அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்

அக்டோபர் 31, 2023

காட்டு மிராண்டித்தனம், காலனி ஆதிக்கம் – இந்த வரிசையில் மேற்கு உலகத்தின் நவீன பரிணாம வளர்ச்சி ‘காவாலி தனம்’. உதாரணம் இஸ்ரயேல்-ஹமாஸ் போர்.

உலக நிகழ்வுகள்

இஸ்ரயேல், தீவிரவாதி, பொதுமக்கள்

பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிற கேவல வேலையை என்றைக்கு தான் இந்த மேற்கு நாடுகளை ஆளும் தலைகள் நிறுத்துமோ, கடவுளுக்கே வெளிச்சம். ரஷ்ய – உக்ரைன் சண்டையை மூட்டி விட்டு அந்த இரத்த களறியில் தங்கள் ஆயுதங்களை விற்று பார்த்த காசு போதாது என்று இப்போது மத்திய கிழக்குப் பகுதியில் சண்டையை மூட்டி விட்டு பிணந்தின்னி கழுகுகளாக ஆயுத பேரம் செய்ய காத்து கிடக்கிறார்கள். ஆசிய, ஆப்ரிக்க நாடுகளின் வளங்களைக் கொள்ளையடித்துச் சுரண்டிப் பிழைத்து கொழுத்தது இன்னமும் போதாது போலும் இந்த சேடிஸ்ட் தலைகளுக்கு.

இவர்களின் நிலைப்பாடு எப்போதும் ரெண்டு கட்டான் தான். ரஷ்யா அடுத்த நாட்டைத் தாக்கினால் அது சர்வதேச விதிமுறை மீறல். ஆனால் அதையே இஸ்ரயேல் செய்தால் அது எல்லையைப் பாதுகாக்கும் அடிப்படை உரிமை. என்ன ஒரு கேவலமான வாதம்! லாஜிக்கே இல்லாத வாதம்! இதில் இவர்களுக்கு என்ன இலாபம் என்று கேட்க தோன்றும்?

அடுத்தவர் வளத்தைக் கொள்ளையடிக்க, தங்கள் ஆயுத ஆதிக்கத்தை உலகின் அத்தனை இடங்களிலும் நிலை நிறுத்த, எளியவரை அச்சுறுத்தி ஆதாயம் பெற, தங்களை வல்லரசாக உயர்த்திக் காட்ட, ஏழை நாடுகளை கழிவுகளைத் தூக்கி எறியும் குப்பைத் தொட்டியாக்க என்று இவர்களின் இலாப நோக்கு நீ...ளம். இந்த திட்டங்களுக்கு யாராவது தடையாக அல்லது எதிர்ப்பு மனநிலையில் இருந்தால் உடனே அவர்களை தீவிரவாத முத்திரை குத்தி பொது மக்களைக் கொன்று குவிக்க போர் முழக்கம் செய்து விடுவார்கள்.

போரை தூண்டி விடுவது ஒன்றும் இவர்களுக்கு புதிதல்ல. முதலில் பெட்ரோலிய வளத்தைச் சூறையாட ஈராக்கின் மீது பொய்க் குற்றம் சுமத்தி போரில் பொது மக்களைக் கொன்று குவித்தார்கள். அடுத்து ஆசியாவில் ஆயுத பலத்தை நிறுத்த அதையே ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தார்கள். இப்போது இஸ்ரயேல் பின்னால் ஒளிந்து கொண்டு மத்திய கிழக்குப் பகுதி நாடுகளை கன்ட்ரோல் செய்ய அத்தனை தகிடு தத்த திட்டங்களையும் செயல்படுத்த இந்த தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம் செய்கிறார்கள். அவ்வளவு தான் வேறுபாடு. தீவிரவாதிகளை வளர்த்து விடுவதும் இவர்கள் தான். தீவிரவாதிகளை அழிக்க ஒன்று கூடுவோம் என்று புரட்சியாக அறைகூவல் விடுவதும் இவர்கள் தான். உண்மையில் இவர்களே அதி பயங்கர தீவிரவாதிகள்.

ரஸ்ய – உக்ரைன் பிரச்சனையில் மனிதாபிமானம் எங்கே? பொதுமக்கள் என்ன தவறு செய்தார்கள்? என்றெல்லாம் குய்யோ முய்யோ என்று கத்திய அத்தனை மேற்கத்திய பத்திரிக்கையும் இன்னமும் அக்டோபர் 7 ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் பற்றி மட்டுமே புரளி பேசிக் கொண்டிருக்கிறது. இஸ்ரயேல் நடத்துகிற போர் கொடூரங்கள் பார்க்காத குருடர்கள் போலும். ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்த உக்ரைன் கொடியை கட்டிப் பிடித்து போஸ் கொடுத்த புனிதர் இப்போது எங்கு சென்றாரோ தெரியவில்லை. ஆவியானவருக்கே வெளிச்சம்.

