ஒழுக்கம்

எது சரி, எது தவறு என்பதை கற்றுக் கொடுத்தது, இன்னமும் கற்றுக் கொடுப்பது மதங்கள் தானா? மதங்கள் இல்லை என்றால் தனி மனித ஒழுக்கம் சமூகத்தில் இருந்திருக்காதா? இருக்காதா?

இரவின் நிழல்

இரவின் நிழல்

பார்க்கிறவரின் உணர்வுக்குள் ஊடுருவிப் பாய்ந்து உண்மையின் வலியை உணர்த்தும் அற்புத கலையே திரைப்படங்கள். ஆனால், இளையோரின் உணர்ச்சிகளைத் தூண்டி கலை என்கிற ஏமாற்றுப் போர்வையில் காசு பார்க்க துடிக்கும் வக்கிரப் புத்தி கொண்ட ஓர் இயக்குநரின் பைத்தியக் கார படைப்பே சமீபத்தில் வெளியான இரவின் நிழல் என்கிற திரைப்படம்.
இயேசு வரலாற்று மனிதரா?

இயேசு வரலாற்று மனிதரா?

இயேசு வரலாற்று மனிதரா? கணவனை அறியாத ஒரு கன்னிப் பெண்ணின் வயிற்றில் கடவுளின் மந்திர சக்தியால் உருவானவரா? இயற்கை விதிகளுக்கு எதிரான பல மேஜிக்குகள் செய்ய முடிந்தவரா? மக்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக கடவுளால் புனித கொலை செய்யப்பட்டவரா?
இரக்கம் என்னும் அரக்கன்

இரக்கம் என்னும் அரக்கன்

ஏழைக்கு இரங்குகிறவன் இறைவனுக்கே கடன் கொடுக்கிறான் என்று சொல்வது சரியா? செய்கிற தர்மம் தலைமுறை காக்க உதவுமா? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியுமா? இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்கிற சொல்லாடல் சரியான வாதமா?
திராவிட தோழர் பாதிரியார்

திராவிட தோழர் பாதிரியார்

சிறுபான்மை மக்களிடையே மத வெறியைத் தூண்டி திராவிட ஊழல் அரசியல் வாதிகள் தொடர்ந்து கொள்ளையடிக்க மற்றும் சாராயம் காய்த்து விற்க உறுதுணையாக இருப்பது கிறிஸ்தவ ஆயர் பேரவை. இந்த ஆயர் பேரவை – திராவிடர் கூட நல்லுறவுக்காக 25 ஆண்டு காலம் முட்டுக் கொடுத்து வருகிற வேலையைக் கச்சிதமாக செய்து வரும் பாதிரியார் ஜெகத் கஸ்பாரைப் பற்றி இந்த கட்டுரையில் படிப்போம்.
Breaking News காமெடியர்கள்

Breaking News காமெடியர்கள்

பொழுது போக்கு வாழ்வின் ஓர் அங்கம். ஆனால் பொழுது போக்கும், பொழுது போக்கிகளுமே வாழ்க்கையானால் ஒரு சமூகம் எப்படி எல்லாம் சீரழியும் என்பதற்கு நடிகர், நடிகையரின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை ஒட்டு மொத்த தமிழகத்தின் 24 மணி நேர Breaking News ஆக போடும் ஊடகங்கள் இருக்கின்ற தமிழகமே உதாரணம்.
கோயில்கள் தேவையா?

கோயில்கள் தேவையா?

கடவுளே தனக்கான கோயிலைக் கட்ட சொன்னார் என்று பைபிள் சொல்கிறது. தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்ப படுகிற கடவுளுக்கு கோடிகளைக் கொட்டி கட்டப்படும் கோயில்கள் தேவையா? பசியால் வாடும் மக்களின் நடுவில் இந்த அருவருப்பு காரியத்தை செய்ய சொல்ல ஒரு கடவுளுக்கு மனம் வருமா?
வழக்கும், தீர்ப்பும்

வழக்கும், தீர்ப்பும்

ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்ய துணை போனவர்களை மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்வது சரியானதா? மன்னிப்பது குற்றங்களை பெருக செய்யாதா? பிரதமர் கொலை வழக்கிலேயே இப்படி நடந்தால் மற்றவர் வழக்கு என்னவாவது?
கூடன்குளமும், கடவுளும்

கூடன்குளமும், கடவுளும்

கூடன்குளம் போராட்டம் எளிய மக்களின் போராட்டம். கடவுள் துணையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் இடிந்தகரை என்னும் கடற்கரை வாழ் மக்கள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது ஏன்? பலரது வாழ்வை நரகமாக்கியது ஏன்? தன்னை நம்பி களத்தில் இறங்கிய அந்த மக்களை கடவுள் ஏன் கைவிட்டார்? கடவுள் எங்கே சென்றார்?
பொய் மூட்டைகள்

பொய் மூட்டைகள்

நாம் வாழும் தமிழகத்தில் திராவிடர் கூடம் பல பொய் மூட்டை கதைகளை எளியவரின் சிந்தனையில் தந்திரமாக திணித்து இருக்கிறது. அறிவியல், ஆன்மீகம், உளவியல் என்கிற அழகு மொழியில் அடுக்கடுக்காக உலா வரும் இந்த பொய் மூட்டைகள் சிலவற்றை திறந்து பார்ப்போமா?
சினிமா ஜீவிகள்

சினிமா ஜீவிகள்

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததா? நல்லவற்றை எடுத்துக் கொண்டு கெட்டவற்றை ஒதுக்கி விட்டால் வாழ்க்கை சரியாகி விடுமா? இருளிற்கு பின் ஒளி உண்டு என்றால் இருள் சாபக்கேடா? சாதனை படைக்க பல சோதனைகளைக் கடந்து தான் ஆக வேண்டுமா?
முடக்குவாத மார்க்கங்கள்

முடக்குவாத மார்க்கங்கள்

அறிவியல் வளராத மூட நம்பிக்கை நிறைந்த உலகில் ஒருவர் கற்பித்த சிந்தனைகளை, போதித்த மார்க்கங்களை அறிவியல் வளர்ந்திருக்கிற நம் காலத்திற்கான இலட்சிய சிந்தனைகளாக (Ideals) ஏற்றுக் கொள்ள முடியுமா? இது சிந்தனை முடக்குவாதம் இல்லையா? இவைகள் நம் அறிவியல் காலத்துக்கு ஒவ்வாத சிந்தனைகள் இல்லையா? நவீன காலத்துக்கு இந்த பழைய தோற்பைகள் எதற்கு?
உயிர்ப்பு கதைகள்

உயிர்ப்பு கதைகள்

இறந்தவர் உயிர் பெற்று எழுவது சாத்தியமா? கடவுள் நினைத்தால் தன் வசதிக்கு ஏற்ப இயற்கை விதிகளை மாற்றி எழுத முடியுமா? இறந்து போனவர்கள் மீண்டும் தோன்றி காட்சி தர முடியுமா? அந்த காட்சிகளை மனித கண்களால் பார்க்க முடியுமா? ஆவிகளின் உலகம் உண்மையா?