ஒற்றை மனிதன்
பிப்ரவரி 11, 2022
தமிழ் நாட்டு மக்கள், இங்குள்ள அரசியல்வாதி & ஆன்மீகவாதி யாருமே மாற போறதில்ல. தனி மனித சுதந்திரத்துல தலையிட முடியாத கடவுளால ஓட்டு போடுறவங்க மனச மாத்துறதும் முடியாத காரியம். பின்ன தோ்தல் நேரத்துல எப்படி கடவுளால மாற்றம் கொண்டு வர முடியும்?
ஆன்மீக அரசியல்
கடவுளோட ஞானம், ஒத்த ஓட்டு, வாக்கு, திராவிட கூட்டம்
அது எப்படி நடக்கும்னு பக்காவா கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரீலீஸ் பண்ற சினிமா படம் கிடையாதுங்க வாழ்க்கை. ஏன்னா அடுத்த நிமிசம் என்ன நடக்கும்னு கடவுளுக்கே தெரியாதே? ஒவ்வொரு நிமிசமும் புது ஸ்லேடுங்க. அதுல என்ன நடக்கனும்னு எழுதுறது அதிகாரத்துல இருக்குற திராவிடம் தானே? தமிழ்நாட்டுல கடவுளே ஒரு வரலாற்று கைதி தானே?
கடவுளும் ஒரு ஜோசியர் தான்னு தானே நாங்களே பேசுறோம். நடப்பதை தடுக்க முடியாதவர் கடவுள் – அப்படின்னு தானே நாங்க எழுதுறோம். ஆனா இதுக்குள்ளயும் மாற்றம் வரும்னு நம்புறது தான் எங்களோட கடவுள் நம்பிக்கை.
கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தா இப்படித்தான் செயல்பட முடியும்ன்னு அத்தன மத நூல்களயும் படிச்சிப் பாத்து தான் இத ஆன்மீகமா விளக்கிச் சொல்றோம். நாங்க சொல்றதுக்கு ஆதாரமே மத நிறுவனங்கள் போதிக்கிற கடவுள் நம்பிக்கையில இருக்குற பக்கா ஓட்டைகள் தான்.
தோ்தல் நேரத்துல மட்டுந்தான் கடவுளால ஏதாவது செய்ய முடியும், மத்த நேரத்துல கடவுளால நடக்கிறத வேடிக்கை மட்டுமே பாக்க முடியும்னு சொல்றதுக்கு காரணம், கடவுள் வச்சிக்கிட்டே வஞ்சனை செய்றவரு கிடையாதுங்க. அவரால செய்ய முடிஞ்சா இந்த நிமிசத்துலயே செஞ்சிருவாருங்க. மக்கள கஷ்டப்படுத்தி பாக்க அவருக்கு என்ன ஆசையாங்க?
அவரால இங்க நடக்கிற எதயுமே மாத்த முடியாதுங்க. யாருக்குள்ளயும் புகுந்து ஆடவும் முடியாதுங்க. யாரயும் உசுப்பி விட்டு பேசவும் முடியாதுங்க. யாரோட கண்ணுக்கும் அவரு தெரியவும் முடியாதுங்க. அவருக்கு தான் ஒடம்பே கிடையாதே? அது வெறும் சக்திங்க. அவரு வானத்துல அரண்மனைய கட்டி ராஜ வாழ்க்கை வாழ்ற மாதிரி பண்ற கற்பனை எல்லாம் நம்ம வியாபாரிங்களோட வெறும் உருட்டல் தான்.
கடவுளுக்கு ஏதாவது செய்யனும்ங்கிற கட்டாயம் ஒண்ணுமே இல்லீங்க. ஆனா மனசாட்சியோட ஓட்டு போட்டவங்க, மாற்றம் வர மாற்று கட்சிகளுக்கு வாக்கு செலுத்துனவங்க, எதையும் எதிர்பார்க்காம போராடுன கோமாளிங்க, உண்மைய பேசி பொய் வழக்குகள வாங்குன ஏமாளிங்க, இந்த ஒரு விழுக்காடு நல்ல சனத்துக்காக தான் கடவுளோட இத்தனை போராட்டமும்.
தமிழ்நாட்டு அரசியல்ல நடக்கிற அத்தன கேலிக் கூத்துகள பாத்த பிறகும் இந்த மக்கள பேசியே திருத்தியிரலான்னு நெனைக்கிற அறிவ பாத்து பரிதாப்பட தான் முடியும். அறத்தோடு தான் போராடுவோம்னு மல்லு கட்டி நிக்கிறத பாத்து ஆதங்கப்பட தான் முடியும். ஏன்னா இவங்களுக்கு இன்னமும் கள அரசியல் தெரியல, மக்களோட மனநிலையும் புரியல. திராவிடத்த எதிர்த்தா குண்டாஸ் தான்னு பட்டும் திருந்தல.