மேற்கத்திய நாடுகளை ஆளும் தலைவர்களின் வக்கிரப் புத்தி இது தான்: இவர்கள் புலி என்று சொன்னால் அது புலி என்று நம்ப வேண்டும். இவர்கள் பூனை என்று சொன்னால் அது பூனை என்று சொல்ல வேண்டும். பாலஸ்தீனர்களிடம் பிடுங்கி தகுதி இல்லாத இஸ்ரயேலுக்கு அடுத்தவர் நாட்டை தாரை வார்ப்பார்கள். ஆனால் உரிமை இழந்து நம்பிக்கை இழந்து அஹிம்சை போரில் தோல்வியுற்று ஆயுதம் ஏந்தி போராடிய தமிழினத்தை தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஒன்றுபட்டு அழிப்பர். லாஜிக் இல்லாத லாஜிக்கே மேற்கத்திய வர்க்கத்தின் குரூர எண்ணம். இதில் கொடுமை, தமிழர்களை அழித்ததில் இஸ்ரயேலும் அடக்கம்.

உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்வது, அடுத்தவர் கதையைத் திருடி தங்கள் வரலாறாக திரித்துக் கூறுவது, கடவுளையும் களவாடி தூக்கிக் கொண்டு போய் நன்றாக ஜோடனை செய்து புதுமையாக உருவாக்கி அவர் எங்கள் கடவுள், அவர் ஒருவரே உண்மையான கடவுள், ஒரே கடவுள், மற்ற கடவுளை வணங்குவது பாவம், தெய்வ குற்றம் என்று கடவுள் வாய் வழியாகவே பாவக் கதைகளை உருவாக்குவது, தாங்கள் மட்டுமே கடவுளால் தோ்ந்து கொள்ளப்பட்ட புனித இனம் என்று புரூடா விடுவது – இவை எல்லாம் வழி வழியாக வரும் இஸ்ரயேல் தலைவர்கள் எடுத்திருக்கிற சத்திய பிரமாணம் போல.

அன்றைக்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டு காடுகளில் திரிந்து கொண்டிருந்த இந்த நாடோடி கூட்டத்திற்கு அடைக்கலம் கொடுத்த வெகுளி மக்களான கானான் தேசத்தவரைக் கொன்று குவித்து அந்த நாட்டை இரத்தக் களறியாக்கி ‘இந்த தேசம் எங்கள் கடவுள் எங்களுக்கு வாக்களித்தது’ என்று பிடுங்கிக் கொண்டார்கள். இன்று மேற்கத்திய நாடுகளின் தலைவர்களின் பின்னால் களவாணித்தனமாய் இயங்கி அவர்களை இயக்கி பாலஸ்தீனத்தை திட்டம் போட்டு அபகரித்துக் கொண்டு கானானியருக்கு செய்த அதே கொடூரத்தை பாலஸ்தீன மக்களுக்கு மீண்டும் செய்கிறார்கள்.

அன்றைக்கும் ஈவு இரக்கமின்றி கானானிய மக்களின் குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என்று இலட்சக் கணக்கில் கொன்று குவித்தார்கள். இன்றைக்கும் அதையே நவீன ஆயுதங்களை வைத்துக் கொண்டு மேற்கு நாடுகளின் ஆதரவோடு மனித சமூகத்தை கபளீகரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். கடவுள் பெயரைச் சொல்லி அப்பாவிகளைக் கொன்றொழிக்கும் ஜிகாத், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரயேல் இராணுவத்திற்கும் என்ன வித்தியாசம்? தீவிரவாதம் கொடுமையானது. ஆனால் அரச பயங்கரவாதம் அதனை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது, குரூரமானது. அதற்கு உதாரணம் இஸ்ரயேல் தலைகள்.

இந்த மேற்கு உலகை ஆளும் தலைகள் நவீன காலத்திலும் எவ்வளவு குரூர எண்ணம் கொண்ட அரக்கர் போல சிந்திக்கிறார்கள் என்று பார்க்கிற போது இவர்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த காலத்திலும், ஆசிய, ஆப்ரிக்க மக்களை சுரண்டி கொள்ளையடித்த காலனி ஆதிக்கத்திலும் எவ்வளவு கொடூரன்களாக இருந்திருப்பார்கள், மக்களை எப்படி எல்லாம் சித்வதை செய்து இருப்பார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சம் பதை பதைக்கிறது. இதில் வேடிக்கை இவர்கள் நமக்கு மனிதத்தைப் பற்றியும், மனித உரிமை பற்றியும், மனித உரிமை மீறல் பற்றியும் பக்கம் பக்கமாக பாடம் எடுப்பது.

