பதில் இல்லாத கேள்விகள்

பதில் இல்லாத கேள்விகள்

பதில் இல்லாத கேள்விகள்

நவம்பர் 02, 2021

கடவுள் நம்பிக்கை

புதும நடக்குங்கிறத நா ஏத்துக்கல! ஆனா, ஒங்க உடும்புப்பிடி பேச்சுக்காக ஏத்துக்கிட்டாலும் பல கேள்விங்களுக்கு ஒங்களால ஒங்களுக்கே திருப்தியான பதில சொல்ல முடியலியே?

யாரோ சொன்ன பதில தான இன்னமும் ஓட்ட Recorder மாதிரி சொல்லிகிட்டு இருக்கீங்க? புதும எதுக்குங்க எல்லாத்துக்கும் நடக்கல?ன்னு கேட்டா, அவுங்களுக்கு நம்பிக்க இல்லங்கிற உருப்படாத வாதத்த ரிப்பீட் பண்ணுவீங்க!

சரி, மறுபடியும் வாதத்துக்காக ஏத்துக்கிறேன். அப்ப நம்பிக்கன்னா என்னங்க? அதயாவது மழுப்பாம சொல்லிக் கொடுங்க!

கண்ணுக்குத் தெரியாம கடவுள் இருக்காரு. அவரு இருக்காருன்னு நம்புறது தா நம்பிக்கயா? இப்புடி நம்புனா கடவுளுக்கு சந்தோசம் வந்து கேட்டத கொடுத்துருவாரா?

இல்லன்னா, ஒரே ஒரு உண்ம கடவுள் தா இருக்காரு. அவர வழிபடனும். அவர வழிபட்டா தா புதும நடக்கும். இல்லன்னா கண்ண குத்திருவாரு. இப்படி சொல்றீங்களா? சரி விடுங்க, அதயும் மக்களுக்காக ஏத்துக்கிறேன்.

அந்த ஒரே ஒரு உண்மை கடவுள் யாரு?ன்னு தா சொல்லித் தொலைங்களேன்? நீங்க எல்லாருமே கோரசா எங்க கிட்ட வந்தா மட்டுந்தா புதும நடக்குன்னு சொல்றீங்க. ஆனா, எல்லாருமே புதும நடக்குன்னும் சொல்றீங்க!

ஒண்ணு எல்லாமே உண்மையா இருக்கனும். இல்லன்னா எல்லாமே பொய்யா இருக்கனும். சரி தானேங்க என்னோட வாதம்?

கடவுள் நம்பிக்க இல்லாமயாங்க கடவுள் இருக்குற எல்லா எடத்துக்கும் கடன வாங்கி போய்ட்டு வந்து கஷ்டப்படுறான்? கையில காதுல இருக்குறத அப்படியே பக்கெட்ல போடுறான்? கத்தி கத்தி தொண்ட தண்ணி வறண்டு கடவுள கூப்புடுறான்? ஒடம்ப கீறி வேகாத வெயில்ல வெத்துக்கால்ல நடந்து போறான்?

நீங்க செய்ய சொன்னதில அவன் எத தான் செய்யல, சொல்லுங்க? ஆனா இன்னமும் அடுத்த வேள என்ன ஆகுமோ?ங்கிற பயத்துல தானங்க காலத்த தள்ளிட்டே போறான் நம்மாளு?

இந்த கோயிலுக்கு போனா கண்டிப்பா நடக்கும்ன்னு ஒவ்வொருத்தரா சொன்னத கேட்டு கோயிலுக்கு பஸ்ஸ பிடிச்சுட்டு போன போக்குவரத்து செலவும், நடந்திராதா?ங்கிற நப்பாசையில உண்டியல்ல போட்ட பணத்துக்கான அவனோட கடனும் தாங்க அதிகமாயிருக்கு!

எப்படியாது கஷ்டம் போயிராதா? எம் புள்ளக்கி வேல கெடச்சிராதா? என்னோட கொழந்தைக்கு வியாதி போயிராதா? எம் மகளுக்கு கொழந்த கெடச்சிராதா? - இதானங்க நம்ம தாய்மார்களோட சிம்பிள் பிராத்தனை?

இந்த ஒலகத்த நாங்க காலத்துக்கும் ஆளனும்னா கேட்டாங்க? அடுத்த முற எப்படியாவது ஆட்சிய புடிக்கனும்னா வேண்டுனாங்க?

தகுதியில்லாத தத்திகளுக்கெல்லாம் கேட்டத கொடுக்குற ஒங்க கடவுளுக்கு நம்ம ஏழ தாய்மாருங்க மேல மட்டும் ஏங்க எரக்கமே வர மாட்டேங்குது?

கடவுள் எல்லா இடத்திலயும் இருக்காருன்னு நீங்க தான நம்ப சொல்றீங்க? ஆனா நீங்க நம்புற நம்பிக்கைக்கு எதிரா, கடவுள் இங்கின தா இருக்காரு. இங்கின தா புதும நடக்கும்?ன்னு கோயில வச்சு வியாபாரம் நடத்திறது சரியாங்க? இத தான் புதும செய்யிற ஒங்க கடவுள் Encourage பண்ணுறாரா?

ஒங்களுக்கு தனியா புதும நடந்துச்சு, நீங்க பொழச்சுக்கிட்டீங்க சரி, அப்ப இலங்கையில பாஸ்பரஸ் குண்டுல செத்துப்போன தமிழர்கள்ளல ஒருத்தனுக்கு கூட ஒங்க அளவுக்கு நம்பிக்க இல்லன்னு சொல்ல வாறீங்க. அப்படித்தானே?

ஜப்பான்ல குண்டு விழுந்தப்ப பொழச்சவங்க எல்லாமே கடவுள் நம்பிக்க உள்ளவங்க. மத்தவங்க எல்லாமே கடவுளால கைவிடப்பட்டவங்க. இப்படித்தானங்க நீங்க சொல்றத புரிஞ்சிக்கிட முடியும்?