறது? ரத்தக்கறை படிந்த அதிகாரவர்க்கத்திற்கு சாமரம் வீச முடிகிறது? இதனை கடவுள் மன்னிப்பாரா? இதனை கடவுள் ஏற்றுக் கொள்வாரா? இவர்கள் வழியாக கடவுள் இனியும் பேசுவாரா? வெட்கக்கேடு.
அப்பாவி சிறுமிகள் சீரழிக்கப்பட்ட கதைகள் இவர்களது ஆட்சியில் நடந்ததே கிடையாதா? கொடியவர்கள், இந்த திராவிட தலைவர்களின் விழாவில் விடுதலை செய்யப்பட்டதே கிடையாதா? அப்பாவிகளும், சமூக போராளிகளும் பொய் வழக்குகளால் சிதைக்கப்பட்டு சின்னாபின்ன மாக்கப்பட வில்லையா? இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சி நடத்தும் தலைமைக்கு மனச்சாட்சியே இல்லாமல் எப்படி கிறிஸ்தவர்ளால் முட்டுக் கொடுக்க மனம் வருகிறது? அப்படி என்றால் அவர்களுக்குள் தானே மதவெறி ஊறிக் கிடக்கிறது.
ஒட்டுமொத்த சினிமாத் துறையையும் கபளீகரம் செய்யும் கொடுமை இந்த ஆட்சியில் தானே நடக்கிறது. கொடிய லாக்கப் மரணங்கள் இவர்களது ஆட்சியில் நடக்கவில்லையா? ஆனால் சட்டப்பேரவையில் திராவிட முதல்வர், ஆளுநர் வாசிக்க எழுதிக்கொடுத்திருக்கிறார், தமிழகம் அமைதிப் பூங்கா என்று வாசிக்க வேண்டும் என்று. இவர்கள் எழுதிக் கொடுத்தால் பொய்யைக் கூட ஆளுநர் வாசித்து விட வேண்டுமாம். அது தான் அரசியல் அமைப்பாம். கதை விடுகிறார்கள். இவர்கள் கட்டுகிற கதைக்கு அரசியலமைப்பை கேலி செய்கிறார்கள். ஆளுநரையும் இவர்கள் ஆட்டுவிக்கிற பொம்மை போல நினைத்து விட்டார்கள் போலும்.
பிஜேபி சாத்தானின் கட்சியும் அல்ல, திமுக மக்களை மீட்க வந்த வானதூதனின் கட்சியும் அல்ல. இரண்டுமே அரசியல் கட்சிகள். இதில் யாருக்கு வாக்களிப்பது என்பதோ, யாரை எதிர்க்க வேண்டும் என்பதோ தனிமனித சுதந்திரம். அப்படியே நிலைப்பாடு எடுத்தாலும் இதுவரை ஆட்சியில் அமராத புதிய கட்சிகளுக்கு ஆதரவு தரலாமே தவிர, ஆட்சியில் அமர்ந்தும் கொள்ளையடிப்பது ஒன்றையே குலத்தொழிலாக கொண்டுள்ள திமுகவிற்கு ஆதரவு கொடுப்பதை எந்த காலத்திலும் இனி ஏற்க முடியாது. இதற்கு மத மேடைகளைப் பயன்படுத்துவது ஆன்மீக வியாபாரிகளின் பேடித்தனமே. இந்த மத வியாதிகள் கைதோ்ந்த குள்ளநரிக்கூட்டம் என்பதற்கான ஆதாரமே இவர்களின் திராவிட சார்பு அரசியல் நிலைப்பாடு.
இந்த கத்தோலிக்க மத தலைவர்களில் பலர் பிஜேபி தயவோடு நடந்த கடந்த அதிமுக ஆட்சியில் மதுவிலக்கு கேட்டு ஆன்மீக போராட்டமும், அறவழிப் போராட்டமும் நடத்தினார்கள். ஆனால் இப்போதோ வாய்மூடி மெளனியாக இருக்கிறார்கள். இவர்களின் சிறுபான்மை ஆதரவோடு நடக்கும் இன்றைய ஆட்சியில் மதுவிலக்கிற்காக இவர்கள் செய்த போராட்டம் என்ன? குறைந்தபட்சம் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற இவர்களின் மனு கூட குப்பையில் போடப்பட்டதே? இதற்கும் ஒரு எதிர்வினை கூட இவர்களிடமிருந்து வரவில்லையே? அதிகாரத்தைக் கண்டால் பயமா? இது தான் இறைவாக்கு போதிக்கிற இலட்சணமா?