போரும் நடக்க வேண்டுமாம், குண்டுகள் வீசுவதையும் நிறுத்த முடியாதாம், இராணுவ நடவடிக்கை தொடர வேண்டுமாம், அப்பாவி மக்களை பலியும் கொடுக்க வேண்டுமாம், அதே நேரத்தில் இவர்கள் மனிதாபின உதவிகளும் செய்வார்களாம். அது தடையின்றி நடக்க தீர்மானம் நிறைவேற்ற ஆதரவும் தருவார்களாம். எந்த அளவுக்கு சேடிஸ்ட் எண்ணம் இவர்களின் ஜீன்களில் ஊறிப் போயிருந்தால் இப்படி செய்ய தோன்றும்?

ஹமாஸ் தாக்குதல் நடத்தினால் எதிர்த்து சண்டையிட வேண்டியது ஹமாஸ் என்கிற தீவிரவாத குழு தானே? அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்? சர்வதேச விதிகளுக்கு எதிராக அத்தனை மனித உரிமை மீறல்களையும் போரில் செய்வதை ஐ.நா சொல்லியும் கேளாது செவிடு போல தன் போக்கில் குண்டுகளை அள்ளி வீசுவதை வேடிக்கைப் பார்க்கும் நாம் இன்னமும் காட்டு மிராண்டி உலக மனநிலையில் இருந்து பரிணாம வளர்ச்சி பெறவில்லை என்பதாக தானே அர்த்தம்? இந்த ஐ.நா சபை இருந்தென்ன இலாபம்? இதில் வீட்டோ பவர் என்கிற கேவலமான சிஸ்டம் வேறு.

சர்வதே விதிகளுக்கு முரணாக மற்றொரு நாட்டில் இஸ்ரயேல் நாடு தங்கள் மக்களை குடியமர்த்துவது தவறு இல்லையா? இதில் இருக்கிற உள்நோக்கம் அறியாத அப்பாவிகளா மேற்கத்திய தலைகள்? மேற்கத்திய பத்திரிக்கைகள் அப்போது ஏன் குரல் கொடுக்க வில்லை? ஐ.நாவில் முறையிட்டும், ஐ.நா தலையிட்டும், கண்டித்தும் அதனை சட்டை செய்யாது அதையே திமிர் கொண்டு தொடர்வது சரியா? பாலஸ்தீன பொது மக்களை இராணுவத்தைக் கொண்டு பயமுறுத்துவது, மிரட்டுவது, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை ஏன் மேற்கு நாடுகள் தட்டிக் கேட்கவில்லை? இஸ்ரயேல் அவர்களின் அரக்க எண்ணத்தில் உருவான செல்ல குழந்தை என்பதால் தானே?

இந்த யூத தலைகளின் களவாணித்தன சூழ்ச்சி தெரியாமல் பண மோகத்தில் தங்கள் நிலங்களை விற்று ஒரு கட்டத்தில் நாட்டையே இழந்து இன்றைக்கு தங்கள் சொந்த நாட்டில் அகதிகள் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிற பாலஸ்தீனிய மக்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு வாழ்க்கைப் பாடம். வந்தாரை வரவேற்பது, உபசரிப்பது, விருந்தோம்பல் செய்வது ஒருநாள் தன் குடியையே கெடுக்க துணைபோகும் என்பதை யூதர்களின் மீட்பின் வரலாறு படிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் உணர வேண்டும்.

இந்த இரத்த வெறியோடு அலையும் மிருக குணம் கொண்ட தலைவர்களைக் கொண்டிருக்கிற ஒரு இனத்தை கடவுள் தன் மக்களாக தோ்ந்தெடுத்தார் என்பதை விட சிறந்த பொய்க் கட்டுரையை யாராவது எழுத முடியுமா? இந்த உலகத்தை போர் கொண்டு நாசமாக்க வித விதமான ஆயுதங்களை உருவாக்கி மற்ற நாடுகளுக்கு விற்று உலக அமைதியை சீர்குலைத்து அதில் காசு பார்க்கும் இந்த கயவர்கள் தான் உலகத்திற்கு மீட்பு கொண்டு வர கடவுள் தோ்ந்தெடுத்த புனித இனமாம். இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலை மதிப்பில்லாத சொத்தாம். அடுத்தவர்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டு சுகம் காண்பது தான் கடவுள் தோ்ந்தெடுத்த மக்களினம் செய்கிற வேலையா? இப்படி இரத்த சரித்தரமாய் எழுதப்பட்ட கதை தான் மீட்பின் வரலாறா?