புதுமை நடக்கவே முடியாது

புதுமை நடக்கவே முடியாது

புதுமை நடக்கவே முடியாது

அக்டோபர் 31, 2021

கடவுள் நம்பிக்கை

கடவுள் ஒலகத்துல அவதசரிச்சப்ப, கடவுளோட தூதர்கள் வந்தப்ப, பல புதுமைங்க நடந்துச்சே? அதுக்கு என்ன சொல்றீங்க?ன்னு நீங்க கேக்கலாம்.

கடவுளோட அவதாரங்கள் நடந்தப்ப, கடவுளோட தூதர்கள் வந்தப்ப புதும செஞ்சாங்கன்னு நம்புறேன். ஆனா, அவங்க மேஜிக் நடத்தலன்னு தா நா சொல்ல வாரேன். கடவுளோட அவதார புருஷர்கள் செஞ்ச புதுமைகள பாத்த ஒரு சிலர், நடந்தத பிற்கால சந்ததிக்கு தெரியப்படுத்த Magic மொழியில எழுதுனது தான், நாம மதங்களோட புனித புத்தகத்துல வாசிக்கிறோம்னு சொல்றேன்.

ஒத்த நிமிடத்துல ஒருத்தன் கூட துள்ளி ஓட முடியாதுங்க! அப்படி நடக்க துளியும் வாய்ப்பு இல்லங்க.

கடவுளா அவதரிச்சவங்க வாழ்ந்த காலத்துல நடந்த ஆச்சரியமான நிகழ்வுகள வாய்மொழி வழியா கேட்டு, அத எழுத்தாணி வச்சு இலையிலயோ, ஓலையிலயோ அல்லது எழுதுபொருள் வச்சு விலங்குகளோட தோல் மேலயோ எழுதுறப்ப, படிப்பறிவில்லாத சாதாரண மக்களும் படிச்சவங்க வாசிக்கிறப்ப அத கேட்டு ஈசியா புரிஞ்சிக்கிறுதுக்காக அவங்களோட காலத்துல புழக்கத்துல இருந்த ஒரு சமய வடிவ மொழி தான், அங்க சொல்லப்பட்டிருக்கிற மேஜிக்குன்னு சொல்றேன்.

அது அவுங்களோட காலத்துல வாழ்ந்த மக்களுக்காக எழுதுனதுங்க. நமக்காகவோ நம்ம காலத்துக்காகவோ எழுதுனது கிடையாது. நம்ம காலம் எப்படி இருக்கும்ன்னு கூட அவங்களுக்கு தெரிஞ்சிருக்காதே?

அது மட்டும் கெடயாதுங்க, நடந்ததா சொல்லப்படுற அந்த ஆச்சரியமான புதுமைங்கள, கடவுளா அவதரிச்சவங்களால அல்லது கடவுளோட தூதர்களால மட்டுந்தான் செய்ய முடியும். வேற யாராலயும் செய்ய முடியாது. நம்ம காலத்துல அப்படி ஒருத்தரு கூட இதுவர பொறந்து வரலன்னு சொல்றேன். கடவுள் அவதரிச்ச காலத்த தவிர, வேற எந்த காலத்திலயும் எவராலயும் புதுமைகள செய்யவே முடியாதுன்னும் சொல்றேன்.

கடவுள் அவதரிச்ச காலத்த தவிர, கடவுளோட தூதர்கள் வந்த காலத்த தவிர, மத்த காலத்துல புதும நடக்கவே நடக்காதுன்னு நா சொல்றத ஒங்களால ஏத்துக்க முடியாதுன்னு நல்லாவே தெரியும்!

கடவுள் அவதரிச்ச காலத்துலயும் கடவுளோட தூதர்கள் வந்தப்பயும் நடந்ததா நாம மதநூல்கள்ல வாசிக்கிற, அந்த புதுமைங்களும் Magic இல்ல, அது அறிவியலாலயே ஆச்சரியப்பட்டு வேற வழியில்லாம ஏத்துக்கிடுற இயற்கை விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்திருக்கும்னு நா சொல்ல வர்றதயும் ஏத்துக்கிட மாட்டீங்கன்னு தெரியும்!

ஒண்ணு தெளிவா புரிஞ்சிக்குங்க: அப்படித்தான் நடந்திருக்க முடியும்ங்கிறது என்னோட வாதமில்ல! மத சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களோட அறிவியல்பூர்வமான வாதம்.

இன்னமும் நா சொன்னது சொன்னது தான்னு சொல்லல! நாளக்கி ஒருவேள நா கண்ணால Magic நடக்குறதா பாத்தா நம்புறதுக்கு இன்னமும் தயாரா தாங்க இருக்கேன்.

நா ஒங்கள மாதிரி இப்படித்தான் நடந்ததுன்னு, இப்படித்தான் நடந்திருக்கும்ன்னு என்னமோ எல்லாத்தயும் நோ்ல இருந்து பாத்தது மாதிரி உடும்புப்பிடியா மூர்க்கத்தனமா பிடிச்சுட்டு தொங்கலீங்க! கடவுள் இருக்காருன்னு உண்மையிலேயே நம்புனா எதுக்காக இந்த மூடநம்பிக்க பயம்? அறிவியல பாத்தா பயம்?

நடந்தா ஏத்துக்கப் போறேன்! இதுல என்னங்க எனக்கு பிரச்சனை? நடந்துருக்க வாய்ப்பு இல்லங்கிற அறிவியல்பூர்வமான வாதத்த தானேங்க நா ஒங்ககிட்ட சொல்றேன்?

இப்பவும் இன்னமும் புதும நடக்கிறதா நீங்க நம்புனீங்கன்னா என்னோட கேள்விங்களுக்கு நீங்க பதில் சொல்லுங்க!

நம்ம ஏழைத் தாய்மாருங்களோட நீண்ட கால பிரச்சனைக்கு நெரந்தர முடிவு கிடச்சிராதா?ன்னு தானங்க எல்லாருமே போராடுறோம்? நம்ம ஊர்ல இருக்குற எல்லாரோட கஸ்டத்துக்கும் முடிவு வரனும். அது தானங்க நம்ம எல்லாரோட ஆசயும்?

நம்புனது நம்புனபடி பல்லாயிரம் வருசம் ஆகியும் நடக்கலன்னா, கேள்வி எழத்தானங்க செய்யும்? புதுப்பாத ஏதாவது கிடைக்குமா?ன்னு தேடி கண்டுபிடிக்க தானங்க தோணும்?