அன்பை மட்டுமே போதிக்கிற கூட்டம் என்று பிதற்றுகிற இந்த சிறுபான்மை கிறிஸ்தவ கூட்டம் தனிப்பட்ட ஒரு கட்சியின் மீது காட்டும் இந்தளவு வன்மத்திற்கு என்ன காரணம்? தங்களின் அத்தனை சிறுபான்மை ஊடகங்கள் வழியாகவும் ஒரு கட்சியின் மீது இவர்கள் வெறுப்பு ஏன்? அத்தனை அயோக்கியத்தனங்களையும் ஆட்சியில் இருந்து செய்கிற திமுகவை மட்டும் விமர்சிக்காமல் எங்கோ இருக்கிற பிஜேபியை மட்டும் எதிர்க்கும் மர்மம் என்ன? தங்கள் மதத்திற்கு ஆபத்திற்கு வந்து விடும் என்பதாலா? மக்களள் நலனை விட மதம் தான் இவர்களுக்கு பெரிதா? இது மத துவேஷம் இல்லையா? மதவெறி ஊறி நாடி நரம்பெல்லாம் ஊறிப் போயிருக்கிற மோசம் இல்லையா?
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ மத தலைவர்கள் எப்போதுமே திராவிட கட்சி ஆதரவு நிலைப்பாடும், பிஜேபி கட்சி எதிர்ப்பு நிலைப்பாட்டையும் வெளிப்படையாகவே எடுத்தும் அறிவித்தும் இருக்கிறார்கள். மத வழிபாடுகளுக்காக பயன்படுத்தும் இடங்களை அரசியல் பேசும் தளங்களாகவும், தோ்தலில் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை அறிவிக்கிற தளமாகவும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். வழிபாட்டுக்காக கொடுக்கும் சுதந்திரத்தை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் இந்த கிறிஸ்தவ மத தலைவர்களின் செயல்பாடு இவர்களின் திரு அவை சட்டத்திற்கு எதிரானது கிடையாதா? அரசியல் சாசனத்திற்கு எதிரானது இல்லையா?
தோ்தலில் வாக்களிப்பது என்பது தனிமனித உரிமை. அந்த உரிமை கொண்ட மக்களை எடுப்பார் கைப்பிள்ளையாக கடவுளைக் காட்டி பயமுறுத்தி, மத அரசியல் விளம்பரம் செய்து, தாங்கள் விரும்பும் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போட சொல்வது அநியாயம் இல்லையா? பாவம் இல்லையா? அரசியல் அமைப்பு சாசனத்திற்கே எதிரானது இல்லையா? கடவுள் நம்பிக்கைக்கே விரோதமானது இல்லையா? புனிதமான ஆன்மீகத்தை கேலிக் கூத்தாக்குவது இல்லையா?
கருக்கு மட்டையின் அடிப்படை கேள்வி: 70 ஆண்டுகள் ஆட்சி செய்து ஊழலில் கொளுத்து, கட்சியை குடும்ப அரசியலாக்கி, சாராயக் கடைகளைத் திறந்து வைத்து, இயற்கையைச் சீரழித்து சின்னா பின்னமாக்கி, எதிர்க்கிற எளியவர்களை வெட்ட வெளியில் சுட்டுக்கொல்வதை, பொய் வழக்கு போட்டு அப்பாவிகளை பயமுறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிற திராவிட கட்சிகளிலிருந்து எவரை ஆன்மீக நிகழ்வுக்கு அழைத்தாலும் அது ஆன்மீகத்தையே கேலிக்குள்ளாக்கும் படுபாதக செயலே. இதற்கு கிறிஸ்தவ நூற்றாண்டு விழாவும் விதிவிலக்கல்ல. உண்மையில், இவர்கள் கொண்டாடும் விழாவில் ஊழல் திமுக இருக்கும், நய வஞ்சக அரசியல் இருக்கும். கடவுள் விரோத கொள்கையும் இருக்கும். ஆனால் கடவுள் அங்கு இருக்க மாட்டார், கடவுளால் இவர்களோடு தங்க முடியாது என்பது கருக்கு மட்டையின் ஆழமான நம்பிக்கை.