இந்த பகுத்தறிவு திராவிட கூட்டம் அதிகார பலத்தோட மூர்க்கத்துல இருக்கு. பத்தாததுக்கு சிறுபான்மை ஆன்மீகமும் முட்டுக் கொடுத்துட்டு இருக்கு. இத வீழ்த்துறது அறிவு பலத்தால முடியாது. ஆயுத பலத்தோட தோற்கடிக்க இது மன்னராட்சி காலமும் கிடையாது. மக்களாட்சியில போர்க்களம் சட்ட மன்ற தோ்தல் தான்.
அயோக்கியத்தன பகுத்தறிவ வச்சி ஆட்டம் காட்டுற இவங்கள அடக்க கடவுள் நம்பிக்கைங்கிற ஆன்மீக பலம் வேணும். அது இப்ப மாற்று அரசியல கொண்டு வர களத்துல இறங்கி வேலை செய்ற ஒத்த சாமியாரு கிட்ட கூட கிடையாது. ஏன்னா கடவுள் நம்பிக்க இருந்திருந்தா களத்துக்கே வந்திருக்க மாட்டாங்களே?
ஒட்டு மொத்த மக்கள ஒன்பது தோ்தல் வந்தாலும் மாத்துறது முடியாத காரியம். இது தான் யதார்த்த அனுபவம். ஆனா ஒருத்தர வச்சி ஒரே தோ்தல்ல சாதி, மதம், இனம், கட்சின்னு பிரிஞ்சி கிடக்குற அத்தன மக்களயும் சுண்டி இழுத்து மாற்றத்த நிகழ்த்திக் காட்டுற பலம் தான் கடவுளோட ஞானம். அதுக்கான வரலாற்று ஆதாரங்கள் தான் இயேசு, கிருஷ்ணர், முகம்மது நபி இவங்களோட வாழ்க்கை.
மூர்க்கமான அதிகாரம், சகுனிகளோட கள்ளாட்டம், கூட இருந்து செய்ற துரோகம், அத்தனயயும் ஒடைச்சி எறிஞ்சி ஒரு புது வரலாத்தையே இவங்களால எழுத முடிஞ்ச ஆச்சரியம் தான் கடவுளோட ஞானம் செயல்படுற விதம். அது தான் கடவுளோட அவதாரமா மக்கள் அவங்கள நம்புறதுக்கு காரணமா அமைஞ்சது.
அந்த ஒத்த ஆளு நம்ம காலத்துல எங்க இருக்காரு? எப்ப வருவாரு? அவருக்கு கடவுள் எப்படி உணர்த்துவாரு? களத்துல நிக்க அவர கடவுள் எப்படி தயாரிப்பாரு? இவ்வளவு அதிகார பலத்துல இருக்குற திராவிடத்த எதிர்த்து அவரால நிக்க முடியுமா? ஆன்மீக அயோக்கியங்கள வீழ்த்த முடியுமா?
தனியொரு ஆளா அத்தன மக்களயும் மாத்த முடியுமா? ஒட்டு மொத்த ஓட்டயும் வாங்கி வெற்றி பெற முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா? ஒத்த ஓட்டு மாதிரி ஒற்றை மனிதன் கான்செப்டும் காமெடியால்ல இருக்கு?ன்னு நீங்க மனசுக்குள்ள பேசுறது எங்க காதுக்கும் கேட்குது.
ஆனா இத வெறும் கற்பனையில எழுதல. எல்லா மத நூலயும் படிச்சி பாத்து அதுல வெளிப்பட்ட கடவுள் அனுபவத்த ஆராய்ஞ்சி அறிஞ்சி ஊகமா சொல்றோம். இத நீங்க நம்புறதுக்காக சொல்லல. ஒருவேளை நடந்தா, நடந்த பிறகு நம்புறதுக்கான ஆதாரமா காட்டவே பதிவு செய்றோம்.
அந்த ஒத்த ஆள, கொண்டு வர வேண்டிய காலத்துல, கொண்டு வர வேண்டிய எடத்துக்கு, கொண்டு வர வேண்டிய நேரத்துல நிறுத்துற வேலய கரெக்டா செய்றவரு தான், மக்களாட்சியில செயல்படுற கடவுளா இருக்க முடியும்னு நாங்க ஆணித்தரமா நம்புறோம்.